• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /இந்தியா
  • /Explained : ‘முரசு’ புயல் பெயர் காரணம்! ஏன் இந்த பெயர் வந்தது? இதோ முழு விவரம்..

Explained : ‘முரசு’ புயல் பெயர் காரணம்! ஏன் இந்த பெயர் வந்தது? இதோ முழு விவரம்..

வங்கக்கடலில் உருவாகி, தீவிர புயலாக வலுபெற்றுள்ள ‘முரசு’ புயல் குறித்துதான் அனைவரும் பேசி வருகின்றனர். இதையடுத்து, இந்த முரசு புயல் குறித்த முக்கிய தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree M
Published: Nov 02, 2026, 04:46 PM IST|Updated: Nov 02, 2026, 04:55 PM IST
joinshare
Explained : ‘முரசு’ புயல் பெயர் காரணம்! ஏன் இந்த பெயர் வந்தது? இதோ முழு விவரம்..
Image Credit: Murasu Cyclone | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Zee Enterntainment நிறுவனத்தில் முக்கிய நியமனங்கள் - தலைமை AI அதிகாரியாக துஷார் வோரா நியமனம்

Zee Enterntainment நிறுவனத்தில் முக்கிய நியமனங்கள் - தலைமை AI அதிகாரியாக துஷார் வோரா நியமனம்

2

வாட்ஸ் அப்பில் PF சேவை.. பேலன்ஸ் செக் செய்வது எப்படி? முழு விவரம்

3

Explained : ‘முரசு’ புயல் பெயர் காரணம்! ஏன் இந்த பெயர் வந்தது? இதோ முழு விவரம்..

4

பிபிஓ, ஐடி வேலைகளுக்கு ஆப்பு.. தூக்கி சாப்பிடும் AI.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்! Explained

5

நள்ளிரவில் கரையை கடக்கும் 'முரசு' புயல்.. சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

வங்கக்கடலில் உருவாகி, தீவிர புயலாக வலுபெற்ற ‘முரசு’ புயல், அடுத்து ஆந்திர பிரதேசத்தின் கடற்கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதற்கு முன்னர் வந்த புயலுக்கு 'அர்னாப்’  என்று பெயர் வைக்கப்பட்டது. அந்த புயலின் கோரத்தாண்டவத்தால், 5 பேர் வரை உயிரிழந்தனர். இதையடுத்து இன்னொரு புயலும் அம்மாநிலத்தை தாக்க இருக்கிறது. இந்த புயலுக்கு தற்போது ‘முரசு’ என பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.

’முரசு’ பெயர் காரணம் என்ன?

இந்த புயலுக்கு ‘முரசு’ என பெயர் வைக்க, ஏற்கனவே இந்தியா பரிந்துரைத்திருந்தது. தற்போது, இந்த பெயர் பயன்படுத்தபடும் வரிசை வந்ததால், வங்கக்கடலில் உருவான புயலுக்கு ‘முரசு’ என பெயரிடப்பட்டிருக்கிறது. இதையடுத்து, எப்படி இந்த புயலுக்கு பெயரை பரிந்துரைத்தனர்? இந்த பெயர் தேர்வு செய்யப்பட்டது ஏன்? இது குறித்த முழு  விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.

முரசு பெயரை பரிந்துரைத்தவர்..

முரசு எனும் பெயரை, கர்நாடகாவின் வானிலை ஆய்வு மையத்தில் தலைவரான புவியரசன், சென்னை வானிலை ஆய்வு மையத்தில் பணியாற்றிய  போது, பரிந்துரைத்ததாக தெரிகிறது.

இது குறித்து அவரே ஒரு காணொலியை வெளியிட்டிருக்கிறார். அத்ஹில், புயல்களுக்கு பெயர் வைப்பதற்கு உலக வானிலை அமைப்பு என்னென்ன வழிமுறைகளை வகுத்துள்ளது என்பது குறித்தும் விளக்கமாக கூறியிருக்கிறார். இதன்படி, பரிந்துரைக்கப்படும் இந்த பெயர்கள் அரசியல், அரசியல் தலைவர்கள், மத நம்பிக்கைகள், கலாசாரம், பாலினம் உள்ளிட்டவற்றுடன் தொடர்பில்லாதவையாக இருக்க வேண்டுமாம். இது, உலகின் எந்த பகுதியை சேர்ந்த மக்களின் உணர்வுகளையும் புண்படுத்தும் வகையிலோ, கொடூர பொருள் தரும் வகையிலோ இருக்க கூடாதாம். மேலும், அந்த பெயர்கள் சுருக்கமாகவும், எளிதில் உச்சரிக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டுமாம்.

அதே போல,  அதிகபட்சம், எட்டு எழுத்துகளுக்குள் இருக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு பெயரின் உச்சரிப்பும் ஒலிப்பதிவும் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முரசு எனும் இந்த புயலின் பெயர், மேற்கூறிய விதிமுறைகளீன் அடிப்படையில்தான் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது என்கிறார், புவியரசன்.

முரசு: அர்த்தம்..

இப்போதுதான், செய்தியை தெரிந்து கொள்ளவும், தெரிவிக்கவும் வீடியோக்கள், ஆடியோக்கள், நாளிதழ்கள் உள்ளிட்டவை இருக்கின்றன. ஆனால், முந்தைய காலத்தில்  மன்னர் ஆட்சி இருந்த போது, ஒரு செய்தியை பொதுவெளியில் பொது மக்களுக்கு தெரியப்படுத்த, முரசு பயன்படுத்தப்பட்டது. பேரிடர் காலங்களின் போது மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய செய்திகளை அறிவிப்பதற்கான கருவியாகவும், அறிவிப்புக்ளை சரியான சமயத்தில் தெரிவிக்கும் கருவியாகவும் முரசு இருந்தது. இதனால் மக்களுக்கு பரிச்சியமானதாகவும், எளிதில் அடையாளம் காணக்கூடியதாகவும் ‘முரசு’ எனும் பெயர் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக புவியரசன் விளக்குகிறார்.

’முரசு’ மட்டுமல்லாமல், வேறு சில பெயர்களையும் தாங்கள் பரிந்துரைத்ததாக புவியரசன் தெரிவித்திருக்கிறார். விவசாயத்துக்காக பயன்படுத்தப்படும் ஏர், கலப்பை உள்ளிட்ட தமிழ் பெயர்களையும், கடல்-மீன்பிடிக்கு பயன்படுத்தபடும் ‘நாவாய்’ ‘படகு’ ஆகிய பெயர்களையும் தாங்கள் பரிந்துரைத்ததாக அவர் கூறியிருக்கிறார். அது மட்டுமன்றி, தாங்கள் ‘திருக்கை’ எனும் மீன் பெயரையும் பரிந்துரைத்ததாக கூறியிருக்கிறார்.

இந்த பரிந்துரைக்கபட்ட பெயர்களில் இருந்துதான் ‘முரசு’ எனும் பெயர் பட்டியலில் இடம்பெற்றதாக புவியரசன் தெரிவித்திருக்கிறார். இந்தியா பரிந்துரைத்த இந்த பெயரானது, சர்வதேச பட்டியலில் இடம்பெற்ற பின்னர், வரிசைப்படு தற்போது பயன்படுத்தப்பட்டதாக கூறியிருக்கிறார்.

அடுத்து வைக்கப்படப்போகும் பெயர் என்ன?

2020ல் இந்தியா, ஈரான், மாலத்தீவுகள், ஏமன் உள்ளிட்ட 12 நாடுகள் பெயர்களை பரிந்துரைத்திருக்கின்றன. அதில், இந்தியா பரிந்துரைத்த ‘முரசு’ எனும் பெயருக்கு பின்பு, ஈரான் பரிந்துரைத்த ’அக்வான்’ எனும் பெயர் வைக்கபப்ட இருக்கிறது.

மேலும் படிக்க | நள்ளிரவில் கரையை கடக்கும் 'முரசு' புயல்.. சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை!

யார் புயல்களுக்கு பெயர் வைக்கப்படுகிறது?

அரபிக்கடல், வங்கக்கடல் உள்ளிட்ட வட இந்திய பெருங்கடல் பகுதியில் உருவாகும் புயல்களூக்கு, பெயர் வைக்கும் நடைமுறை சர்வதேச ஒத்துழைப்பின் அடிப்படையில் செயல்படுகிறது. ஐக்கிய நாடுகள் மற்றும் உலக வானிலை அமைப்பு ஆகியவை, பசிபிக் மற்றும அசியா பிராந்தியத்துக்கான பொருளாதார மற்றும் சமூக ஆணையம் ஆகியவற்றின் கீழ் செயல்படும் வெப்பமண்டல புயல்கள் குழு இந்த பெயரிடும் நடைமுறையை ஒருங்கிணைக்கிறது.

இக்குழுவில், வங்கதேசம், இந்தியா, இரான், மாலத்தீவுகள், ஓமன், மியான்மர், பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா, இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அரபு, ஏமன், எமிரேட்ஸ் உள்ளிட்ட 13 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும், ஆங்கில Alphabetical வரிசையில் இடம் பெற்றிருக்கும்.

இந்த 13 நாடுகளும், தலா 13 பெயர்களை பரிந்துரைத்துள்ளன. அவற்றை ஒருங்கிணைத்து, மொத்தமாக 169 பெயர்கள் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கிறது. மொத்தம் 13 நாடுகள் பரிந்துரைத்த பெயர்களை ஆய்வு செய்து, இறுதி பட்டியலுக்கு ஒப்புதல் அளிப்பது, வெளிமண்டல புயல்கள் குழுவின் பணியாகும்.

மேலும் படிக்க | புயல்களுக்கு எப்படி பெயர் வைக்கிறார்கள்...? இது ஏன் அவசியம்...? Explained

பெயர் வைக்கும் நடைமுறை எப்போது தொடங்கியது?

அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் நடைமுறைக்கு 2000 ஆம் ஆண்டு ஓமனின் மஸ்கட்டில் நடைப்பெற்ற வெப்பமண்டல புயல்கள் குழு கூட்டத்தில் கொள்கி அளவில் முதலில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

2004ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதலாக வட இந்திய பெருங்கடல் பகுதியில் உருவாகும் புயல்களுக்கு பெயரிடம் நடைமுறை தொடங்கியது. முதலில் வங்கதேசம், இந்தியா, மாலத்தீவுகள், மியான்மர், பாகிஸ்தான், ஓமன், இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட 8 நாடுகள் பெயர்களை பரிந்துரைத்திருந்தன.

இந்த 13 நாடுகளும் வழங்கிய பெயர்களை கொண்ட புதிய பட்டியல் 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் மொத்தம் 169 பெயர்கள் வரை இடம் பெற்றிருந்தன.

புயலுக்கு சூட்டப்படும் பெயருக்கும், அதன் தீவிரம், வேகம், பாதிப்பு அல்லது அது கரையை கடக்கும் இடத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. புயலின் தீவிரத்தை அதன் காற்றின் வேகமும், காற்றழுத்தமும், நகரும் திசையும், மழைப்பொழிவும் அதன் வானிலை அளவீடுகளின் அடிப்படையில்தான் கணிக்க முடியும். இதற்கு பெயர் வைப்பது என்பது, அந்த புயலினை தனியாக அடையாளம் காணவும், அது குறித்த தகவல்களையும் எச்சரிக்கைகளையும் மக்களிடம் தெளிவாக கொண்டு செல்லவும் மட்டுமே ஒரு அடையாளமாக பெயர் வைக்கப்படுகிறது.

மேலும் படிக்க | Explainer: புகை மண்டலமான டெல்லி, அரசின் அதிரடி ஆக்‌ஷன்!! WFH, கட்டுமானத் தடை... நவம்பரில் புதிய விதிகள்

Add Zee News as a Preferred Source
TAGS:
India