8வது ஊதியக் குழு: இனி ஒவ்வொரு ஆண்டும் 6% ஊதிய உயர்வு? அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்
8th Pay Commission: இந்தச் சூழலில், ஊழியர் சங்கமான 'பாரதிய பிரதிரக்ஷா மஸ்தூர் சங்' (BPMS), ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. இவை நிறைவேற்றப்படால் ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் அது ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும்.
8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களும் 8வது ஊதியக் குழுவின் அடுத்த கட்ட அப்டேட்களுக்காக காத்திருக்கிறார்கள். ஊதியக் குழு அமைக்கப்பட்டதிலிருந்தே, ஊழியர்கள் தங்கள் ஊதியம், ஓய்வூதியம் மற்றும் படிகள் உயரும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் ஒரு முக்கியமான செய்தி வெளியாகியுள்ளது.
பாரதிய பிரதிரக்ஷா மஸ்தூர் சங் முன்வைத்த கோரிக்கைகள்
இந்தச் சூழலில், ஊழியர் சங்கமான 'பாரதிய பிரதிரக்ஷா மஸ்தூர் சங்' (BPMS), ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. இவை நிறைவேற்றப்படால் ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் அது ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும். BPMS முன்வைத்துள்ள 3 முக்கிய கோரிக்கைகள்:
- Annual Increment: ஆண்டு ஊதிய உயர்வை தற்போதைய 3 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக உயர்த்த வேண்டும்,
- Old Pension Scheme: பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் அமல்படுத்த வேண்டும்,
- DA Merger: அகவிலைப்படியில் (Dearness Allowance) 50 சதவீதத்தை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும்
இந்தக் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால், ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வுக்கால பலன்களில் பெரும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகள்
நவம்பர் 18, 2024 அன்று, 8வது ஊதியக் குழுவின் தலைவருடன் நடைபெற்ற இரண்டாம் கட்ட ஆலோசனையின் போது, 'பாரதிய பிரதிரக்ஷா மஸ்தூர் சங்' (BPMS) தனது கோரிக்கைப் பட்டியலைச் சமர்ப்பித்தது. பாதுகாப்பு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட, பாதுகாப்புத் துறை ஊழியர்களின் இந்த அகில இந்திய கூட்டமைப்பு, ஊதியக் கட்டமைப்பு, ஓய்வூதியம், காப்பீடு மற்றும் பிற சலுகைகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது.
ஆண்டு ஊதிய உயர்வை 3 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக உயர்த்துதல்
தற்போது, மத்திய அரசு ஊழியர்களுக்கு அவர்களின் அடிப்படை ஊதியத்தில் ஆண்டுதோறும் 3 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. இதை 6 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று BPMS கோரியுள்ளது. பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதையும், ஊழியர்களின் தேவைகள் பெருகி வருவதையும் சுட்டிக்காட்டும் அந்தச் சங்கம், தற்போதைய ஆண்டு ஊதிய உயர்வு விகிதத்தை மாற்றியமைப்பது அவசியம் என்று வாதிடுகிறது.
மேலும், ஊழியர்களின் ஊதியத்தில் கணிசமான உயர்வு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், தகுந்த ஃபிட்மெண்ட் ஃபாக்டரை (fitment factor) நிர்ணயிக்குமாறும் ஊதியக் குழுவிடம் அந்தச் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வர கோரிக்கை
ஓய்வூதியதாரர்களுக்கு முழுமையான நன்மைகளை வழங்கும் வகையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அனைவருக்கும் மீண்டும் அமலுக்கு கொண்டு வர வேண்டும் என BPMS கோரியுள்ளது. இதன் மூலம் ஓய்வூதுயதாரர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம் கிடைக்கும் என அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
அகவிலைப்படியில் (DA) 50 சதவீதத்தை அடிப்படை ஊதியத்துடன் இணைக்கும் முன்மொழிவு
அகவிலைப்படி (DA) குறித்தும் BPMS ஒரு முக்கியமான ஆலோசனையை வழங்கியுள்ளது. தற்போதுள்ள அகவிலைப்படியில் 50 சதவீதத்தை ஊழியர்களின் அடிப்படை ஊதியம் மற்றும் ஓய்வூதியத்துடன் இணைக்க வேண்டும் என்று அந்தச் சங்கம் முன்மொழிந்துள்ளது. இவ்வாறு செய்வதன் மூலம், ஊதியம் மற்றும் ஓய்வூதியத்திற்கான அடிப்படை அளவு உயரும். இருப்பினும், இந்த முன்மொழிவு குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ முடிவும் எடுக்கப்படவில்லை.
காப்பீட்டுத் தொகையை உயர்த்துவதற்கான கோரிக்கை
இவை தவிர CGEGIS-ன் கீழ் வழங்கப்படும் காப்பீட்டுத் தொகையை ₹30,000-லிருந்து குறைந்தது ₹15 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று BPMS முன்மொழிந்துள்ளது. மேலும், 'டெபாசிட்-இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டத்தின்' (DLI scheme) கீழ் வழங்கப்படும் பலனை ₹10 லட்சமாக அதிகரிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.