8th Pay Commission: 8வது ஊதியக் குழுவின் அமலாக்கத்திற்காகவும், ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதிய உயர்வின் அறிவிப்புக்காகவும் மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். 8வது ஊதியக் குழு உறுப்பினர்கள் நாடு முழுவதும் ஊழியர் சங்கங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளுடன் பல கட்ட கூட்டங்களை நடத்தி வருகின்றன.
அக்டோபர் 22-23 ஆகிய தேதிகளில் மும்பையில் 8வது ஊதியக் குழுவின் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தை, ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இது 8-வது ஊதியக் குழுவின் செயல்பாட்டில் ஒரு முக்கியமான மைல்கல்லாகும்.
இந்தக் கூட்டத்தில், ஊதியங்கள், படிகள், ஓய்வூதியங்கள் மற்றும் பணி நிபந்தனைகள் தொடர்பான சிக்கல்கள் குறித்து ஊழியர் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் பிரதிநிதிகளுடன் ஊதியக் குழு ஆலோசனை நடத்தவுள்ளது.
ஊதியக் குழு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மும்பையில் குழுவைச் சந்திக்க விரும்பும் அமைப்புகள் அக்டோபர் 10, 2026-க்குள் சந்திப்பிற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக, ஊதியக் குழுவிடம் ஒரு குறிப்பாணையை சமர்ப்பிக்கும்போது வழங்கப்படும் 'மெமோ ஐடி' (memo ID)-ஐ அவர்கள் குறிப்பிட வேண்டியிருந்தது. கூட்டத்திற்கான இடம் மற்றும் விரிவான கால அட்டவணை பின்னர் தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு தற்போது முடிந்துவிட்டது.
8வது ஊதியக் குழுவின் மூலம் தங்கள் ஊதியங்கள் மற்றும் ஓய்வூதியங்களில் திருத்தம் செய்யப்படும் என்று மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் எதிர்பார்க்கின்றனர். ஊழியர் அமைப்புகள் 'ஃபிட்மென்ட் ஃபேக்டர்' (fitment factor), குறைந்தபட்ச அடிப்படை ஊதியம், அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியங்கள் தொடர்பாக பல்வேறு முன்மொழிவுகளை முன்வைக்கின்றன. அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு, இந்த அமைப்புகள் 3.0 முதல் 3.25 வரையிலான ஃபிட்மென்ட் ஃபேக்டரைப் பரிந்துரைத்துள்ளன. இது நடைமுறைப்படுத்தப்பட்டால், ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தில் கணிசமான உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது.
புதிய அடிப்படை ஊதியத்தை நிர்ணயிக்க ஃபிட்மென்ட் ஃபேக்டர் ஒரு பெருக்கல் காரணியாக பயன்படுத்தப்படுகின்றது. தற்போதைய அடிப்படை ஊதியம் புதிய ஃபிட்மெண்ர் ஃபாக்டரால் பெருக்கப்பட்டு புதிய அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்படுகின்றது. இது, விலை உயர்வால் ஏற்படும் வருமான இழப்பை ஈடுகட்டவும், அதே வேளையில் ஊதியத்தில் உண்மையான உயர்வை வழங்கவும் உதவும் அகவிலைப்படியின் (DA) தாக்கத்தையும் கணக்கில் கொள்கிறது.
எட்டாவது மத்திய ஊதியக் குழு நவம்பர் 3, 2025 அன்று அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்க 18 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு மே 2027-ன் தொடக்கமாகும்.
இந்த அறிக்கையில் அளிக்கப்படும் பரிந்துரைகளின் அடிப்படையில், ஊதியங்கள், படிகள் மற்றும் ஓய்வூதியங்களில் மாற்றங்கள் செய்வது குறித்து மத்திய அரசு இறுதி முடிவை எடுக்கும். எனவே, அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் தற்போது ஆணையத்தின் கூட்டங்கள், பல்வேறு அமைப்புகள் முன்வைக்கும் கோரிக்கைகள் மற்றும் வரவிருக்கும் பரிந்துரைகள் ஆகியவற்றைக் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.
இதற்கிடையில், மும்பை கூட்டங்களுக்கு முன்னர் சில முக்கிய கோரிக்கைகள் 8வது ஊதியக் குழுவிடம் வைக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசு ஊழியர்களுக்கான கோரிக்கை
ஓய்வூதியதாரர்களுக்கான கோரிக்கை