• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /திருச்சி
  • /PM Yasasvi திட்டம்: ரூ.1.25 லட்சம் உதவித்தொகை எப்படி பெறலாம்? ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

PM Yasasvi திட்டம்: ரூ.1.25 லட்சம் உதவித்தொகை எப்படி பெறலாம்? ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

PM Yasasvi Scheme: பிரதம மந்திரி யசஸ்வி உதவித்தொகை திட்டம் குறித்து திருச்சி மாவட்ட நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நவம்பர் 15ஆம் தேதி வரை உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளார். எனவே, எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது குறித்த முழு விவரத்தை இந்த தொகுப்பில் பார்ப்போம்.

Written ByUmabarkavi K
Published: Nov 12, 2026, 04:16 PM IST|Updated: Nov 12, 2026, 04:26 PM IST
joinshare
PM Yasasvi திட்டம்: ரூ.1.25 லட்சம் உதவித்தொகை எப்படி பெறலாம்? ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
ரூ.600 கோடி மதிப்பிலான பங்குகள்... திரும்பப் பெற Zee Entertainment நிறுவனம் முடிவு

ரூ.600 கோடி மதிப்பிலான பங்குகள்... திரும்பப் பெற Zee Entertainment நிறுவனம் முடிவு

2

Explained : தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் வரப்போகுதா? மழை பொய்த்தால் இதுதான் நிலை..

3

CM விஜய்யின் சிறப்பு வட்டி தள்ளுபடி... வீடு, மனை ஒதுக்கீடுதாரர்களுக்கு ஜாக்பாட்

4

செஞ்சியில் மீண்டும் அதிர்ச்சி! 7 வயது சிறுமியை கடத்த முயற்சி.. தப்பித்தது எப்படி? இருவர் கைது

5

என்விடியா CEO விவகாரத்தில் கிளம்பும் பூதம்: இரண்டாவது கள்ள உறவு, மகன்-மகளின் சம்பளம்... பறிபோகும் பதவி?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

PM Yasasvi Scheme: பிரதமர் யசஸ்வி என்பது மாணவர்களுககு உயர் கல்வி படிப்பதற்கு உதவித்தொகை வழங்கும் திட்டமாகும்.  சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டம் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

இதுகுறித்து வெளியான அறிவிப்பின்படி, ஒன்றிய அரசால் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவ/மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் क心 2 L (PM YASASVI-Top Class School Education in Schools for OBC, EBC & DNT students) செயல்படுத்தப்பட்டு வருகிறது.

2026 27 ஆம் ஆண்டிற்கு தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (National Scholarship Portal) அறிவிக்கப்பட்டுள்ள (Top Class School) சிறந்த செயல்பாடு கல்வி நிறுவனம் (100% தேர்ச்சி பெற்றுள்ள) பள்ளிகளில் நடப்பாண்டில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் தமிழகத்தைச் சார்ந்த தகுதியான மாணவ / மாணவியர்கள் கல்வி உதவித்தொகை (புதியது) திட்டத்தில் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (https://scholarships.gov.in) விண்ணப்பிக்கலாம்.

மேலும் படிக்க: திருச்சி விவசாயிகளுக்கு ரூ.1.20 லட்சம் வரை மானியம்! ஆழ்துளை குழாய் கிணறு அமைக்கலாம்

ரூ.1.25 லட்சம் உதவித்தொகை

இத்திட்டத்தில் கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணமாக ஆண்டொன்றுக்கு அதிகபட்சமாக 9 10ஆம் வகுப்பு பயில்பவருக்கு ரூ.75,000/- மற்றும் 11-12 ஆம் வகுப்பு பயில்பவருக்கு ரூ.1,25,000/- வரை உதவித்தொகையாக ஒன்றிய அரசால் வழங்கப்படும். 30% மாணவியர்களுக்கு இத்திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நிபந்தனைகள்

  • மாணவ/மாணவியர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC), பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் (EBC) அல்லது சீர்மரபினர் (DNT) பிரிவைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.
  • வருமான வரம்பு: குடும்பத்தில் மொத்த ஆண்டு வருமானம் ரூ.2.50இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • 2025-26 ஆம் கல்வியாண்டில் 100% தேர்ச்சி பெற்று தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இடம் பெற்றுள்ள பள்ளிகளில் பயில்பவராக இருத்தல் வேண்டும்

மேலும் படிக்க; ரூ.5,000 வரை ரொக்கப் பரிசு: திருச்சியில் நவம்பர் 26-ல் தமிழ் பேச்சுப்போட்டி - பங்கேற்பது எப்படி

எப்படி விண்ணப்பிக்கலாம்?

இத்திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் புதியதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியர்கள், தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (https://scholarships.gov.in) தங்களது கைப்பேசிஎண் (Mobile number) மற்றும் ஆதார் விவரங்களை உள்ளீடு செய்தால் OTR Number & Password பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணிற்கு வரப்பெறும்.

மேற்படி OTR Number பயன்படுத்தி 2026-27 ஆம்ஆண்டிற்கான கல்வி உதவித்தொகைக்கு உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து புதியது (Fresh Application) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், பட்டியலிடப்பட்ட பள்ளிகளின் விவரங்களை தலைமையாசிரியர்கள், தொடர்புடைய முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர்களை கொண்டு தொடர்பு பெறலாம், மேலும், https://www.bcmbcmw.tn.gov.in/welfschemes.htm  என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்கள் அறிந்திட National Scholarship Portal (https://scholarships.gov.in)  மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையதளத்தினை  (https://socialjustice.gov.in) அறிந்து கொள்ளலாம். தகுதியான மாணவ/மாணவியர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் பிரத்திக் தாயள் அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க: திருச்சி : 2 சிறார்கள் வெட்டிக்கொலை! பழிக்குப்பழியா? போலீஸ் விசாரணை..
 

Add Zee News as a Preferred Source
TAGS:
TN Govt Schemes