SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ஆதாருக்கு பதிலாக வாக்காளர் அடையாள அட்டை? அரசு உதவித்தொகை பெற புதிய நடைமுறை.. விரைவில்

Aadhaar vs EPIC Number: அரசு நலத்திட்டங்களின் பயனாளிகளை அடையாளம் காணும் முறையில் மாற்றம் வரக்கூடும் என மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் தெரிவித்துள்ளார். ஆதார் அட்டையின் நம்பகத்தன்மை குறித்து கேள்விகள் எழுந்துள்ள நிலையில், பயோமெட்ரிக் அங்கீகாரத்துடன் வாக்காளர் அடையாள அட்டையின் EPIC எண்ணையும் பயன்படுத்தும் முறை பரிசீலனையில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

Written By Shiva Murugesan
Published: Nov 06, 2026, 05:18 PM IST | Updated: Nov 06, 2026, 05:22 PM IST
Image Credit: Ai Generator | Could Voter ID Replace Aadhaar for Government Benefits? Here's What We Know
Join

மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கான பயனாளி அடையாள சரிபார்ப்பில் மாற்றம் வரலாம் என்ற தகவல் தற்போது பேசுபொருளாகியுள்ளது. ஆதார் கார்டை மட்டும் நம்பாமல், பயோமெட்ரிக் சரிபார்ப்புடன் EPIC (Electors Photo Identity Card) எண்ணையும் பயன்படுத்தும் முறையை அரசு பரிசீலித்து வருவதாக மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் தெரிவித்திருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. விரைவில் அரசு நலத்திட்டங்களில் புதிய அடையாளச் சரிபார்ப்பு முறை வர வாய்ப்புள்ளது. அதன் விவரங்களை பார்ப்போம்.

ஆதார் கார்டுக்கு மாற்றாக EPIC எண்: அரசு உதவித்தொகை பெற புதிய நடைமுறை

தேசிய மக்கள் திட்ட இயக்கம் 2026-27 தொடர்பான ஒரு பணிமனை நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங், ஆதார் கார்டின் நம்பகத்தன்மை குறித்து சில கேள்விகளை எழுப்பியுள்ளார். தற்போது ஆதார் பதிவு மையங்கள் எளிதாக கிடைப்பதால், புதிய ஆதார் கார்டுகளை மிக விரைவாக பெற முடிகிறது. சில இடங்களில் போலியான ஆதார் அட்டைகள் பயன்படுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதன் காரணமாக, நலத்திட்ட பயனாளிகளை அடையாளம் காண ஆதார் மட்டும் போதுமானதாக இருக்காது என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

EPIC எண் என்றால் என்ன?

EPIC (வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை) அடையாள அட்டையின் தனித்துவ எண்ணாகும். இந்த எண்ணின் மூலம் ஒவ்வொரு வாக்காளரின் விவரங்களும் தனித்தனியாக பதிவு செய்யப்பட்டிருக்கும். அதனால், பயனாளியின் அடையாளத்தை உறுதி செய்வதற்காக EPIC எண்ணை பயன்படுத்தலாம் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க - இனி ஆதார் கார்டுக்கு பதில் Voter ID! அரசின் நிதியுதவி பெற புதிய நடைமுறை.. மத்திய அமைச்சர் அறிவிப்பு!

புதிய அடையாளச் சரிபார்ப்பு முறை எப்படி செயல்படும்?

அமைச்சரின் கருத்துப்படி, எதிர்காலத்தில் அரசு நலத்திட்ட உதவித்தொகைகளை பெற இரண்டு நிலை அடையாளச் சரிபார்ப்பு நடைமுறைக்கு வர வாய்ப்பு உள்ளது.

1. பயோமெட்ரிக் அங்கீகாரம்

2. வாக்காளர் அடையாள அட்டை (EPIC) எண்

இந்த இரண்டு சரிபார்ப்புகளும் வெற்றிகரமாக முடிந்த பின்னரே நிதி உதவிகள் வழங்கப்படலாம். அதேநேரம் இதற்கான தொழில்நுட்ப கட்டமைப்பு மற்றும் அதிகாரப்பூர்வ நடைமுறை இன்னும் வெளியிடப்படவில்லை.

எந்த அரசு திட்டங்களுக்கு தாக்கம் ஏற்படலாம்?

அரசு நலத்திட்டங்களில் புதிய அடையாளச் சரிபார்ப்பு நடைமுறை அமலுக்கு வந்தால், மத்திய அரசின் பல முக்கிய நலத்திட்டங்களிலும் மாற்றம் ஏற்படக்கூடும் என கூறப்படுகிறது.

PM-கிசான் எஸ்: பிரதமர் கிசான் சம்மான் நிதி (PM-KISAN) திட்டத்தின் கீழ் தகுதியான விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் நிதி உதவி வழங்கப்படுகிறது. புதிய சரிபார்ப்பு முறை கொண்டு வரப்பட்டால், இந்த திட்டத்தின் பயனாளிகளும் EPIC எண்ணை இணைக்க வேண்டிய நிலை உருவாகலாம்.

பிரதமர் கிராமப்புற வீட்டு வசதி திட்டம்: Pradhan Mantri Awas Yojana (Gramin) திட்டத்தின் மூலம் கிராமப்புற ஏழைக் குடும்பங்களுக்கு வீடு கட்ட நிதியுதவி வழங்கப்படுகிறது. புதிய அடையாளச் சரிபார்ப்பு விதிமுறைகள் இந்த திட்டத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

ஓய்வூதிய திட்டங்களுக்கு பாதிப்பு உண்டா?: தேசிய சமூக உதவித் திட்டம் (NSAP) கீழ் முதியவர்கள், விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

புதிய முறை அமலானால், இந்த திட்டத்தின் பயனாளிகளும் பயோமெட்ரிக் மற்றும் EPIC அடிப்படையிலான சரிபார்ப்பை மேற்கொள்ள வேண்டியிருக்கலாம்.

வேலைவாய்ப்பு மற்றும் கால்நடை வளர்ப்பு திட்டங்கள் பாதிக்கப்படுமா?

கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டங்கள் மற்றும் தேசிய கால்நடை வளர்ப்பு திட்டம் போன்றவற்றிலும் தற்போது ஆதார் அடிப்படையிலான அடையாளச் சரிபார்ப்பு பயன்படுத்தப்படுகிறது. அதனால் எதிர்காலத்தில் இந்த திட்டங்களிலும் EPIC எண் முக்கிய பங்காற்றும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது இருக்கும் விதிமுறைகள் என்ன?

மிக முக்கியமாக, தற்போது எந்தத் திட்டத்திலும் ஆதாரை முழுமையாக நீக்கி EPIC எண் கட்டாயமாக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. மத்திய அமைச்சர் தெரிவித்துள்ள கருத்துகள் எதிர்கால மாற்றங்களுக்கான சாத்தியக்கூறுகளை மட்டுமே சுட்டிக்காட்டுகின்றன. எனவே, அரசு சார்பில் தெளிவான வழிகாட்டுதல்கள் வெளியாகும் வரை மக்கள் எந்த மாற்றத்தையும் பற்றிக் கவலைப்பட தேவையில்லை.

அரசு உதவித்தொகை பெற புதிய விதி

அரசு நலத்திட்டங்களில் வெளிப்படைத்தன்மை மற்றும் பயனாளிகளின் சரியான அடையாளத்தை உறுதி செய்வதற்காக புதிய சரிபார்ப்பு நடைமுறைகள் குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. ஆதார் கார்டுடன் சேர்த்து EPIC எண் மற்றும் பயோமெட்ரிக் அங்கீகாரம் பயன்படுத்தப்படும் முறை அமலுக்கு வந்தால், பயனாளி அடையாளத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்படும். ஆனால் இதுகுறித்த இறுதி முடிவு மற்றும் நடைமுறை வழிகாட்டுதலை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்த பின்னரே தெளிவாக தெரியும்.

மேலும் படிக்க - EPFO 3.0: ATM, UPI மூலம் EPF பணத்தை எடுக்கும் அட்டகாசமான வசதி விரைவில்.. நிபந்தனைகள் என்ன?

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

டிஜிட்டல் ஊடகத்துறையில் அனுபவம் வாய்ந்த செய்தி நிபுணர் மற்றும் இதழாளர். தரவு அடிப்படையிலான செய்திகள் (Data-driven news), எஸ்சிஓ (SEO) உத்திகள் மற்றும் டிஜிட்டல் வளர்ச்சி மேலாண்மையில் (Digital Growth Management) நிபுணத்துவம் பெற்றவர். தற்போது முன்னணி ஊடக நிறுவனத்தில் செய்தி மேலாண்மை மற்றும் டிஜிட்டல் தளங்களை வழிநடத்தி வருகிறார்.

ZEENEWS TRENDING STORIES