• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /இனி ஆதார் கார்டுக்கு பதில் Voter ID! அரசின் நிதியுதவி பெற புதிய நடைமுறை.. மத்திய அமைச்சர் அறிவிப்பு!

இனி ஆதார் கார்டுக்கு பதில் Voter ID! அரசின் நிதியுதவி பெற புதிய நடைமுறை.. மத்திய அமைச்சர் அறிவிப்பு!

Written ByUmabarkavi K
Published: Nov 05, 2026, 03:42 PM IST|Updated: Nov 05, 2026, 04:06 PM IST
joinshare
Aadhaar Card Latest Update: அரசின் நலத்திட்ட உதவிகளை பெற ஆதார் கார்டுக்கு பதிலாக பயோமெட்ரிக் அல்லது வாக்காளர் அடையாள எண்ணை பயன்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். இதன் மூலம், இனி ஆதார் கார்டு முக்கியமான ஆவணமாக இருக்காது என கூறியுள்ளார்.

Aadhaar Card: இந்த திட்டத்தை அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் லலன் சிங் முக்கியமான கருத்தை தெரிவித்துள்ளார்.
 

Aadhaar Card1/5

ஆதார் கார்டு தொடர்பாக முக்கிய அறிவிப்பு

ஆதார் கார்டு முக்கியமான ஒரு ஆவணமாக மாறியுள்ளது. வங்கி சேவை, ரேஷன் பொருட்கள், அரசு திட்டங்கள் என அனைத்திற்குமே ஆதார் கார்டு பிரதான ஆவணமாக இருந்து வருகிறது. ஆதார் கார்டு தொடர்பான சேவைகள் குறித்து இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) அவ்வப்போது அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில், ஆதார் கார்டு தொடர்பாக முக்கிய அறிவ்பைப அமைச்சர் லலன் சிங் தெரிவித்துள்ளார்.
Aadhaar Card2/5

ஆதாருக்கு பதில் வாக்காளர் அடையாள அட்டை

அதாவது, அரசின் நலத்திட்ட உதவிகளை பெற ஆதார் கார்டுக்கு பதிலாக பயோமெட்ரிக் அல்லது வாக்காளர் அடையாள எண்ணை பயன்படுத்தப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். இவர் கூறுகையில், " அரசு திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு பணம் வழங்குவதற்கு ஆதார் அட்டை இனி அடிப்படையாக இருக்காது.
Aadhaar Card3/5

புதிய நடைமுறையில் விரைவில் அமல்

ஆதார் மையங்கள் அனைத்து இடங்களிலும் உள்ளது. வெறும் ஐந்து நிமிடங்களில் யாருக்கு வேண்டுமானாலும் ஆதார் அட்டை வழங்கப்படலாம். இதனால், ஆதார் அட்டை இனி அடிப்படையாக இருக்காது. அதற்கு பதிலாக அரசு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு அவர்களின் பயோமெட்ரிக் அல்லது வாக்காளர் அடையாள எண்ணை பயன்படுத்தி செயல்படுத்தப்படும்" என்று கூறினார். இருப்பினும், எந்தெந்த திட்டங்களுக்கு இந்த புதிய செயல்முறையின் கீழ் வரும் என்பது மத்திய அரசு எந்தவிதமான தகவலையும் வெளியிடவில்லை.
Aadhaar Card4/5

பயோமெட்ரி மற்றும் வாக்காளர் அடையாள அட்டை வழங்கவும்

பயனாளிகள் தங்கள் அடையாளத்தை உறுதிசெய்து, அரசு திட்டத்தின் கீழ் பணம் பெற தங்களது வாக்காளர் அடையாள எண்களுடன் பயோமெட்ரிக் அங்கீகாரத்தையும் வழங்க வேண்டும் என மத்திய அமைச்சர் லலன் சிங் கூறினார். இதனை தற்போது மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சரும், ஜேடி(யு) தலைவருமான ராஜீவ் ரஞ்சன் சிங், என்றழைக்கப்படும் லல்லன் சிங் மட்டுமே கூறியுள்ளார். UIDAI தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை.
Aadhaar Card5/5

இந்த திட்டங்களுக்கு ஆதார் அவசியம்

தற்போது ஆதார் கார்டு மூலம் பிஎம் கிசான், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா, முதியோர், கைம்பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம், கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் போன்ற பல மத்திய அரசின் திட்டங்களின் கீழ் பணம் செலுத்துவதற்கு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குள் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
TAGS:
Aadhaar Card

Trending

  • News
  • Photos
  • Videos
காசிமேடு மீனவர்கள் மாயமான விவகாரம்! ஆந்திராவில் ஒதுங்கிய 6 பேரின் சடலம்..

காசிமேடு மீனவர்கள் மாயமான விவகாரம்! ஆந்திராவில் ஒதுங்கிய 6 பேரின் சடலம்..

2

ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத்தில் தமிழ்நாடு முதலிடம்: நிதி ஆயோக் அறிக்கை

3

சிஎஸ்கே கலீல் அகமது, எல்லிஸை கழட்டிவிட்டது சரியா? லிவிங்ஸ்டன் தேவையா?

4

இந்தியா விசா விதிகளில் பெரிய மாற்றம்: வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மத்திய அரசின் புதிய திட்டம்

5

Explained : 28 ஆண்டுகள் நடந்தே உலகை சுற்றிய நபர்! ஒரு வழியாக வீடு திரும்பியது எப்படி?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.