8வது ஊதியக் குழு: பணிக்கொடை வரம்பில் ஏற்றம்? அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அப்டேட்
8th Pay Commission Gratuity: மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும்போது பெறும் கணிசமான முக்கிய தொகையான 'கிராச்சுவிட்டி' குறித்து தற்போது விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. 8வது ஊதியக் குழு தனது பரிந்துரைகளைத் தயாரித்து வரும் நிலையில், ஊழியர் சங்கங்கள் கிராச்சுவிட்டி உச்சவரம்பை உயர்த்தக் கோரி வருகின்றன.
8th Pay Commission: 8வது ஊதியக் குழுவிடம் ஊழியர்கள் மற்றும் ஓயூதியதாரர்கள் அமைப்புகள் பல வகையான கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றன. சம்பளம், ஓய்வூதியம், அலவன்சுகள் என பல வகையான கோரிக்கைகள் உள்ளன. இவற்றில் கிராஜ்ஜுவிட்டிக்கான சில முக்கிய அம்சங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மத்திய அரசு ஊழியர்கள்
மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும்போது பெறும் கணிசமான முக்கிய தொகையான 'கிராச்சுவிட்டி' குறித்து தற்போது விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. 8வது ஊதியக் குழு தனது பரிந்துரைகளைத் தயாரித்து வரும் நிலையில், ஊழியர் சங்கங்கள் கிராச்சுவிட்டி உச்சவரம்பை உயர்த்தக் கோரி வருகின்றன. சில அமைப்புகள் இந்த உச்சவரம்பை 75 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றன. கிராச்சுவிட்டி என்றால் என்ன? அது எவ்வாறு கணக்கிடப்படுகிறது? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்
கிராச்சுவிட்டி என்றால் என்ன?
- பணிக்கொடை எனப்படும் கிராச்சுவிட்டி என்பது, ஒரு ஊழியர் தனது நீண்டகால அர்ப்பணிப்புடன் கூடிய பணிக்காலத்தை முடித்து ஓய்வு பெறும்போது, அவருக்கு வழங்கப்படும் ஒருமுறை ஊதியமாகும்.
- அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு, இந்தத் தொகை அவர்களின் இறுதி ஊதியம் மற்றும் பணிபுரிந்த காலத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
- கிராச்சுவிட்டி அடிப்படை ஊதியம் (Basic Pay) மற்றும் அகவிலைப்படியுடன் (Dearness Allowance - DA) நெருங்கிய தொடர்பு கொண்டது.
பணிக்கொடை எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
அரசு ஊழியர்களுக்கான கிராச்சுவிட்டி கணக்கீடு, அதற்கென உள்ள பிரத்யேக விதிமுறைகளின்படி மேற்கொள்ளப்படுகிறது. 'மத்திய குடிமைப் பணி (ஓய்வூதிய) விதிகள், 2021'-ன் (Central Civil Services (Pension) Rules, 2021) படி, ஓய்வுக்கால கிராச்சுவிட்டி என்பது, அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியின் கூட்டுத்தொகையில் நான்கில் ஒரு பங்கு (1/4) எடுத்துக்கொள்ளப்பட்டு, அது ஊழியர் பணிபுரிந்த மொத்த ஆறு மாத காலங்களின் எண்ணிக்கையால் பெருக்கப்பட்டு கணக்கிடப்படுகிறது.
ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம்.
பணிக்கொடை சூத்திரம்:
(இறுதி அடிப்படை ஊதியம் + அகவிலைப்படி) × 1/4 × (பணிபுரிந்த ஆறு மாத காலங்களின் எண்ணிக்கை)
தனியார் துறை அல்லது பொதுவான கிராச்சுவிட்டி கணக்கீடுகளுக்கு, '15/26' என்ற சூத்திரம் பயன்படுத்தப்படுகிறது.
சூத்திரம்: (இறுதி அடிப்படை ஊதியம் + அகவிலைப்படி) × 15 × பணிபுரிந்த ஆண்டுகள் ÷ 26
தற்போதைய கிராச்சுவிட்டி உச்சவரம்பு என்ன?
அரசு ஊழியர்களுக்கு கிராச்சுவிட்டி தொகையாக அதிகபட்சம் 25 லட்சம் ரூபாய் வரை மட்டுமே வழங்கப்பட முடியும். மேலும், இந்தத் தொகையானது ஒரு ஊழியரின் ஆண்டு வருமானத்தைப் போல 16.5 மடங்குக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஊழியர் சங்கங்களின் கோரிக்கைகள் என்ன?
தற்போதைய 25 லட்சம் ரூபாய் உச்சவரம்பும், கணக்கீட்டு முறையும் பணவீக்கத்தின் தாக்கம் மற்றும் அதிகரித்து வரும் மருத்துவச் செலவுகளை ஈடுகட்டப் போதுமானதாக இல்லை என்று ஊழியர் சங்கங்கள் வாதிடுகின்றன. இதன் விளைவாக, 8-வது ஊதியக் குழுவிடம் அவர்கள் சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
NC-JCM
NC-JCM (தேசிய கவுன்சில் - கூட்டு ஆலோசனைக் கட்டமைப்பு) அமைப்பில் உள்ள பணியாளர் பிரதிநிதிகள், பணிக்கொடை உச்சவரம்பை மூன்று மடங்காக உயர்த்தி, 75 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்க வேண்டும் என்று கோருகின்றனர்.
பணியாளர் சங்கங்கள்
பணியாளர் சங்கங்கள், பணிக்கொடையைக் கணக்கிடும்போது 30 நாட்களுக்குப் பதிலாக 25 வேலை நாட்களை அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளன. மேலும், தற்போதுள்ள 16.5 மடங்கு என்ற உச்சவரம்பை முழுமையாக நீக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
IRTSA
இந்திய ரயில்வே தொழில்நுட்ப மேற்பார்வையாளர்கள் சங்கம் (IRTSA), பணிக்கொடை உச்சவரம்பை 50 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்றும், ஆறு மாதத்திற்கு ஒரு முறை அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் (Basic + DA) மூன்றில் ஒரு பங்கைக் கணக்கில் கொண்டு பணிக்கொடையைக் கணக்கிட வேண்டும் என்றும் கோரியுள்ளது.
பணிக்கொடை தொடர்பான தற்போதைய கோரிக்கைகள் வெறும் முன்மொழிவுகள் மட்டுமே என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 8வது ஊதியக் குழு தனது இறுதி அறிக்கையைச் சமர்ப்பித்து, அதற்கு அரசாங்கம் ஒப்புதல் அளிக்கும் வரை எந்த மாற்றமும் நடைமுறைக்கு வராது.
8வது ஊதியக் குழுவின் தற்போதைய நிலை என்ன?
8வது ஊதியக் குழு நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழுவாகும். இந்தக் குழு நவம்பர் 3, 2025 அன்று அமைக்கப்பட்டது. இக்குழுவின் பதவிக்காலம் 18 மாதங்கள் ஆகும். இதன் இறுதி அறிக்கை 2027-ஆம் ஆண்டு மே-ஜூன் மாத வாக்கில் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இந்தக் குழு ஆலோசனைக் கட்டத்தில் உள்ளது. பெங்களூருவில் அக்டோபர் 8 அன்று இதன் கூட்டங்கள் நிறைவடைந்தன. அடுத்த கூட்டம் அக்டோபர் 22-23 தேதிகளில் மும்பையில் நடைபெற உள்ளது.