ஏஐ 100 பேரை கொல்லும் ஆபத்தான டெக்னாலஜி! பில் கேட்ஸ் கொடுத்த வார்னிங்..
வருங்காலத்தில் ஏஐ எந்த வகையான உருவத்தை எடுக்கும் என்று பயத்தை உருவாக்கி இருக்கும் நேரத்தில் தற்போது பில்கேட்ஸ் இன்னொரு இடியை இறக்கி இருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.
வருங்காலத்தில் ஏஐ எந்த வகையான உருவத்தை எடுக்கும் என்று பயத்தை உருவாக்கி இருக்கும் நேரத்தில் தற்போது பில்கேட்ஸ் இன்னொரு இடியை இறக்கி இருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.
பிரபல தொழிலதிபரான பில்கேட்ஸ், ஏஐ துறையில் கடும் கட்டுப்பாடுகள் இல்லையெனில், அடுத்த சில ஆண்டுகளிலேயே 100 கோடி மக்களை ஏஐ தொழில்நுட்பம் அழித்து விடும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.
ஏஐயின் அசுர வளர்ச்சி!
செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ, மக்களால் கற்பனை செய்து பார்க்க இயலாத வண்ணம் பெரிதாக வளர்ந்துள்ளது. இந்த ஏஐ வந்த பிறகு, மனிதர்கள் செய்யக்கூடிய வேலை மிக குறைவதோடு, கடினமான வேலைகளும் சில மணித்துளிகளில் செய்யக்கூடியதாக இருக்கிறது. இதனால் பெரிதும் பயன் இருந்தாலும், பல துறைகளில் வேலை இழப்பை இது ஏற்படுத்த தொடங்கியிருக்கிறது.
மனிதர்களை கொல்லும்-பில்கேட்ஸ் கொடுத்த வார்னிங்:
ஏஐ, இனி வருங்காலத்தில் மனிதர்களை கட்டுப்படுத்தும் அளவிற்கு ஆதிக்கம் செலுத்த தொடங்கும் என அந்த துறையை சேர்ந்த நிபுணர்கள் ஏற்கனவே அச்சம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ஏஐ துறையில் கடும் கட்டுப்பாடுகள் இல்லையெனில், அடுத்த சில ஆண்டுகளில் 100 கோடி மக்களையாவது ஏஐ தொழில்நுட்பம் அழித்து விடும் என தொழிலதிபர் பில்கேட்ஸ் அச்சம் தெரிவித்துள்ளார்.
மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனரான இவர், இது குறித்து பேசுகையில் “ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அபரிமிதமானதாக இருப்பதாகவும் இதனால் அளப்பறிய பலன்கள் கிடைத்தாலும், அதில் ஆபத்தும் அதிகமாக இருப்பதாக கூறியிருக்கிறார். தவறானவர்களின் கைகளில் இந்த தொழில்நுட்பம் சிக்கினால், இது 100 கோடி மக்களை கொல்லும் அளவிற்கு, சக்தி வாய்ந்ததாக மாறும் எனவும், இது மிக சக்திவாய்ந்த ஆயுதமாக மாறும் அளவிற்கு வளர்ச்சி பெற்றிருப்பதாக கூறியிருக்கிறார்.
இதனால் வரும் ஆபத்துகளை தடுக்க, ஏஐ நிறுவனங்களின் சுய கட்டுப்பாடு மட்டும் போதாது என்று கூறும் அவர், ஒவ்வொரு நாட்டு அரசும், இதில் தலையிட்டு கடுமையான விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.
ஆந்த்ரோபிக் ஆய்வாளர்களின் அச்சம்..
ஆந்த்ரோபிக் எனும் ஏஐ நிறுவனத்தின் தலைமை நிர்வாகி, அதன் ஆராய்ச்சியாளர்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி மனித குலத்திற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என எச்சரித்து வருகின்றனர்.
இது குறித்து இந்த நிறுவனத்தின் முன்னாள் ஆராய்ச்சியாளர் ஜாகப் காக்ஸன் தெரிவிக்கையில், ஏஐ தொழில்நுட்பத்தால் மனித இனம் முற்றிலுமாக அழிய 10% க்கும் அதிகமான வாய்ப்பு இருப்பதாக வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்திருக்கிறார். ஏஐ நிறுவனங்கள் தங்களுக்குள் இருக்கும் போட்டியின் காரணமாக பாதுகாப்பை அலட்சியப்படுத்தி, ஆபத்தான ரிஸ்குகளை எடுப்பதாக கூறியிருக்கிறார். இதனால்தான் தன்னுடைய பதவியையும் ராஜினாமா செய்ததாக தெரிவித்துள்ளர்.