SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

8வது ஊதியக் குழு: 1 ஆண்டு நிறைவு... அரசு ஊழியர்களுக்கான முக்கிய அப்டேட் என்ன? அமலாக்கம் எப்போது?

8th Pay Commission: 8வது ஊதியக் குழு அமைக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மத்தியில் தற்போது பல கேளிகள் உள்ளன. 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளைச் செயல்படுத்துவது குறித்த சமீபத்திய நிலை என்ன?

Written By Sripriya Sambathkumar
Published: Nov 03, 2026, 04:34 PM IST | Updated: Nov 03, 2026, 04:41 PM IST
Join

8th Pay Commission: 8வது ஊதியக் குழு அமைக்கப்பட்டு சரியாக ஓராண்டு நிறைவடைந்துள்ளது (நவம்பர் 3, 2025 நிலவரப்படி). இந்த ஓராண்டு காலத்தில், ஊதியக் குழு பல முக்கிய பணிகளை மெற்கொண்டுள்ளது. குறிப்பாக, குழு பல்வேறு ஊழியர் அமைப்புகளுடன் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியுள்ளது. இந்த கூட்டங்கள் 8வது ஊதியக் குழுவின் அறிக்கைக்கு அடிப்படையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

8வது ஊதியக் குழு

8வது ஊதியக் குழு அமைக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மத்தியில் தற்போது பல கேளிகள் உள்ளன. 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளைச் செயல்படுத்துவது குறித்த சமீபத்திய நிலை என்ன? மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் ஊதியம் மற்றும் படிகளில் எப்போது உயர்வை எதிர்பார்க்கலாம்? எந்த தேதி முதல் அரியர் தொகைகள் கிடைக்கும்? இவற்றைப் பற்றி இந்த பதிவில் விரிவாகக் காணலாம்.

8வது ஊதியக் குழு அறிக்கை எப்போது சமர்ப்பிக்கப்படும்?

18 மாத கால அவகாசம்: ஊதியக் குழு தனது அறிக்கையைச் சமர்ப்பிக்க, அது அமைக்கப்பட்ட தேதியிலிருந்து 18 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, 2027-ம் ஆண்டு மே மாதத்திற்குள் பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு ஆய்வு: 8வது ஊதியக் குழு தனது அதிகாரப்பூர்வ அறிக்கையைச் சமர்ப்பித்தவுடன், மத்திய அரசு அதை ஆய்வு செய்யும். இதில் ஃபிட்மென்ட் ஃபேக்டர் (fitment factor), அடிப்படை ஊதியம், படிகள், ஓய்வூதியம் மற்றும் பணி நிபந்தனைகள் தொடர்பான அனைத்து பரிந்துரைகளும் அடங்கும்.

பரிந்துரை விதிமுறைகள்: அதன் பிறகு, 8வது ஊதியக் குழுவின் 'பரிந்துரை விதிமுறைகளில்' (Terms of Reference - ToR) குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளின் அடிப்படையில், எந்தெந்த முன்மொழிவுகளை ஏற்றுக்கொள்வது என்று அரசு முடிவு செய்யும்.

மேலும் படிக்க | 8வது ஊதியக் குழு: அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்!! இனி 3 மாதங்களுக்கு ஒரு முறை டிஏ உயர்வா? முக்கிய மாற்றங்கள்

மத்திய அரசு ஊழியர்களுக்கான பரிந்துரைகள்

சில பரிந்துரைகளுக்கு, குறிப்பாக படிகள், ஓய்வூதியம் அல்லது அவற்றைச் செயல்படுத்துவது தொடர்பான சிக்கல்களில், கூடுதல் ஆய்வு அல்லது ஒரு பிரத்யேகக் குழுவின் மறுஆய்வு போன்றவை தேவைப்படலாம். இறுதி முடிவு எடுக்கப்பட்டதும், மத்திய அரசு புதிய அறிவிக்கையையும் அதற்கான உத்தரவுகளையும் வெளியிடும்.

இதில் திருத்தப்பட்ட ஊதிய அமைப்பு, பொருந்தக்கூடிய விதிகள் மற்றும் நடைமுறைகள், மற்றும் அவை அமலுக்கு வரும் தேதிகள் குறித்த விவரங்கள் இடம்பெறும். மத்திய அரசு ஒரு குறிப்பிட்ட தேதியை நிர்ணயித்து, அது குறித்து சம்பந்தப்பட்ட ஊழியர் சங்கங்கள், அமைப்புகள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்குத் தெரிவிக்கும்.

8வது ஊதியக் குழு அரியர் தொகை

8வது ஊதியக் குழு அறிவிக்கும் தேதியிலிருந்து, புதிய குழுவுக்கான பரிந்துரைகள் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரும். இதனைத் தொடர்ந்து, அந்தந்தத் துறைகள் தகுதியுள்ள ஊழியர்களுக்கான திருத்தப்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்களைக் கணக்கிடும். இதனைத் தொடர்ந்து, அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களின்படி நிலுவைத் தொகைகள் வழங்கப்படும்.

ஊதியக் குழுவின் பரிந்துரைகளைச் செயல்படுத்துவது உள்ளிட்ட முழு செயல்முறையும் நிறைவடைய மேலும் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் ஆகலாம். அதாவது, 2027-ல் அறிவிக்கப்படும் ஊதிய உயர்வு, 2029 அல்லது 2030-ஆம் ஆண்டு வரை முழுமையாகச் செயல்படுத்தப்படாமல் இருக்கவும் வாய்ப்புள்ளது. இந்த மாற்றங்களை 2026-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் வகையில் (முன்னேற்பாட்டுத் தேதியிலிருந்து) அரசாங்கம் செயல்படுத்தக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க | 8வது ஊதியக் குழு: டிஏ அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா? அரசு ஊழியர்களுக்கு டாப் அப்டேட்

ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மீது தாக்கம்

8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள், நாடு முழுவதும் உள்ள ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், சுமார் 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் அடங்குவர். பாதுகாப்பு மற்றும் ரயில்வே துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்றவர்களும் இதன் வரம்பிற்குள் வருகிறார்கள்.

பல்வேறு நகரங்களில் நடைபெறும் 8வது ஊதியக் குழு கூட்டங்கள்

ஊதியக் குழு, பல்வேறு ஊழியர் சங்கங்கள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறது. கடந்த ஓராண்டில், டெல்லி, ஜெய்ப்பூர், டேராடூன் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் இக்குழு கூட்டங்களை நடத்தியுள்ளது.

மிக சமீபத்திய கூட்டம், அக்டோபர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மும்பையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடல்கள், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் முக்கிய கோரிக்கைகளை மையமாகக் கொண்டுள்ளன. கூட்டங்களுக்கான விரிவான நிகழ்ச்சி நிரலை ஊதியக் குழு பொதுவெளியில் வெளியிடவில்லை என்றாலும், ஊதியம், படிகள் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான முக்கியமான சிக்கல்களே இந்த விவாதங்களின் மையப்பகுதியாக இருந்ததாக அறியப்படுகிறது.

மொத்தத்தில் 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளுக்காக ஆவலுடன் காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களும் சம்பள உயர்வு, அலவன்சுகளில் ஏற்றம், ஓய்வூதிய உயர்வு, ஊதிய முறைகள் ஆகியவர்றில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும் என நம்புகிறார்கள்.

மேலும் படிக்க |  8வது ஊதியக் குழு: அரசு ஊழியர்களுக்கான ‘லீவ் என்கேஷ்மெண்ட்’ 300-லிருந்து 450 நாட்களாக அதிகரிக்க வாய்ப்பு
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

ஸ்ரீப்ரியா சம்பத், 6 ஆண்டுகளுக்கும் மேல் மீடியாவில் பணியாற்றி வருகிறார். இவர், வணிகம் மற்றும் தனிநபர் நிதி (Personal Finance) சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். மத்திய பட்ஜெட்டுகள், வங்கித் துறை, வருமான வரி, பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மத்திய அரசு ஊழியர்கள், ஊதியக் குழுக்கள் (Pay Commissions), ஓய்வூதியத் திட்டங்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் முக்கியக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.எழுத்தை வாசகர்களோடு இணைவதற்கான ஒரு சிறந்த பாலமாகக் கருதும் இவர், அவர்களின் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார். வாசகர்களுடன் இயல்பான, உண்மையான மற்றும் நேர்மையான தொடர்பைக் கொண்டிருப்பதே இவரின் முதன்மை இலக்காகும். பணி நேரத்தைத் தாண்டி, புத்தகங்கள் வாசிப்பது, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது மற்றும் அறிவுசார் விவாதங்களில் பங்கேற்பது இவருக்கு மிகவும் பிடித்தமானவை.

ZEENEWS TRENDING STORIES