SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

3% டிஏ உயர்வு வந்தாச்சு: லெவல் 1-18 மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ அரியர் தொகை எவ்வளவு கிடைக்கும்?

DA Arrears Calculation: அகவிலைப்படியில் (Dearness Allowance) ஏற்பட்டுள்ள 3% உயர்வு மத்திய அரசு ஊழியர்களிடையே மகிழ்ச்சியைக் கொண்டுவந்துள்ளது. டிஏ மற்றும் டிஆர் -க்கான புதிய விகிதங்கள் ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Written By Sripriya Sambathkumar
Published: Oct 29, 2026, 11:43 AM IST | Updated: Oct 29, 2026, 12:01 PM IST
Join

DA Hike, DA Arrears: தீபாவளிக்கு முன்னதாக, நேற்று மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. நீண்ட எதிர்பார்ப்புக்கு பிறகு நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டது. அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தில் செய்யப்பட்டுள்ள இந்த உயர்வுக்கு பிறகு, ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் டிஏ மற்றும் டிஆர் 60% -இலிருந்து 63% ஆக அதிகரித்துள்ளது.

அகவிலைப்படி அதிகரிப்பு

அகவிலைப்படியில் (Dearness Allowance) ஏற்பட்டுள்ள இந்த உயர்வு மத்திய அரசு ஊழியர்களிடையே மகிழ்ச்சியைக் கொண்டுவந்துள்ளது. டிஏ மற்றும் டிஆர் -க்கான புதிய விகிதங்கள் ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சம்பள உயர்வு நிலுவைத் தொகை

டிஏ உயர்வு (DA Hike) ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் என்பதால், ஊழியர்களுக்கு ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் ஆகிய நான்கு மாதங்களுக்கான நிலுவைத் தொகை கிடைக்கும். உதாரணமாக அடிப்படைச் சம்பளம் ₹18,000 கொண்ட ஒரு ஊழியருக்கு, 3% டிஏ உயர்வு மாதத்திற்கு கூடுதலாக ₹540-க்கு சமமாகும். நான்கு மாதங்களுக்கான நிலுவைத் தொகையையும் சேர்த்தால், அந்த ஊழியர் தனது வரவிருக்கும் சம்பளத்துடன் கூடுதலாக ₹,2160-ஐப் பெறுவார்.

டிஏ அரியர் எவ்வளவு கிடைக்கும்?

டிஏ அரியர் தொகை மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய நிலையை பொறுத்து மாறுபடும். ஊதிய நிலையின் (Pay Level) அடிப்படையில் ஊழியர்களுக்கு எவ்வளவு டிஏ அரியர் தொகை கிடைக்கும் என இங்கே காணலாம்.

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% டிஏ உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல், சம்பளம் எவ்வளவு உயரும்?

நிலை 1 முதல் நிலை 18-இல் உள்ள ஊழியர்களுக்கான டிஏ அரியர் தொகை

ஊழியரின் ஊதிய நிலை (Pay Level)குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் (Basic Salary) மாதாந்திர அகவிலைப்படி உயர்வு (DA Hike)4 மாத அரியர் தொகை (DA Arrears)
நிலை 1ரூ.18,000 ரூ.540ரூ.2,160
நிலை 2ரூ.19,900ரூ.597ரூ.2,388
நிலை 3ரூ.21,700 ரூ.651 ரூ.2,604
நிலை 4ரூ.25,500ரூ.765ரூ.3,060
நிலை 5ரூ.29,200 ரூ.876ரூ.3,504
நிலை 6 ரூ.35,400 ரூ.1,062ரூ.4,248
நிலை 7ரூ.44,900ரூ.1,347ரூ.5,388
நிலை 8ரூ.47,600ரூ.1,428ரூ.5,712
நிலை 9ரூ.53,100ரூ.1,593ரூ.6,372
நிலை 10ரூ.56,100ரூ.1,683 ரூ.6,732
நிலை 11ரூ.67,700 ரூ.2,031ரூ.8,124
நிலை 12ரூ.78,800ரூ.2,364ரூ.9,456
நிலை 13 ரூ.1,23,100ரூ.3,693 ரூ.14,772
நிலை 13A ரூ.1,31,100ரூ.3,933ரூ.15,732
நிலை 14ரூ.1,44,200ரூ.4,326 ரூ.17,304
நிலை 15ரூ.1,82,200ரூ.5,466ரூ.21,864
நிலை 16 ரூ.2,05,400ரூ.6,162ரூ.24,648
நிலை 17ரூ.2,25,000ரூ.6,750ரூ.27,000
நிலை 18ரூ.2,50,000ரூ.7,500ரூ.30,000

மேலும் படிக்க | Explainer: பிஎம் கிசான் 24வது தவணை நாளை வருகிறது: பயனாளி பட்டியலில் பெயர் உள்ளதா? எப்படி அறிவது?

1.17 கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள்

மத்திய அரசின் இந்த அறிவிப்பால், சுமார் 1.17 கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பை வெளியிட்ட தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இதனை ஒரு "தீபாவளிப் பரிசு" என்று வர்ணித்தார்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணத்தில் (DR) செய்யப்பட்டுள்ள இந்த உயர்வு, 2026 ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும். அதாவது, ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு டிஏ அதிகரிப்பு ஜூலை மாதம் முதலே கணக்கிடப்பட்டு, அதற்கான பலன்கள் வழங்கப்படும்.

அரசாங்கத்திற்கு ஏற்படும் கூடுதல் நிதிச் சுமை என்ன?

இந்த அகவிலைப்படி உயர்வால், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி, அவர்களின் அடிப்படை ஊதியத்தில் 60 சதவீதத்திலிருந்து 63 சதவீதமாக அதிகரிக்கும். அதேபோல், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணமும் அவர்களின் அடிப்படை ஓய்வூதியத்தில் 60 சதவீதத்திலிருந்து 63 சதவீதமாக உயரும்.

அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தில் செய்யப்பட்டுள்ள இந்த மாற்றத்தால், அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ₹10,016.10 கோடி செலவு ஏற்படும். மத்திய அரசு ஆண்டுக்கு இருமுறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படியில் திருத்தம் செய்கிறது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் விலைவாசி மற்றும் பணவிக்கத்தை ஈடுசெய்ய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியும் அகவிலை நிவாரணமும் அளிக்கப்படுகின்றன.

மேலும் படிக்க | தமிழகத்தில் நீதிபதிகள் தேர்வில் அதிரடி மாற்றம்: தேர்ச்சி மதிப்பெண்கள் குறைப்பு – முழு விவரம்

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

ஸ்ரீப்ரியா சம்பத், 6 ஆண்டுகளுக்கும் மேல் மீடியாவில் பணியாற்றி வருகிறார். இவர், வணிகம் மற்றும் தனிநபர் நிதி (Personal Finance) சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். மத்திய பட்ஜெட்டுகள், வங்கித் துறை, வருமான வரி, பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மத்திய அரசு ஊழியர்கள், ஊதியக் குழுக்கள் (Pay Commissions), ஓய்வூதியத் திட்டங்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் முக்கியக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.எழுத்தை வாசகர்களோடு இணைவதற்கான ஒரு சிறந்த பாலமாகக் கருதும் இவர், அவர்களின் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார். வாசகர்களுடன் இயல்பான, உண்மையான மற்றும் நேர்மையான தொடர்பைக் கொண்டிருப்பதே இவரின் முதன்மை இலக்காகும். பணி நேரத்தைத் தாண்டி, புத்தகங்கள் வாசிப்பது, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது மற்றும் அறிவுசார் விவாதங்களில் பங்கேற்பது இவருக்கு மிகவும் பிடித்தமானவை.

ZEENEWS TRENDING STORIES