SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State
LIVE NOW

Tamil News LIVE : முரசு புயல் அப்டேட், தமிழ்நாடு வானிலை நிலவரம், டாஸ்மாக் விதிமுறைகள் - இன்றைய முக்கிய செய்திகள்

Tamil News LIVE Updates: முரசு புயல் கரையைக் கடந்தது, வடகிழக்கு பருவமழையையொட்டி மாநிலம் முழுவதும் பல மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு என்பது உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்...

Written By Karthikeyan Sekar
Published: Nov 03, 2026, 09:42 AM IST | Updated: Nov 03, 2026, 11:29 AM IST
Join

Tamil News LIVE Updates: முரசு புயல் கரையைக் கடந்தாலும், வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் இன்று பரவலாக மழைக்கு வாய்ப்பு, கள்ளக்குறிச்சி, சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு, டாஸ்மாக் விதிமுறைகளில் முக்கிய மாற்றம் என்பது உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகளின் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்....
 

03 Nov 2026, 11:29 AM

Nepal Helicopter Crash: கதிகலங்க வைக்கும் வீடியோ

நேபாளத்தில் எவரெஸ்ட் மலைக்கு அருகில், அதிக உயரத்தில் அமைந்த விமான மையத்தில், தரையிறங்க முயன்ற இரண்டு ஹெலிகாப்டர்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாக நேபாள காவல்துறை 'எக்ஸ்' (X) தளத்தில் தெரிவித்துள்ளது.. (மேலும் படிக்க)

03 Nov 2026, 9:48 AM

Gratuity Increase: 3% அகவிலைப்படி உயர்வால் எகிறும் கிராஜுவிட்டி

ஓய்வுக்கால பணிக்கொடையைக் கணக்கிடும்போது அகவிலைப்படியும் ஊதியத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படுவதால், இந்த உயர்வு காரணமாக, திருத்தப்பட்ட தேதிக்குப் பிறகு, அதாவது ஜூலை 2026-க்கு பிறகு ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு அதிகத் தொகை கிடைக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், அனைவரும் கூடுதலாக ₹50,000 பெறுவார்கள் என்று கருத முடியாது... (மேலும் படிக்க)

03 Nov 2026, 9:49 AM

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்!

6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளி மாணவர்களிடம் வினாத்தாள் கட்டணம் வசூலிக்கக் கூடாது என அனைத்துப் பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. (மேலும் படிக்க)

03 Nov 2026, 9:46 AM

புது வீடு கட்டுபவர்கள் இனி இதை செய்யாவிட்டால் சிக்கல்!

Tamil Nadu Government New House Rules 2026: புது வீடு கட்டுபவர்கள் மழை நீரை சேகரிக்க தேவையான கட்டமைப்புகளை அமைப்பது குறித்த புதிய விதிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (மேலும் படிக்க)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.

ZEENEWS TRENDING STORIES