டெல்லியில் பாகிஸ்தான் ஹை கமிஷன் வெளியே இருந்த சில கட்டமைப்புகள் மற்றும் தடுப்புகளை இந்திய அதிகாரிகள் JCB மூலம் அகற்றியுள்ளனர். இவை அங்கீகரிக்கப்பட்ட எல்லைக்கு வெளியே இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்லாமாபாத்தில் இந்திய ஹை கமிஷன் வெளியே பாதுகாப்புத் தடுப்புகள் அகற்றப்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை நடந்துள்ளது. இதற்கிடையே காஷ்மீர் குறித்து அமெரிக்க தூதர் தெரிவித்த கருத்துக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்திருப்பதும் இந்தியா-பாகிஸ்தான் தூதரக உறவில் கூடுதல் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.