நவம்பர் மாதம்: வங்கிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை.. முழு லிஸ்ட் இதோ!
November Bank Holidays: நவம்பர் மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என்பது குறித்து விரிவாக இந்த தொகுப்பில் பார்ப்போம். இதன் மூலம், வாடிக்கையாளர்கள் அதற்கு ஏற்ப தங்கள் பணிகளை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். நவம்பர் மாதத்தில் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது. இதுகுறித்த பட்டியலை இந்த தொகுப்பில் பார்ப்போம்.
November Bank Holidays: நாடு முழுவதும் இந்திய ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் செயல்பட்டு வருகிறது. வங்கிகளில் லட்சக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். ஆர்பிஐ நாட்காட்டியின்படி, ஒவ்வொரு மாதத்திலும் வங்கிகளுக்கு குறிப்பிட்ட நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நவம்பர் மாதத்தில் எத்தனை நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.
நவம்பரில் 15 நாட்கள் வங்கிளுக்கு விடுமுறை
நவம்பர் மாதம் இன்று தொடங்கியுள்ளது. நவம்பர் மாதத்தில் தீபாவளி, குருநானக் ஜெயந்தி உள்ளிட்ட பண்டிகைகள் வருகின்றன. இதன் காரணமாக, நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் வங்கிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் நாட்காட்டியின்படி, 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை ஒவ்வொரு மாநிலங்களுக்கும் வேறுபடும்.
ஒரு மாநிலத்தில் வங்கிகள் மூடப்படிருப்பதும், நாட்டின் பிற மாநிலங்களில் வங்கிகள் செயல்படும். எனவே, எந்தெந்த நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை என்பது குறித்து பார்ப்போம்.அதன்படி, நவம்பர் 1, 8,15,22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். நாடு முழுவதும் இரண்டாவது சனிக்கிழமை நவம்பர் 14ஆம் தேதி, நவம்பர் 28ஆம் தேதி நான்காவது சனிக்கிழமை வங்கிளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநில வாரியாக பார்க்கையில், நவம்பர் 9,10,11,13,16,20,23,24,27ஆம் தேதிகளில் பண்டிகை கால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி, லக்ஷ்மி பூஜை, கோவர்தன் பூஜை, வாங்கலா திருவிழா, சத் பூஜை, இகாஸ்-பக்வால், செங் குட் ஸ்நேம், குருநானக் ஜெயந்தி, கார்த்திகை பூர்ணிமா மற்றும் கனகதாச ஜெயந்தி உள்ளிட்ட பல்வேறு பண்டிகைகள் மற்றும் பிராந்திய நிகழ்வுகளுக்கு இந்த விடுமுறைகள் கடைபிடிக்கப்படும்.
மாநில வாரியாக வங்கிகளுக்கு எப்போது விடுமுறை?
| நாட்கள் | பண்டிகை நாட்கள் | எந்த மாநிலத்தில் வங்கிகளுக்கு விடுமுறை |
| நவம்பர் 01 | புதுச்சேரி விடுதலை நாள்/ஹரியான தினம்/ கன்னட ராஜ்யோத்சவா | புதுச்சேரி, மணிப்பூர், ஹரியானா, கர்நாடகா |
| நவம்பர் 02 | நோங்க்ரெம் நடனம் | மேகாலயா |
| நவம்பர் 09 | லக்ஷமி பூஜை/விக்ரம் சம்வந்த் புத்தாண்டு தினம்/கோவர்தன் பூஜை | திரிபுரா, மத்திய பிரதேசம், சண்டிகர், சிக்கிம், மணிப்பூர், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் |
| நவம்பர் 10 | தீபாவளி/கோவர்தன் பூஜை/லக்ஷமி பூஜை/விக்ரம் சம்வந்த் புத்தாண்டு தினம் | குஜராத், உத்தரகாண்ட், மகாராஷ்டிரா, கர்நாடகா, சிக்கிம் |
| நவம்பர் 11 | லக்மி பூஜை/நிங்கோல் சக்கௌபா/பைடூஜ்/சித்ரகுப்த் ஜெயந்தி | சிக்கிம், மணிப்பூர், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், இமாச்சல பிரதேசம் |
| நவம்பர் 13 | வங்கால திருவிழா | மேகாலயா |
| நவம்பர் 16 | சத் பூஜை/சூரிய ஷஷ்டி தல சத் | பீகார் மற்றும் ஜார்க்கண்ட் |
| நவம்பர் 20 | இகாஸ் - பக்வால் | உத்தரகாண்ட் |
| நவம்பர் 23 | செங் குட் ஸ்னெம் | மேகாலயா |
| நவம்பர் 24 | குருநானக் ஜெயந்தி/கார்த்திகா பூர்ணிமா/ரஹஸ் பூர்ணிமா | மிசோரம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், நாகலாந்து, மேற்கு வங்கம், உத்தர பிரதேசம், சண்டிகர், உத்தரகாண்ட், தெலங்கானா, டெல்லி, சத்தீஸ்கர் |
| நவம்பர் 27 | கனகதாச ஜெயந்தி | கர்நாடகா |
தமிழகத்தில் எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை?
தமிழகத்தில் மொத்தம் பண்டிகை நாட்கள், வார இறுதி நாட்களுடன் சேர்த்து 7 நாட்கள் வங்கிளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நவம்பர் 1 (ஞாயிறு), நவம்பர் 8 (தீபாவளி), நவம்பர் 15 (ஞாயிறு), நவம்பர் 22 (ஞாயிறு), நவம்பர் 29 (ஞாயிறு), நவம்பர் 14 (சனிக்கிழமை), நவம்பர் 28 (4வது சனிக்கிழமை) என 7 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் சேவைகள் தொடர்ந்து இயங்கும்
விடுமுறை நாட்களில் வங்கிகள் மூடப்பட்டு இருந்தாலும், இணை வங்கிச் சேவை, மொபைல் வங்கிச் சேவை, யுபிஐ, நெட் பேக்கிங் போன்ற டிஜிட்டல் வங்கி சேவைகள் வழக்கம்போல் செயல்படும். இருப்பினும், ரொக்க டெபாசிட், காசோலை பரிவர்த்தனைகள் அல்லது வங்கிக்கு நேரில் சென்று செய்ய வேண்டிய பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க: தங்கம் விலை இன்னும் குறையும்.. எவ்வளவு தெரியுமா? ஆனந்த் சீனிவாசன் கணிப்பு!