SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

தெரியாத நம்பரில் இருந்து போன் வந்தால்..யாரென ஈசியாக தெரிந்து விடும்! DoT புது ரூல்ஸ்…

நமக்கு, தெரியாத நம்பரில் இருந்து போன் வரும் போது, பல சமயங்களில் எதிர்முனையில் பேசும் நபர் யாரென தெரிய வாய்ப்பில்லை. ஆனால், புதிய தொலைத்தொடர்புத் துறையின் சமீபத்திய (DoT) உத்தரவு தற்போது அதை மாற்றியிருக்கிறது.

Written By Yuvashree M
Published: Oct 15, 2026, 04:09 PM IST | Updated: Oct 15, 2026, 04:15 PM IST
Join

“நாங்க பேங்க்ல இருந்து பேசுறோம், உங்க கார்ட் மேல இருக்ற 16 நம்பர கொஞ்சம் சொல்றீங்களா..?” என பிறருக்கு போன் செய்து அவர்களை ஏமாற்றுபவர்களுக்கு ஆப்பு வைக்கும் வகையில் புதிய தொலைத்தொடர்புத் துறையின் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. நவம்பர் 1ஆம் தேதி முதல், உங்களுக்கு தெரியாத நம்பரில் இருந்து யார் போன் செய்தாலும் அவர்களுடைய பெயர் ஸ்கிரீனில் தெரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எண் மற்றும் பெயர் ஸ்க்ரீனில் தெரியும்!

CNAP எனப்படும் அழைப்பு பெயர் வழங்கும் சேவை தொடர்பான, வழிகாட்டுதல் அக்டோபர் 13 அன்று வெளியிடப்பட்டது. அதில், அனைத்து சேவை பகுதிகளிலும், தகவல் தொடர்பு சேவைகளை வழங்குவதற்கான உரிமம் அல்லது அங்கீகாரத்தை கொண்டுள்ள அனைத்து ஆப்ரேட்டர்களுக்கும் பொருந்தும்.

முன்னர், நம் மொபைலில் சேமித்து வைக்காத நம்பரில் இருந்து யாரேனும் அழைத்தால் அவருடைய மொபைல் எண் மட்டுமே திரையில் தெரியும். ஒரு சில சமயங்களில் ஐபோன் மொபைல்களில் அழைப்பவரின் பெயர் தெரிந்து விடும். ஆனால் இப்போது புதிய நெறிமுறைகளின்படி, உள்வரும் அனைத்து உள்நாட்டு அழைப்புகளிலும், அழைப்பவரின் எண் மற்றும் பெயர் ஆகிய இரண்டுமே காட்டப்படும்.இதுவே அந்த அழைப்பு சர்வதேச அழைப்பாக இருந்தால் ஸ்க்ரீனில் “International Call" என்று காண்பிக்கும்.

எந்த நெட்வர்க்குகள் மூலம் இந்த சேவையை பெறலாம்?

இந்த உத்தரவின்படி, ஏர்டெல், ஜியோ மற்றும் வோடோபோன் ஐடியா போன்ற தொலைத்தொடர்பு சேவைக வழங்குநர்கள், வயர்லெஸ் சர்வீஸின் மூலமாக இந்த முறையை பரிசோதித்து பார்த்துள்ளனர்.

மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் எவ்வாறு கணக்கிடப்படுகிறது? யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?

இந்த மாற்றம்  4 G மற்றும் உயர்தலைமுறை வயர்லெஸ் வலையமைப்புகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. பிற்காலத்தில் இந்த வசதியை 2ஜி, 3ஜி மற்றும் தரைவழித்தொலை பேசி வலையமைப்புகளுக்கும் விரிவுபடுத்துவது குறித்து அரசு பரிசீலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது எவ்வாறு செயல்படும்?

இந்த சேவையை இயக்க, ஒவ்வொரு தொலைத்தொடர்பு நிறுவனமும், சந்தாதாரரின் பெயர்களை தொலைபேசி எண்களுடன் இணைக்கும் ஒரு புதிப்பிக்கப்பட்ட தரவுதளத்தை (Data) பராமரிக்க வேண்டும்.

ஒரு அழைப்பு மேற்கொள்ளப்படும் போது, அழைப்பை பெறுபவரின் நெட்வொர்க், பதிவு செய்யப்பட்ட பெயரை பெறுவதற்காக, அழைப்பவரின் நிறுவனத்தின் ரியல் டைமில் கேட்கும்.

DoT (தொலைத்தொடர்பு துறையின்) வழிக்காட்டுதல்களின் படி, அழைப்பு முடிந்த உடனேயே பெறப்பட்ட பெயர்காஇ ஆப்ரேட்டர்கள் நீக்க வேண்டும். அவற்றை அவர்கள் வைத்திருக்க கூடாது என்பதை உறுதி செய்யும் Security-by-Design கட்டமைப்பை பின்பற்ற வேண்டும்.

மேலும், அழைப்பின் தரத்தை பாதிக்காமல் தங்களுடைய தரவு தளங்களும் நெட்வொர்க்குகளும் இந்த தேடல்களை விரைவாக கையாளும் திறனையும் ஆப்ரேட்டர்கள் உறுதி செய்ய வேண்டும்.

ஒரு சில சமயங்களில், மொத்த மொபைல் இணைப்புகளை கொண்ட நிறுவனங்களுக்கு, சேவை வழங்குநரின் பதிவேடுகளில் இருக்கும் பெயருக்கு பதிலாக, ஒரு விருப்ப பெயரை காண்பிக்கும் தேர்வும் வழங்கப்படலாம். அந்த பெயரானது, குறிப்பிட்ட சந்தாதாரரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட ஒரு வர்த்தக முத்திரையுடனோ, அல்லது ஜிஎஸ்டி இணையதளத்தில் சரிபார்க்கப்பட்ட ஒரு வர்த்தக பெயருடனோ கண்டிப்பாக பொருந்தியிருக்க வேண்டும்.

மேலும் படிக்க | மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகை: விண்ணப்பிப்பது எப்படி?

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.

ZEENEWS TRENDING STORIES