63% அகவிலைப்படி: இன்று வருகிறதா டிஏ உயர்வு அறிவிப்பு? அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்?
DA Hike News: அடுத்த அகவிலைப்படி திருத்தம் ஜூலை 1, 2026 முதல் அமலுக்கு வரும். இன்று (ஆக்டோபர் 6, செவ்வாய்க்கிழமை) மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தின் முடிவில், அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படக்கூடும் என கூறப்படுகின்றது.
DA Hike: நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களும் ஜூலை மாதம் முதலான அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய செய்திக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த நிலையில், மத்திய அரசு இந்த அறிவிப்பை இன்று வெளியிடக்கூடும் என சில அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டிஏ உயர்வுக்கான எதிர்பார்ப்பு
கடந்த சில வாரங்களாகவே டிஏ உயர்வுக்கான (DA Hike) அறிவிப்பு எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது. ஜூலை 2026-க்கான திருத்தத்தில் 3% உயர்வு இருக்கும் என நம்பப்படுகின்றது. இதன் மூலம் தற்போதைய விகிதமான அடிப்படை ஊதியத்தில் 60% ஆக உள்ள அகவிலைப்படி 63% ஆக அதிகரிக்கும்.
அகவிலைப்படி (Dearness Allowance) திருத்தம் ஜூலை 1, 2026 முதல் அமலுக்கு வரும். எனினும், டிஏ உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை. இன்று (ஆக்டோபர் 6, செவ்வாய்க்கிழமை) மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. ஆகையால், இந்த கூட்டத்தின் முடிவில், அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படக்கூடும் என கூறப்படுகின்றது. எனினும், அகவிலைப்படி அதிகரிப்புக்கான முன்மொழிவு இன்றைய அமைச்சரைக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டுள்ளதா என்பது இன்னும் தெரியவில்லை.
மேலும் படிக்க | ஆதாரில் பெயர் மாற்ற புது ரூல்ஸ்.. இனி இந்த ஆவணங்கள் கட்டாயம் - UIDAI அதிரடி
3% அகவிலைப்படி உயர்வுக்கான கணக்கீடு
- 7-வது ஊதியக் குழுவின் கட்டமைப்பின் கீழ், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி திருத்தம் 'தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின்' (CPI-IW) அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
- ஜனவரி முதல் ஜூன் 2026 வரையிலான CPI-IW தரவுகளின் அடிப்படையில், ஜூலை 2026-க்கான அகவிலைப்படி விகிதம் சுமார் 63%-ஆக அமைகிறது.
- ஜூலை மாத அகவிலைப்படி கணக்கீட்டிற்குத் தேவையான 12 மாத சுழற்சியை நிறைவு செய்யும் வகையில், ஜூன் 2026-ல் CPI-IW குறியீடு 151.9-ஆக இருந்தது.
- கணக்கீட்டின்படி சுமார் 63.75% என்ற எண் கிடைத்தாலும், விதிகளின்படி வழங்கப்பட வேண்டிய விகிதம் 63%-ஆக முழு எண்ணாக மாற்றப்பட வாய்ப்புள்ளது.
- தற்போது, ஊழியர்கள் 60% விகிதத்தில் அகவிலைப்படியைப் பெறுகின்றனர் (இது ஜனவரி 2026 திருத்தத்திற்குப் பிறகு நிர்ணயிக்கப்பட்டது).
- 3% டிஏ உயர்வு அகவிலைப்படியை 63% ஆக அதிகரிக்கும்.
டிஏ 3% உயர்ந்தால் சம்பள உயர்வு எவ்வளவு இருக்கும்?
அகவிலைப்படி அடிப்படை ஊதியத்தின் அடிப்படையில் மட்டுமே கணக்கிடப்படுகிறது, கையில் கிடைக்கும் மொத்தச் சம்பளத்தின் அடிப்படையில் அல்ல என்பதை ஊழியர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தின் அடிப்படையில் சம்பளம் எவ்வளவு உயரும் என்பதை இங்கே காணலாம்.
3% அகவிலைப்படி உயர்வால் உங்கள் மாதச் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்?
உதாரணமாக, ₹50,000 அடிப்படை ஊதியம் பெறும் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில், அகவிலைப்படியின் (DA) காரணமாக மாதந்தோறும் ₹,1500 உயர்வு ஏற்படும். இருப்பினும், வருங்கால வைப்பு நிதி (PF), வரிகள் போன்ற பிற படிகள் மற்றும் பிடித்தங்கள் காரணமாக, கையில் கிடைக்கும் சம்பளத்தில் (take-home pay) ஏற்படும் உண்மையான உயர்வு சற்று மாறுபடலாம்.
சம்பள உயர்வு சுருக்கமாக....
அகவிலைப்படி (DA) 63% ஆக உயர்ந்தால், பல்வேறு அடிப்படை சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு எவ்வளவு இருக்கும் என இங்கே காணலாம்:
| அடிப்படை சம்பளம் | அகவிலைப்படி | மொத்த சம்பளம் |
| ₹50,000 அடிப்படைச் சம்பளம் | ₹31,500 | ₹81,500 |
| ₹60,000 அடிப்படைச் சம்பளம் | ₹37,800 | ₹97,800 |
| ₹70,000 அடிப்படைச் சம்பளம் | ₹44,100 | ₹1,14,100 |
| ₹80,000 அடிப்படைச் சம்பளம் | ₹50,400 | ₹1,30,400 |
| ₹1 லட்சம் அடிப்படைச் சம்பளம் | ₹63,000 | ₹1,63,000 |
ஜூலை 2026 முதல் அரியர் தொகை
மத்திய அரசு அகவிலைப்படி உயர்வை எப்போது அறிவித்தாலும், இந்த மாற்றமானது ஜூலை 1, 2026 முதல் அமலுக்கு வரும். அரசின் ஒப்புதல் தாமதமாகி, அக்டோபர் அல்லது நவம்பர் மாத சம்பளத்துடன் இந்தத் தொகை வழங்கப்பட்டாலும், ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கான நிலுவைத் தொகையை ஊழியர்கள் மொத்தமாகப் பெறுவார்கள்.
அதாவது, அறிவிப்பில் தாமதம் ஏற்படும் பட்சத்தில், ஊழியர்கள் நடப்பு மாதத்திற்கான உயர்த்தப்பட்ட அகவிலைப்படியுடன், ஜூலை முதலான முந்தைய மாதங்களுக்கான நிலுவைத் தொகையையும் சேர்த்துப் பெறுவார்கள்.
ஜனவரி 2027-இல் அடுத்த அகவிலைப்படி திருத்தம்
- தொழிலாளர் நலத்துறையின் (Labour Bureau) சமீபத்திய தரவுகளின்படி, CPI-IW குறியீடானது ஜூலை 2026-ல் 153.2 ஆகவும், ஆகஸ்ட் 2026-ல் 154.4 ஆகவும் இருந்தது.
- இருப்பினும், இந்த புதிய புள்ளிவிவரங்கள் ஜூலை 2026-க்கான அகவிலைப்படியைப் பாதிக்காது.
- ஜனவரி 2027-ல் நடைபெறவுள்ள அடுத்த அகவிலைப்படி திருத்தத்திற்கு இவை அடிப்படையாக அமையும்.
தற்போது, மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காகக் காத்திருக்கின்றனர். நிதி அமைச்சகம் அல்லது மத்திய அமைச்சரவை அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளிக்கும் வரை, இந்தப் புள்ளிவிவரங்கள் வெறும் கணக்கீட்டு மதிப்பீடுகளாகவே கருதப்பட வேண்டும். அரசின் அறிவிப்புக்கு பிறகுதான் உண்மையான அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய தெளிவு கிடைக்கும்.
மேலும் படிக்க | தீபாவளி Jackpot? அரசு ஊழியர்களுக்கு ரூ.21,000 போனஸ்? வெளியான முக்கிய தகவல்!