பிபிஓ, ஐடி வேலைகளுக்கு ஆப்பு.. தூக்கி சாப்பிடும் AI.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்! Explained
AI Jobs Explained: ஏஐ தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், ஏஐ தொழில்நுட்பத்தால் பிபிஓ, வங்கி, ஐடி போன்ற துறைகள் என என்ட்ரி லெவல் வேலைவாய்ப்புகளை பறிக்கும் என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
AI Jobs Explained: இந்த காலக்கட்டத்தில் நாம் திரும்பி பார்க்கும் இடமெல்லாம் ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு குறித்த பேச்சாகவே இருந்து வருகிறது. சமீப ஆண்டுகளில் நாம் நினைத்த பார்க்க முடியாத அளவுக்கு ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அசுர வேகத்தில் இருக்கிறது. நாம் நினைத்த கூட பார்க்க முடியாத சில வேலைகளை ஏஐ சில விநாடிகளில் முடித்து கொடதுது வருகிறது.
ஏஐ குறித்த ஆய்வு
ஏஐ தொழில்நுட்பத்தால் எவ்வளவோ நன்மைகள் இருந்தாலும், அதே நேரத்தல், கட்டுப்பாடற்ற ஏஐ வளர்ச்சியால் வரும் காலங்களில் மனித குலத்திற்கே ஆபத்தாக அமையும் என வல்லுநர்கள் எச்சரிக்கை விடுகிறார்கள். குறிப்பாக, வேலைவாய்ப்புத்துறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில, ஏஐ காரணமாக என்ட்ரி லெவல் வேலைகள் பறிபோகும் அபாயம் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்திய வேலைவாய்ப்புகளில் ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்தும் தாக்கம் குறித்து சென்னை ஐஐடி அறிக்கை வௌயிட்டுள்ளது. இந்த அறிக்கையை ஐஐடியில் நடைபெற்ற ஏஐ ஆளுமை தொழில்துறை மாநாட்டின்போது ஐஐடி இயக்குநர் காமகோடி இந்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளார். மனிதர்களின் பணிகளுக்கு ஏஐ எவ்வாறு உதவுகிறது? தற்போதைய வேலைவாய்ப்புகளை எவ்வாறு மாற்றியமைக்கிறது? புதிய வேலைவாய்ப்புகளை ஏஐ எவ்வாறு உருவாக்குகிறது? என்பது குறித்து அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: IDBI வங்கியை கைப்பற்றும் ஃபேர்ஃபாக்ஸ்.. அடுத்ததாக 3 நிறுவனங்களை வாங்கவும் திட்டம்?
பல்வேறு துறைகளில் ஏஐ தாக்கம்
ஏஐ தொழிற்நுட்பத்தால் வேலையிழப்பு குறித்த அச்சம், புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்காதது பற்றியும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு மைய்ததின் (Cerai) ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர். இதில், ஒரு பணியை செயற்கை நுண்ணறிவு மேற்கொள்வதால் மட்டுமே உடனடியாக அந்த வேலை பறிபோய்விடும் என்று அர்த்தமல்ல. செலவு, திறன், விதிமுறைகள், பாதுகாப்பு மற்றும் நிறுவனங்களின் முடிவுகளைப் பொறுத்தே அதன் இறுதி விளைவு அமையும் என்று ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், நிறுவனங்களில் புதிதாகச் சேரும் தொடக்கநிலை ஊழியர்கள் (Entry-level workers) வழக்கமாகச் செய்யும் ஒரே மாதிரியான, விதிகள் சார்ந்த அடிப்படைப் பணிகளை AI கையாளத் தொடங்குவதால், அவர்கள் அனுபவம் பெறுவதற்கும் அடுத்தகட்ட பதவி உயர்வை எட்டுவதற்கும் வாய்ப்புகள் குறையக்கூடும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பி.பி.ஓ மற்றும் கால் சென்டர்கள்: வாடிக்கையாளர்களின் சாதாரண கேள்விகளுக்குப் பதிலளித்தல், கோரிக்கைகளை வகைப்படுத்துதல், பதில்களைத் தயார் செய்தல் மற்றும் ஆய்வு மேற்கொள்ளுதல் போன்ற பணிகளை ஏஐ மேற்கொள்ள வாய்ப்புள்ளது.
வங்கி மற்றும் நிதித் துறை: கணக்குப் பராமரிப்பு (bookkeeping), தரவுப் பதிவு (data entry), கணக்குச் சரிபார்ப்பு (reconciliation) மற்றும் விதிமுறை இணக்கச் சோதனைகள் (compliance checks) போன்ற நிலையான பணிகள் தானியங்கிமயமாக்கப்படும்.
ஐ.டி. துறை (IT Sector): தொடக்கநிலை ஐ.டி. ஊழியர்கள் செய்யும் கோடிங், டெஸ்டிங், ஆவணப்படுத்துதல் (documentation) மற்றும் தொழில்நுட்ப ஆதரவுப் பணிகளின் சில பகுதிகளை ஏஐ கருவிகளால் செய்ய முடியும்.
மேலும் படிக்க: வாகன ஓட்டிகளுக்கு முக்கிய செய்தி: லைசென்ஸ், ஆர்.சி புத்தகம் டவுன்லோடு செய்வது எப்படி?
நாம் வேலை செய்யும் முறையை மறுபரிசீலனை செய்து மாற்றியமைக்காவிட்டால், ஆரம்பநிலை வேலைவாய்ப்புகள் கணிசமாகக் குறைந்துவிடும் என்று CeRAI மற்றும் WSAI அமைப்புகளின் தலைவரான பி. ரவீந்திரன் எச்சரித்துள்ளார்.
ஏஐ வேலையை முழுவதுமாக பறிக்குமா?
ஆய்வின்படி, செயற்கை நுண்ணறிவு பணியாளர்களுககு நேரடி மாற்றாக பார்க்க கூடாது என்று ரவீந்திரன் கூறியுள்ளார். ஏஐ முழு வேலையையும் பறித்து விடாது. பெரும்பான்மையான வேலைகளில் உள்ள சில குறிப்பிட்ட பணிகளை மட்டுமே ஏஐ செய்ய முடியும். இதன் தாக்கம் செய்யும் வேலை, துறை ஏஐயின் விதிமுறைகள் மற்றும் அதன் பயன்பாட்டுச் செலவு ஆகியவற்றை பொறுத்தே அமையும் என ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சாதாரண மற்றும் வழக்கமான பணிகள் ஆட்டோமேஷன் செய்யப்படுவதால் இதனால், அந்த வேலைகள் குறையக்கூடும் என்று ஆய்வற்றை எச்சரிக்கிறது. பொதுவாக, நிறுவனங்களில் புதிதாகச் சேரும் புதிய பணியாளர்கள் சிக்கலான மற்றும் உயர் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, இதுபோன்ற அடிப்படைப் பணிகளைச் செய்வதன் மூலமே தங்கள் துறை சார்ந்த தொழில் அறிவையும் அனுபவத்தையும் வளர்த்துக் கொள்கின்றனர். தற்போது அந்த பணிகளை ஏஐ செய்வதால், தொழில்முறை வளர்ச்சிப் பாதை பலவீனமடையக் கூடும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு, பணிகளை மேம்படுத்துமா, வேலைகளை மறுவடிமைக்குமா அல்லது தொழிலாளர்கள் இடமாற்றம் செய்யுமா என்பது அதன் திறன், செலவு, ஒழுங்குமுறை மற்றும் நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை எவ்வாறு மறுசீரமைக்கத் தேர்வு செய்கின்றன என்பதைப் பொறுத்தே அமையும் என ஆய்வில் தெரிவிக்கப்ட்டுள்ளது. AI தொழில்நுட்பத்தின் நன்மைகளும் அபாயங்களும் புதிய மற்றும் அனுபவமிக்க ஊழியர்கள், சிறிய, பெரிய நிறுவனங்கள் இடையே சீரற்ற முறையில் இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
ஏஐ தொழில்நுட்பத்தினால் பறிக்க முடியாத வேலைகள்
- உளவியல் ஆலோசகர்கள்
- எழுத்தாளர்கள், கலைஞகர்கள்
- ஆராய்ச்சியாளர்கள்
- மருத்துவத்துறை ஊழியர்கள்
- ஆசிரியர்கள்
- பத்திரிகையாளர்க்ள்
- திறன்மிகு தொழிலாளர்கள்
- காவலர்கள், வழிக்கறிஞர்கள்
உள்ளிட்ட வேலைகளை ஏஐ தொழில்நுட்பத்தால் பறிக்கவே முடியாத ஒன்றாக இருப்பதாக தொழிற்நுட்ப வல்லுநர்கள் கருதுகின்றனர். அதே நேரத்தில், ஏஐ வளர்ச்சிக்கு ஏற்ப, பணியாளர்கள் தங்களது திறமைகளை வளர்த்துக் கொண்டால் மட்டுமே, நவீன காலத்தில் பணியில் நிலையாக இருக்க முடியும் என அறிவுறுத்துகின்றனர்.