• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /பயனுள்ள தகவல்கள்
  • /ஜிம்மே போக வேண்டாம்.. உடலை ஆரோக்கியமாக வைக்க 9 எளிய வழிகள்!

ஜிம்மே போக வேண்டாம்.. உடலை ஆரோக்கியமாக வைக்க 9 எளிய வழிகள்!

கடுமையான உடற்பயிற்சிகள் இல்லாமல், தினசரி பழக்கங்கள் முலமே நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும் என கூறிய பிரபல இன்ஃபுளூயன்சர் ஆனி, அதற்கான 9 எளிய வழிகளையும் பகிர்ந்துள்ளார்.

Reported ByR BalajiEdited ByR Balaji
Published: Aug 09, 2026, 12:15 AM IST|Updated: Aug 09, 2026, 12:19 AM IST
joinshare
ஜிம்மே போக வேண்டாம்.. உடலை ஆரோக்கியமாக வைக்க 9 எளிய வழிகள்!
Image Credit: Image Source: X

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Madurantakam By-Election: மரகதம் குமரவேல் முன்னிலை.. தவெக எழுச்சிக்கு பாமக, விசிக வாக்குகள் காரணமா?

Madurantakam By-Election: மரகதம் குமரவேல் முன்னிலை.. தவெக எழுச்சிக்கு பாமக, விசிக வாக்குகள் காரணமா?

2

ISRO வேலைவாய்ப்பு: மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

3

ரேஷன் கார்டு இருக்கா? இந்த வசதி இருப்பதை மறக்காதீங்க.. ONORC மூலம் கிடைக்கும் முக்கிய நன்மை

4

அமெரிக்காவின் திடீர் தடை... இந்திய ஊழியர்களுக்கு இனி கிரீன் கார்டு கிடைக்காதா? Explained

5

NZ ஒருநாள் தொடர்: 2 இந்திய அணிகள்.. புவி, ஷமிக்கு வாய்ப்பு? முழு விவரம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

உடல் எடையை குறைத்து ஆரோக்கியமாக இருப்பதற்கு கடுமையான உடற்பயிற்சிகளோ அல்லது கடுமையான உணவு கட்டுப்பாடுகளோ தேவையில்லை. மாறாக நமது தினசரி பழக்கவழக்கங்களே போதுமானவை. அதுவே நம்மை ஆரோக்கியாமாக வைத்துக்கொள்ள பெரிதும் உதவும்.

அந்த வகையில், ஆனி (42) என்ற பிரபல உடற்பயிற்சி இன்ஃபுளூயன்சர், நமது உடலை ஆரோக்கியமாக பராமரிக்க உதவும் 9 எளிய தினசரி பழக்கங்களை பகிர்ந்துள்ளார்.

அவர் இன்ஸ்டாகிராம் வெளியிட்டிருந்த பதிவில், "எனக்கு 42 வயதாகிறது. நான் தினமும் நீண்ட தூரமோ அல்லது நீண்ட நேரமோ நடப்பதில்லை. அதேபோல் எந்த விதமான ஊசிகளையோ பயன்படுத்துவதில்லை. தினமும் நான் பின்பற்றும் 9 எளிய விஷயங்கள் மட்டுமே என்னை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன" என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

1. தினமும் 12 மணி நேரம் ஃபாஸ்டிங்

இரவில் குறைந்தபட்சம் 12 மணி நேரம் உணவு உண்ணாமல் இருக்க வேண்டும். அதாவது இரவு 8 மணிக்கு சாப்பிட்டால், அதன் பின்னர் எதுவும் சாப்பிடாமல் அடுத்த நாள் காலை 08 மணிக்கே சாப்பிட வேண்டும். இது போன்று செய்தால், செரிமானம் தொடர்பான பிரச்சனை ஏதும் இருக்காது. இதன் மூலம் உடம்பில் உள்ள இன்சுலின் அளவு குறையும்.

2. வைப்ரேஷன் பிளேட் மற்றும் ரெட் லைட் தெரபி

தினமும் காலையில் எழுந்தவுடன் ஒரு 15 நிமிடங்கள் வைப்ரேஷன் பிளேட் பயிற்சி மற்றும் முகத்திற்கு ரெட் லைட் தெரபி கொடுக்க வேண்டுமாம். இது ரத்த ஓட்டத்தை சீராக்கி, தசை மற்றும் மூட்டு வலிகளை குறைக்க உதவுகிறது.

3. எலுமிச்சை தண்ணீர்

தினமும் காலையில் எழுந்ததும் முதலில் 500 மி.லி. சுடான எலுமிச்சை நீரை குடிக்க வேண்டும். இது இரவில் ஏற்பட்ட நீரிழப்பை சரி செய்யும்.

4. புரதம் மற்றும் நார்ச்சத்து

தினமும் குறைந்தபட்சம் 135 கிராம் புரதச்சத்தும் (Protein), 35 கிராம் நார்ச்சத்து கொண்ட உணவுகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

5. எடை பயிற்சி

வாரத்திற்கு 4 நாட்களாவது எடை பயிற்சிகளை (Weight Lifting) மேற்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பிறகு படிப்படியாக எடையை உயர்த்திக்கொண்டு பயிற்சி செய்ய வெண்டும். இது நமது தசைகளை வலுப்படுத்தும்.

6. உணவு

சர்க்கரை மற்றும் குளுட்டன் குறைந்த உணவுகளுக்கே முன்னுரிகை கொடுக்க வேண்டும்.

7. சாப்பிடும் உணவின் சத்துகளை கணக்கிடுவது

தினமும் தான் சாப்பிடும் உணவில் புரதம், மாவுச்சத்து மற்றும் கொழுப்பு ஆகியவை சரியான அளவில் உள்ளதா என்பதை கணக்கிட்டு உட்கொள்ள வேண்டும்.

8. செரிமானத்தை சீராக்கும் திரவங்கள்

சாப்பிடும் உணவில் உள்ள ஊட்டச்சத்துகள் உடலில் முழுமையாகச் சேரவும், வயிறு உப்புசம் அல்லது செரிமானக் கோளாறுகள் ஏற்படாமல் இருக்கவும் செரிமானத்திற்கு உதவும் திரவங்கள்/ஊக்கிகளை உட்கொள்ள வேண்டும்.

9. உடன் மாற்றங்களை கண்காணிப்பது

வெறும் உடல் எடையை மட்டும் பார்க்காமல், தசை வளர்ச்சி, கொழுப்பு, நீர்ச்சத்து மற்றும் கலோரி அளவு போன்ற உடலின் உள்மாற்றங்களை தவறாமல் கண்காணிக்க வேண்டும் என ஆனி பதிவிட்டுள்ளார்.

கடினமான வழிமுறைகளை விட, இதுபோன்று தினமும் செய்யக்கூடிய எளிய பழக்கவழக்கங்களே நீண்ட கால ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். 
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Health Tips