• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /பயனுள்ள தகவல்கள்
  • /நடிகை நமிதா உடல் எடை குறைந்தது எப்படி? தினமும் ‘இதை’ 3 ஸ்பூன் சாப்பிடுவாராம்..

நடிகை நமிதா உடல் எடை குறைந்தது எப்படி? தினமும் ‘இதை’ 3 ஸ்பூன் சாப்பிடுவாராம்..

Namitha Weight Loss : தமிழ் திரையுலகின், முக்கிய நடிகையாக இருந்தவர் நமிதா. இவர், சமீபத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டிருந்தார். அதில், ஆளே மாறிப்போய் உடல் எடை மெலிந்திருந்தார். இது குறித்த டிப்ஸை அவரே கொடுத்திருக்கிறார்.

Written ByYuvashree M
Published: Aug 18, 2026, 01:31 PM IST|Updated: Aug 18, 2026, 01:42 PM IST
joinshare
நடிகை நமிதா உடல் எடை குறைந்தது எப்படி? தினமும் ‘இதை’ 3 ஸ்பூன் சாப்பிடுவாராம்..
Image Credit: நமிதா உடல் எடை குறைப்பு | Instagram Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Madurantakam By-Election: மரகதம் குமரவேல் முன்னிலை.. தவெக எழுச்சிக்கு பாமக, விசிக வாக்குகள் காரணமா?

Madurantakam By-Election: மரகதம் குமரவேல் முன்னிலை.. தவெக எழுச்சிக்கு பாமக, விசிக வாக்குகள் காரணமா?

2

ISRO வேலைவாய்ப்பு: மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

3

ரேஷன் கார்டு இருக்கா? இந்த வசதி இருப்பதை மறக்காதீங்க.. ONORC மூலம் கிடைக்கும் முக்கிய நன்மை

4

அமெரிக்காவின் திடீர் தடை... இந்திய ஊழியர்களுக்கு இனி கிரீன் கார்டு கிடைக்காதா? Explained

5

NZ ஒருநாள் தொடர்: 2 இந்திய அணிகள்.. புவி, ஷமிக்கு வாய்ப்பு? முழு விவரம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Namitha Weight Loss : நடிகை நமிதாவை நினைத்தாலே, நம்மில் பலருக்கு அவருடைய சில பாடல்களும், அவரது கொழுக் மொழுக் என்கிற தேகமும்தான் நினைவிற்கு வரும். ஆனால் இப்போது அப்படி இல்லை, ஆளே மாறிப்போய் விட்டார். தமிழ் திரையுலகில், முக்கிய நடிகையாக இருந்த அவர் விஜய், சரத்குமார், சத்யராஜ், பரத் உள்ளிட்ட பல நடிகர்களாேடு சேர்ந்து நடித்திருக்கிறார். பல படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடனமும் ஆடி இருக்கிறார்.

உடல் எடை குறைந்த நமிதா!

நடிகை நமிதா, 100 கிலோ வரை எடையுடன் இருந்தாராம். இப்போது சுமார் 32 கிலோ எடை வரை அவர் குறித்திருப்பதாக கூறப்படுகிறது. இவர், அவ்வளவு எடை குறைத்து இப்போது சுமார் 68-69 கிலோ வரை இருப்பதாக கூறப்படுகிறது. இவர், தன்னுடைய சமீபத்திய பேட்டி ஒன்றில், கூறியிருக்கிறார். இவரது டயட் சீக்ரெட் தற்போது வைரலாகி வருகிறது.

 

 

 

 

View this post on Instagram

 

 

 

 

 

 

 

 

 

 

 

A post shared by Namithaaa Vankawala (@namita.official)

உடல் எடை குறைப்பு..

திரையுலகிற்கு வந்த புதிதில் அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்கப்பட்டது. அவரும் அதனை ஏற்றுக்கொண்டு நடித்துக்கொடுத்துக்கொண்டே இருந்தார். போகப்போக, அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து போனது. கடைசியாக மலைபோல் நம்பிய ஜகன்மோகினி மற்றும் பொட்டு போன்ற படங்களும் கைவிட்டது. சினிமாவை விடுத்து, அரசியலிலும் கவனம் செலுத்தி வந்த நமிதா, இதற்கிடையே வீரேந்திர சௌத்ரி என்கிற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட இவர், பின்பு இரட்டை குழந்தைகளுக்கும் தாயானார். இதற்கு பிறகு படங்களில் சரியாக தலைக்காட்டவில்லை. இப்போது திடீரென்று ஒரு வீடியோவை பதிவிட்டார். அதில் இவர் உடல் எடை குறைந்தது தெளிவாக தெரிந்திருந்தது.

நமிதா, சமீபத்தில் 32 கிலோ வரை உடல் எடை குறைந்திருக்கிறார். அதிலும் குறிப்பாக, இந்த ஆண்டின் தொடக்கத்திற்கு பிறகு மட்டும் இவர் சுமார் 10 கிலோ வரை குறைத்ததாக கூறப்படுகிறது. மெதுவாக எடை குறைத்தால்தான், அதற்கான ரிசல்ட்ஸ் நீடித்து நிற்கும் என்று குறிப்பிடும் அவர், டான் கவனமான டயட்டில் இருந்ததாகவும், அன்றாடம் ஜிம் சென்று உடற்பயிற்சி செய்து வந்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.

நமிதாவின் டயட்:

நமீதா, தன்னுடைய டயட் சீக்ரெட் குறித்தும் பேசி இருக்கிறார். இண்டர்மிட்டண்ட் ஃபாஸ்டிங் டயட் முறையில் உணவு எடுத்துக்கொண்ட அவர், காலை உணவை, வயிறு நிறைய எடுத்துக்கொண்டதாகவும், மதிய உணவை சிறிய அளவு மட்டும் எடுத்துக்கொண்டதாகவும், இரவு உணவு, அதை விட குறைவான அளவாக இருந்ததாகவும் கூறியிருக்கிறார்.

இந்த டயட்டின் படி, நடிகை நமிதா 16 மணி நேர விரதமும், 8 மணி நேர சாப்பாடும் சாப்பிட்டிருக்கிறார். காலை 9 மணிக்கு தன்னுடைய முதல் உணவை எடுத்துக்கொள்ளும் நமிதா, இரவு 7 மணிக்குள் சாப்பிட்டு முடித்து விடுகிறார். இதற்கு முன்போ, பின்போ அவர் சாப்பிடுவதில்லை. இது குறித்து கூறும் அவர், என்ன உணவு எடுத்துக்கொள்கிறோம் என்பதை விட, எப்போது சாப்பிடுகிறோம் என்பதே மிகவும் முக்கியம் என்று கூறியிருக்கிறார்.

எந்த உணவை எடுத்துக்கொள்வார்?

நமீதா, தென்னிந்திய உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் டயட்டில் இருந்திருக்கிறார்.

காலை :

  • 3 இட்லி அல்லது 2 தோசை
  • சீஸ் ஆம்லெட்
  • 3 ஸ்பூன் நெய்

இப்படி நெய் சாப்பிடுவது குழந்தை பெற்றுக்கொண்ட தாய்மார்களுக்கு அவசியம் என்கிறார். பெண்கள் இது போன்று நெய் சாப்பிடுவதால், குழந்தை பெற்றெடுத்த போது பிரசவத்தில் இழந்த ஆற்றலை மீட்டெடுக்க, உடலில் பலவீனமடைந்த தசைகள் மற்றும் உள் உறுப்புகல் குணமடைய பெரிதும் இது உதவும் என்றும் கூறியிருக்கிறார்.

மதியம் மற்றும் இரவு வேளைகளில், அளவுக்கு அதிகமாக இல்லாமல் இருக்கும் படி பார்த்துக்கொள்ளும் நமிதா, இரவு 7 மணிக்கு முன்பாகவே தன் உணவை முடித்துக்கொள்ளும் பழக்கத்தை கொண்டிருக்கிறார். அதிலும் இரவில் ஹெவியாக எதுவும் சாப்பிடாமல் இருக்க முருங்கைக்கீரை சாறு, காய்கறி போட்ட சூப், சோயா உள்ளிட்டவையுடன் லைட் ஆன உணவுகளையே எடுத்துக்கொள்கிறார். 7 மணிக்கு மேல் பசி எடுத்தால், கொய்யா அல்லது கிவி பழத்தை சாப்பிடுகிறார்.

நெய்யின் நன்மைகள் குறித்து விளக்கம்..!

நெய்யில் இருக்கும் பியூட்ரிக் அமிலம், பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் பொதுவான பிரச்சனையான மலச்சிக்கலை தடுகும் என்றும், செரிமானத்தை மேம்படுத்தும் என்றும் நமிதா கூறியிருந்தார். மேலும், இதில் இருக்கும் வைட்டமின்கள், நல்ல கொழுப்புகள் தாய்ப்பாலின் தரத்தை அதிகரிக்கும் என்றும், உடலின் ஹார்மோன்களையும் சமநிலைப்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார். 

Add Zee News as a Preferred Source
TAGS:
Health Tips