Tamil News LIVE Updates : தமிழகம் முழுவதும் இன்று கந்த சஷ்டி விழா கோலாகலமாக தொடங்கி இருக்கிறது. இதையடுத்து, முதல்வர் விஜய் நாளை பனையூரில் எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை நடத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆந்திர துணை முதல்வரான பவன் கல்யாண், தன்னுடைய 3வது மனைவியை பிரிவதாக அறிவித்திருக்கிறார். இதைத்தொடர்ந்து இன்னும் வேறு என்னென்ன முக்கிய செய்திகள் இருக்கின்றன என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
10 Nov 2026 15:01 IST
PM Shram Yogi Maandhan Yojana: மாதம் ரூ.3,000 ஓய்வூதியம்
அமைப்புசாரா துறையில் பணிபுரிபவர்கள் பெரும்பாலும் தங்கள் முதுமைக்காலத்தைப் பற்றி கவலைப்படுகிறார்கள். அவர்களின் பிற்கால வாழ்க்கை சிரமமின்றி அமைவதை உறுதிசெய்ய, மத்திய அரசு ‘பிரதம மந்திரி சிரம யோகி மான்தன் யோஜனா’ என்ற திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், தகுதியுடைய நபர்களுக்கு அவர்கள் 60 வயதை எட்டும்போது மாதம் ₹3,000 ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது... (மேலும் படிக்க)
10 Nov 2026 13:48 IST
CM Vijay | ஏரி இணையதளம் தொடக்கம்!
நீர்நிலைகள் புனரமைப்பில் தன்னார்வல்கர்களை ஊக்குவிக்க நீர்வளத்துறையின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள ஏரி இணையதளத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய். நீர்நிலைகள் புனரமைப்புக்கான தடையின்மை சான்றிதழை பெற ‘ஏரி’ எனும் பெயரில் இணையதளம் தொடக்கம்.
10 Nov 2026 13:58 IST
Jobs Update: 10th, ITI முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு
ரயில்வே துறையில் அரசுப் பணியைப் பெற விரும்பும் இளைஞர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது. வடக்கு ரயில்வே (Northern Railway) 4,651 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, ஐடிஐ (தொழில்துறை பயிற்சி நிறுவனம்) சான்றிதழ் பெற்ற, 15 முதல் 24 வயதுக்குட்பட்ட விண்ணப்பதாரர்கள் நவம்பர் 11 முதல் டிசம்பர் 11, 2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்... (மேலும் படிக்க)
10 Nov 2026 13:48 IST
India News: தூங்கியே சம்பாதித்த மும்பை பெண்
மும்பையைச் சேர்ந்த பெண் தூங்குவதையோ ஒரு அரிய வாய்ப்பாக மாற்றி, 60 நாட்களில் ரூ.9.63 லட்சம் சம்பாதித்துள்ளார். ரொக்கப்பரிசு மற்றும் இலவச சுற்றுலாவை வென்று, அப்பெண் சாதனை படைத்துள்ளார். இந்த வினோத நிகழ்வு குறித்து இந்த தொகுப்பில் முழுமையாக பார்ப்போம். (மேலும் படிக்க)
10 Nov 2026 11:57 IST
Minister Keerthana | டாடா நிறுவனத்தில் 3 பேர் உயிரிழப்பு! அமைச்சர் கீர்த்தனா இரங்கல்
கிருஷ்ணகிரி, ஓசூரில் உள்ள டாட்டா நிறுவனத்தில் டாக்ஸிக் வாயுவை நுகர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்; இந்த சம்பவத்திற்கு அமைச்சர் கீர்த்தனா இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
10 Nov 2026 13:23 IST
EPFO Update: EPF கணக்கில் உள்ள பிழைகளை திருத்த புதிய வசதி
பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்கில் உள்ள தகவல்களில் சிறிய பிழை இருந்தாலும், அது பிற்காலத்தில் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக, நீங்கள் பிஎஃப் (PF) தொகையை எடுக்க முயலும்போதோ, ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்கும்போதோ அல்லது பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) பிற சேவைகளைப் பெற முயலும்போதோ, இத்தகைய தவறுகள் உங்கள் கோரிக்கைகளைத் தடுத்து நிறுத்தக்கூடும்... (மேலும் படிக்க)
10 Nov 2026 12:33 IST
Namo Yamuna River Safari : டெல்லியின் முதல் ‘ரிவர் சஃபாரி’
பல மாதக் காத்திருப்புக்குப் பிறகு, டெல்லி-என்சிஆர் (Delhi-NCR) பகுதி தனது சொந்த ‘ரிவர் சஃபாரி’ (River Safari) திட்டத்தைப் பெறத் தயாராகிவிட்டது! தலைநகரில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ள ‘நமோ யமுனா ரிவர் சஃபாரி’ (Namo Yamuna River Safari) திட்டம், இன்று செவ்வாய்க்கிழமை, நவம்பர் 10-ஆம் தேதி தொடங்கி வைக்கப்படவுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம், மக்கள் இனி யமுனா நதியில் படகுப் பயணத்தை அனுபவிக்க முடியும். தற்போதைய நிலையில், சோனியா விஹாரில் உள்ள வஜிராபாத் காட் (Wazirabad Ghat) மற்றும் ஜகத்பூரில் உள்ள சனி மந்திர் காட் (Shani Mandir Ghat) ஆகிய இடங்களுக்கு இடையே இந்தச் சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது. சுமார் 5 முதல் 6 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்தப் பயணம், ஏறக்குறைய 35 முதல் 40 நிமிடங்கள் வரை நீடிக்கும்.
10 Nov 2026 12:29 IST
Southern Railway News: சபரிமலைக்கு சிறப்பு ரயில்கள்
சபரிமலை பக்தர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து இரண்டு மாதங்களுக்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையில் கொல்லத்திற்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. (மேலும் படிக்க)
10 Nov 2026 12:13 IST
TN Bar Federation: முதலமச்சரின் முன்னெடுப்பை வரவேற்கிறோம்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கூட்டமைப்பு (Bar Federation) மற்றும் தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கம் ஆகியவை, சென்னையில் உச்ச நீதிமன்றத்தின் மண்டல அமர்வை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிய தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களின் முன்னெடுப்பை வரவேற்றுள்ளன.
"பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில், நாட்டின் தென்பகுதிக்குச் சேவை செய்யும் வகையில் சென்னையில் உச்ச நீதிமன்றத்தின் மண்டல அமர்வை அமைக்க வேண்டும் என்ற வழக்கறிஞர்கள் மற்றும் வழக்காடும் பொதுமக்களின் நீண்டகாலக் கோரிக்கையை நமது முதலமைச்சர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்" என்று அந்தச் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
10 Nov 2026 12:00 IST
Ghaziabad Crime: கொலை செய்த முகநூல் நண்பன்
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில், ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான ஒரு நபருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, பெண் ஒருவர் செங்கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது... (மேலும் படிக்க)
10 Nov 2026 11:34 IST
Cinematographer Dies : மலையாள ஒளிப்பதிவாளர் மரணம்!
பிரபல மலையாள ஒளிப்பதிவாளர் ஷாஜி குமார், உயிரிழந்துள்ளார். இவர், கொச்சியில் ஷுட்டிங் நடந்து கொண்டிருக்கும் போது மயங்கி கீழே விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
10 Nov 2026 11:15 IST
TTDC Tour News : 4 நாட்கள் அறுபடை வீடுகள் டூர்
கந்த சஷ்டி விரதம் இன்று துவங்கி உள்ள நிலையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அறுபடை வீடு சுற்றுலா தொகுப்பை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் 4 நாட்களில் அறுபடை வீடுகளில் தரிசனம் செய்யலாம். (மேலும் படிக்க)
10 Nov 2026 11:10 IST
TN Crime News: தமிழக அரசின் வங்கி கணக்குகள் ஹேக்
தமிழக அரசின் வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.22 கோடி ஆன்லைன் முறையில் திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊராட்சி ஒன்றியங்களுக்கு நிதி விடுவிடுப்பதற்காக அரசையும் வங்கியையும் இணைக்கும் வகையில், உருவாக்கப்பட்ட போர்ட்டலை ஹேக் செய்து திருட்டு நடந்துள்ளது. (மேலும் படிக்க)
10 Nov 2026 11:04 IST
TN Septic Tank Death: விஷவாயு தாக்கியதால் நடந்த விபரீதம்
தமிழ்நாட்டின் ஓசூரில் உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் (TEPL) தொழிற்சாலையில், கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கியதில் மூன்று பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர்... (மேலும் படிக்க)
10 Nov 2026 10:41 IST
Special Trains | சபரிமலைக்கு சிறப்பு ரயில்!
சபரிமலை பக்தர்களின் வசதிக்காக, சென்னை முதல் கொல்லம் இடையே 3 மாதங்களுக்கு சிறப்பு ரயில் இயக்கம். சென்னை சென்ட்ரல் முதல் கொல்லம் இடையே வாரந்தோற்றும் திங்கட்கிழமையன்ற்று சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். கொல்லம் சென்னை செண்ட்ரல் இடையே வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையன்று சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது.
10 Nov 2026 10:04 IST
El Nino : எல் நினோவால் அதிகரிக்கும் வெப்பம்!
நவம்பர் 9ஆம் தேதியான நேற்று, துருக்கியில் ஐநா காலநிலை மாற்ற மாநாடு (COP31) நடைப்பெற்றது. இதில், பல அதிர்ச்சிக்குரிய ரிப்போர்ட்களை காண்பித்து ஐநா அதிகாரிகள் பேசியுள்ளனர். இந்த மாநாட்டில் அவர்கள் பேசியது என்ன என்பது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம். (மேலும் படிக்க)
10 Nov 2026 09:52 IST
Gold Rate : தங்கத்தின் விலை குறைந்தது!
1 கிராம் தங்கத்தின் விலை ரூ.45 குறைந்து ரூ.13,210ஆக இருக்கிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.360 குறைந்து ரூ.1,05,680ஆக இருக்கிறது.
10 Nov 2026 09:22 IST
Pawan Kalyan : 3வது மனைவியிடமிருந்து விவாகரத்து பெறும் பவன் கல்யாண்!
ஆந்திர அரசியலின் முக்கியப்புள்ளியாகவும், தெலுங்கு சினிமாவின் முக்கிய ஸ்டாராகவும் இருக்கிறார் பவன் கல்யாண். இவர், தன்னுடைய 3வது மனைவியை பிரிவதாக அறிவித்திருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம். (மேலும் படிக்க)
10 Nov 2026 09:21 IST
CM Vijay | முதல்வர் விஜய் முக்கிய முடிவு..
கள்ளக்குறிச்சி பெண் கலெக்டருக்கு, தவெக எம்.எல்.ஏ ஒருவர் அபாச மெசேஜ் அனுப்பியதாக வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாக திமுக திமுக துணை பொதுச்செயலாளரான கனிமொழி எம்.பி பதிவிட்டிருக்கிறார். இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம். (மேலும் படிக்க)
10 Nov 2026 09:20 IST
Kandha Sashti : கந்த சஷ்டி விழா ஆரம்பம்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி திருவிழா இன்று யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. பக்தர்கள், கடலில் புனித நீராடி தங்களின் விரதத்தை தொடங்கினர்.
யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.