SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

8வது ஊதியக் குழு: அரசு ஊழியர்களுக்கான ‘லீவ் என்கேஷ்மெண்ட்’ 300-லிருந்து 450 நாட்களாக அதிகரிக்க வாய்ப்பு

8th Pay Commission: 8வது ஊதியக் குழு உறுப்பினர்கள், பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் ஆலோசனைகளை நடத்தி வருகிறார்கள். இந்த ஆலோசனைகளின் ஒரு பகுதியாக, 'விடுப்பு பணமாக்கல்' வரம்பை தற்போதைய 300 நாட்களிலிருந்து 450 நாட்களாக உயர்த்த வேண்டும் என்ற புதிய முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளது.

Written By Sripriya Sambathkumar
Published: Oct 27, 2026, 08:10 AM IST | Updated: Oct 27, 2026, 08:14 AM IST
Join

8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களும் 8வது ஊதியக் குழுவின் அமலாக்கத்திற்காக காத்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில், தினம் தினம் அவர்களுக்கு சாத்தியமான பல மாற்றங்கள் பற்றிய குறிப்புகள் கிடைத்துக்கொண்டு இருக்கின்றன. இவை கண்டிப்பாக செயல்படுத்தப்படுமா என்பது 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமலுக்கு வந்த பிறக்தான் தெரியவரும் என்றாலும், இவற்றால் ஊழியர்கள் மத்தியில் தங்களுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான லீவ் என்கேஷ்மென்ட்

சமீபத்தில் ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் லீவ் என்கேஷ்மெண்ட், அதாவது விடுப்பு பணமாக்கல் பற்றிய ஒரு தகவல் கிடைத்துள்ளது. இது அவர்களது ஆர்வத்தை அதிகரித்துள்ளது, அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

லீவ் என்கேஷ்மென்ட் என்றால் என்ன?

அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும்போது, ​​தாங்கள் பயன்படுத்தாத விடுப்பு நாட்களுக்குப் பதிலாகப் பெறும் பணத்தை 'லீவ் என்கேஷ்மென்ட்' (leave encashment) அல்லது 'விடுப்பு பணமாக்கல்' என்று அழைக்கிறோம். இது அவர்களுக்கு ஒரு முக்கியமான நிதி ஆதாரமாக அமைகிறது. 8வது ஊதியக் குழுவின் (8th Pay Commission) பரிந்துரைகளில் இது தொடர்பாக ஒரு குறிப்பிடத்தக்க மற்றும் சாதகமான முன்மொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

8வது ஊதியக் குழுவிடம் கோரிக்கை

தற்போது, ​​8வது ஊதியக் குழு உறுப்பினர்கள், பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் ஆலோசனைகளை நடத்தி வருகிறார்கள். இந்த ஆலோசனைகளின் ஒரு பகுதியாக, 'விடுப்பு பணமாக்கல்' வரம்பை தற்போதைய 300 நாட்களிலிருந்து 450 நாட்களாக உயர்த்த வேண்டும் என்ற புதிய முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளது. இது நடைமுறைக்கு வந்தால், ஓய்வுபெறும் நேரத்தில் ஊழியர்களுக்குக் கிடைக்கும் மொத்தத் தொகையில் கணிசமான உயர்வு ஏற்படும்.

மேலும் படிக்க | 8வது ஊதியக் குழு: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி கணக்கீட்டு முறை மாறுமா? டிஏ மர்ஜர் சாத்தியமா?

'விடுப்பு பணமாக்கல்' என்றால் என்ன?

விடுப்பு பணமாக்கலுக்கான விதிகளை முதலில் புரிந்துகொள்ளலாம்.

தற்போதைய முன்மொழிவின்படி, இந்த வரம்பை 450 நாட்களாக உயர்த்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது நடந்தால், ஊழியர்கள் கூடுதலாக 150 நாட்கள் விடுப்பைப் பணமாக்கிக்கொள்ள முடியும். இந்தத் தொகை, பணியின் கடைசி மாத அடிப்படை ஊதியம் மற்றும் அந்த நேரத்தில் நடைமுறையில் உள்ள அகவிலைப்படி (Dearness Allowance - DA) ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. இதில் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், இவ்வாறு பெறப்படும் தொகைக்கு முழுமையாக வரி விலக்கு உண்டு.

மேலும் படிக்க | 8வது ஊதியக் குழு: தீபாவளிக்கு முன் முக்கிய அறிவிப்பு!! காத்திருக்கும் அரசு ஊழியர்கள்

இதன் மூலம் ஊழியர்களுக்குக் கிடைக்கும் முக்கிய நன்மைகள் என்ன?

பல ஊழியர்கள், தங்கள் பணிக்காலத்தில் விடுப்புகளைப் பயன்படுத்திக்கொள்வதற்குப் பதிலாக, அவற்றைச் சேமித்து வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள். இதன் மூலம், அவர்கள் ஓய்வுபெறும்போது ஒரு பெரிய தொகையை ஒரே நேரத்தில் (lump-sum) பெற்றுக்கொள்ள முடிகிறது.

பொதுவாக, இத்தொகையை அவர்கள் நீண்டகால முதலீடுகள், பிள்ளைகளின் உயர்கல்வி, திருமணச் செலவுகள் அல்லது வீட்டுக் கடன் திருப்பிச் செலுத்துதல் போன்ற முக்கியமான தேவைகளுக்காகப் பயன்படுத்துகின்றனர்.

ஓய்வூதியதாரர்களுக்கு அதிகரிக்கும் நன்மை

புதிய ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி, இந்த வரம்பு 300 நாட்களிலிருந்து 450 நாட்களாக உயர்த்தப்பட்டால், பணியாளர்களுக்குக் கிடைக்கும் விடுப்பு பணமாக்கல் (leave encashment) தொகையில் 50 சதவீத உயர்வு ஏற்படும். இது பணிக்கொடை (gratuity) மற்றும் வருங்கால வைப்பு நிதி (PF) தொடர்பான ஏற்பாடுகளைப் போன்றே அமையும்.

நாடு முழுவதும் உள்ள பல முக்கிய பணியாளர் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் இந்த மாற்றத்தை வலுவாக வலியுறுத்தி வருகின்றன. இதில் ‘அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ்’ (AITUC) முன்னணியில் உள்ளது. இந்த கோரிக்கைக்கு 8வது ஊதியக் குழுவும், மத்திய அரசும் ஒப்புதல் அளித்தால் அது மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய நன்மையாக இருக்கும்.

மேலும் படிக்க | 8வது ஊதியக் குழு: பணிக்கொடை வரம்பில் ஏற்றம்? அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அப்டேட்

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

ஸ்ரீப்ரியா சம்பத், 6 ஆண்டுகளுக்கும் மேல் மீடியாவில் பணியாற்றி வருகிறார். இவர், வணிகம் மற்றும் தனிநபர் நிதி (Personal Finance) சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். மத்திய பட்ஜெட்டுகள், வங்கித் துறை, வருமான வரி, பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மத்திய அரசு ஊழியர்கள், ஊதியக் குழுக்கள் (Pay Commissions), ஓய்வூதியத் திட்டங்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் முக்கியக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.எழுத்தை வாசகர்களோடு இணைவதற்கான ஒரு சிறந்த பாலமாகக் கருதும் இவர், அவர்களின் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார். வாசகர்களுடன் இயல்பான, உண்மையான மற்றும் நேர்மையான தொடர்பைக் கொண்டிருப்பதே இவரின் முதன்மை இலக்காகும். பணி நேரத்தைத் தாண்டி, புத்தகங்கள் வாசிப்பது, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது மற்றும் அறிவுசார் விவாதங்களில் பங்கேற்பது இவருக்கு மிகவும் பிடித்தமானவை.

ZEENEWS TRENDING STORIES