EPS Pension Calculation: ஊழியர்களுக்கு மாத சம்பளம் எவ்வளவு முக்கியமோ, பணி ஓய்வுக்கு பிறகு ஓய்வூதியதாரர்களுக்கு மாதா மாதம் கிடைக்கும் ஓய்வூதியமும் அதே அளவு முக்கியமாகும். ஆனால், ஓய்வூதியம் எப்படி கிடைக்கிறது? யாருக்கு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்? இது குறித்து ஊழியர்களுக்கு பல வித கேள்விகள் இருப்பதுண்டு.
ஊழியர்கள் மாதா மாதம் தங்கள் ஊதியத்தில் 12% தொகையை இபிஎஃப் கணக்கில் செலுத்துகிறார்கள். அதே அளவு தொகையை நிறுவனமும் டெபாசிட் செய்கிறது. ஊழியர்கள் செலுத்தும் பங்களிப்பு முழுதாக EPF கணக்கில் செல்கிறது. ஏனால், நிறுவனம் அளிக்கும் பங்களிப்பில் ஒரு தொகை 3.67% EPF கணக்கிற்கும் ஒரு பகுதி 8.33% EPS கணக்கிற்கும் செல்கிற்றது. இந்த EPS கணக்கில் சேரும் தொகையிலிருந்து ஓய்வூதியம் அளிக்கப்படுகின்றது.
ஒரு ஊழியர் ஒரு நிறுவனத்தில் 10 ஆண்டுகள் பணியாற்றியிருந்தால், ஓய்வுபெறும்போது ஓய்வூதியத்தைப் பெறத் தகுதியுடையவர் ஆகிறார். இங்கே நாம் குறிப்பிடுவது, EPFO-வின் கீழ் செயல்படும் 'ஊழியர் ஓய்வூதியத் திட்டம்' (Employees' Pension Scheme - EPS) ஆகும்; இது மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட ஓய்வூதியத் தொகையை வழங்குகிறது.
இந்தத் திட்டத்தின் விவரங்கள், ஓய்வூதியம் எப்போது கிடைக்கத் தொடங்கும், எவ்வளவு தொகை கிடைக்க வாய்ப்புள்ளது மற்றும் இதற்கான தகுதிகள் என்னென்ன என்பது குறித்து விரிவாகக் காணலாம்.
'ஊழியர் ஓய்வூதியத் திட்டம்' (EPS) EPFO-வால் நவம்பர் 16, 1995 அன்று தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், ஒரு ஊழியர் பணியாற்றிய கால அளவைப் பொறுத்தே ஓய்வூதியத் தொகை தீர்மானிக்கப்படுகிறது.
இபிஎஸ் திட்டத்தின் கீழ், ஒரு ஊழியருக்குக் குறைந்தபட்சம் மாதம் ₹1,000 ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. இந்த குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையை ₹7,500-ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
EPF உறுப்பினர்களுக்கு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்? அதற்கான கணக்கீட்டை இங்கே காணலாம்:
ஒரு ஊழியருக்கான ஓய்வூதியம் இந்த சூத்திரத்தின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகிறது.
மாதாந்திர ஓய்வூதியம் = (ஓய்வூதியத்திற்குரிய ஊதியம் × ஓய்வூதியத்திற்குரிய பணிக்காலம்) / 70
ஓய்வூதியத்திற்குரிய ஊதியம் (Pensionable Salary) = கடந்த 60 மாதங்களுக்கான உங்கள் ஊதியத்தின் சராசரி.
ஊழியர்களுக்கு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும் என்பதை ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்துகொள்ளலாம். ஒரு ஊழியரின் ஊதியம் ரூ.15,000 என்றும் அவர் ஒரு நிறுவனத்திம் 10 ஆண்டுகள் பணிபுரிந்திருகிறார் என்றும் வைத்துக்கொள்வோம். அவருக்கு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்க வாய்ப்புள்ளது?
ஓய்வூதியக் கணக்கீடு
சம்பளம்: ரூ.15,000
சர்வீஸ்: 10 ஆண்டுகள்
மாதாந்திர ஓய்வூதியம் = (15,000 × 10) / 70 = ₹2,143
சுருக்கமாகச் சொன்னால், ஒரு ஊழியர் ஒரு நிறுவனத்தில் 10 ஆண்டுகள் பணியாற்றியிருந்து, அவரது ஓய்வூதியத்திற்குரிய ஊதியம் ₹15,000 ஆக இருந்தால், 58 வயது முதல் அவருக்கு மாதம் ₹2,143 ஓய்வூதியமாகக் கிடைக்கும். சம்பளமும், ஆண்டுகளும் அதிகரித்தால், ஓய்வூதியத் தொகையும் அதிகரிக்கும்.