• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /செஞ்சி ஹேமாவதி... காக்கிநாடாவின் ஞானேஸ்வரி... மாயமான 2 சிறுமிகளும்; தொடரும் மர்மங்களும் Explained

செஞ்சி ஹேமாவதி... காக்கிநாடாவின் ஞானேஸ்வரி... மாயமான 2 சிறுமிகளும்; தொடரும் மர்மங்களும் Explained

செஞ்சியில் மாயமான 7 வயது சிறுமி ஹேமாவதி மற்றும் ஆந்திராவில் காணாமல் போன 2 வயது சிறுமி ஞானேஸ்வரி வழக்குகளின் ஒற்றுமைகள் மற்றும் அந்த வழக்குகளின் லேட்டஸ்ட் அப்டேட்ஸை இங்கு காணலாம்.

Written BySudharsan G
Published: Nov 01, 2026, 03:17 PM IST|Updated: Nov 01, 2026, 03:29 PM IST
joinshare
செஞ்சி ஹேமாவதி... காக்கிநாடாவின் ஞானேஸ்வரி... மாயமான 2 சிறுமிகளும்; தொடரும் மர்மங்களும் Explained
Image Credit: Gingee Hemavathy (Left), Kakinada Gyaneshwari (Right) | Image Source : X

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
CM Health Insurance Scheme: ஏழைகளுக்கு இனி ரூ.25 லட்சம் வரை சிகிச்சை இலவசம்!  Explained

CM Health Insurance Scheme: ஏழைகளுக்கு இனி ரூ.25 லட்சம் வரை சிகிச்சை இலவசம்! Explained

2

கடன் வாங்கிவிட்டு பணிமாறுதலில் செல்லும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு செக்!

3

செஞ்சி ஹேமாவதி... காக்கிநாடாவின் ஞானேஸ்வரி... மாயமான 2 சிறுமிகளும்; தொடரும் மர்மங்களும் Explained

4

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசு வேலை! கைநிறைய சம்பளம்.. எப்படி விண்ணப்பிக்கலாம்?

5

தூய்மைப் பணியாளர் குடும்பங்களுக்கு தமிழக அரசின் ஜாக்பாட்: 20% மானியத்துடன் கடனுதவி

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஏழு வயது சிறுமி காணாமல் போன வழக்கு கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் அதிக கவனம் பெற்று வருகிறது. இதேபோல், ஆந்திர பிரதேசத்திலும் கடந்த சில மாதங்களுக்கு முன் காணாமல் போன சிறுமி ஒருவரும் இன்றுவரை கிடைக்கவில்லை.

இந்த இரண்டு சம்பவங்களும் மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளன. இரு குழந்தைகளையும் கண்டுபிடிக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், இன்னும் இருவரின் இருப்பிடம் குறித்த உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை. அந்த வகையில், இந்த இரண்டு சம்பவங்களின் முழு விவரம் மற்றும் இரண்டு வழக்குகளின் விசாரணையின் தற்போதைய நிலை ஆகியவற்றை இங்கு விரிவாக காணலாம்.

மேலும் படிக்க | 20 நாட்களாக கிடைக்காத சிறுமி! என்ன தான் நடந்திருக்கும்? வழக்கின் அப்டேட் 

காக்கிநாடா சிறுமி மாயமானது எப்படி?

  • ஆந்திராவின் காக்கிநாடா மாவட்டம் துனி அருகே உள்ள சி. அக்ரஹாரம் பகுதியில் வசித்த சுங்கரா ஞானேஸ்வரி (2) என்ற சிறுமி, கடந்த ஜூன் 6ஆம் தேதி காணாமல் போனார். அவரது பெற்றோர் கணேஷ், பவானி ஆகியோர் பாமாயில் தோட்டத்தில் பணியாற்றி வந்தனர்.
  • கடந்த ஜூன் 6ஆம் தேதி அன்று பவானி வீட்டில் சமைத்து வந்தார், கணேஷ் தோட்டத்தில் வேலை செய்து வந்தார். தந்தையின் கண்காணிப்பில் மகள் இருக்கிறாள் என தாயும், தாயின் கண்காணிப்பில் மகள் இருக்கிறாள் என தந்தையும் நினைத்துள்ளனர். சிறிது நேரத்திற்கு பின்னரே குழந்தையை காணவில்லை என்பது இருவருக்கும் தெரியவந்தது.
  • அன்று மதியம் வளர்ப்பு நாய் உடன் சிறுமி சென்றதாக கிராமத்துமக்கள் பார்த்துள்ளனர். சில நாட்களில் அந்த நாயும் உயிரிழந்த நிலையில் கண்டறியப்பட்டது.
  • காவல்துறையினர், மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், வனத்துறையினர் என 400க்கும் மேற்பட்டோர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். டிரோன்கள், சிசிடிவி காட்சிகள், செல்போன் கோபுரத் தரவுகள் உள்ளிட்டவற்றின் உதவியுடன் விசாரணை நடைபெற்றது. இருப்பினும், குழந்தை என்ன ஆனார் என இன்றுவரை தெரியவில்லை.

செஞ்சி சிறுமி மாயமானது எப்படி?

  • தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ல ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த ஹேமலதா என்ற ஹேமாவதி (7) சிறுமி, கடந்த அக்டோபர் 11ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடினார். அக்டோபர் 12ஆம் தேதி அதிகாலையில் வீட்டில் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்தபோது சிறுமி காணாமல் போனதாக புகாரில் கூறப்படுகிறது.
  • இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததுடன் கிராமத்திலும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. முதல் 10 நாட்களில் எவ்விதமான குறிப்பிடத்தக்க துப்பும் கிடைக்கவில்லை. இதையடுத்து வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
  • பெற்றோர், பாட்டி, சிறுமியின் அக்கா உள்ளிட்ட குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பள்ளிக்குச் சென்று வருகைப் பதிவேடுகள் ஆய்வு செய்யப்பட்டது. மேலும், ஆசிரியர்களிடமும் தகவல்கள் சேகரிக்கப்பட்டன. சிறுமி பெங்களூருவில் இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் சிறுமி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
  • இரு சிறுமிகளின் தாயார் பெயர்: காக்கிநாடாவின் ஞானேஸ்வரி மற்றும் செஞ்சியின் ஹேமாவதி இருவரின் தாயார் பெயரும் பவானி என்பது அதிர்ச்சியளிக்கத்தக்க ஒற்றுமையாகும்.

மேலும் படிக்க | செஞ்சி சிறுமி மாயம்: திமுக ஆட்சியில் இது வெளியிலேயே வந்திருக்காது... அமைச்சர் சிடிஆர்

இரு வழக்குகளின் ஒற்றுமைகள் என்ன?

காணாமல் போன சூழல்: காக்கிநாடாவில் சிறுமி குடும்பத்தினர் வசித்த தோட்டப் பகுதியில் இருந்து காணாமல் போனார். செஞ்சியில் சிறுமி குடும்பத்தினர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்ததாகக் கூறப்படும் சூழலில் மாயமானார். இரு சம்பவங்களிலும் குழந்தைகள் எவ்வாறு அங்கிருந்து சென்றார்கள் என்பது தெளிவாகவில்லை.

கடத்தல் சந்தேகம்: இரண்டு வழக்குகளிலும் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், இரண்டு சம்பவங்களும் ஒரே நபரின் திட்டமிட்ட செயலால் நடைபெற்றவை என்பதற்கான உறுதியான ஆதாரம் ஏதும் பொதுவெளியில் வெளியாகவில்லை. எனவே, இரண்டுக்கும் ஒரே மாதிரியான குற்றச் செயல்முறை (MO) இருப்பதாக முடிவெடுக்க முடியாது.

தொழில்நுட்ப ஆதாரங்கள்: இரு வழக்குகளிலும் சிசிடிவி காட்சிகள், செல்போன் தொடர்புகள் உள்ளிட்ட ஆதாரங்கள் ஆயவு செய்யப்படுகின்றன. காக்கிநாடாவில் இயற்கை சூழல் மற்றும் வனவிலங்குகள் தொடர்பான சாத்தியக்கூறுகளும் ஆராயப்பட்டன. செஞ்சியில் குடும்பத்தினர், உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

நாட்கள் கடந்தும் கிடைக்காத சிறுமிகள்: பெருமளவிலான தேடுதல் மற்றும் விசாரணைகள் நடைபெற்றும் குழந்தைகளின் இருப்பிடம் குறித்த உறுதியான தகவல்கள் கிடைக்காததே இரண்டு வழக்குகளிலும் பொதுவான கவலையாக உள்ளது.

லேட்டஸ்ட் அப்டேட் என்ன?

காக்கிநாடா வழக்கில் ஜூன் மாதம் தொடங்கிய தேடுதல் நடவடிக்கை இன்னும் நிறைவடையவில்லை, சிறுமிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. அக்டோபர் 14ஆம் தேதி குழந்தையைக் கண்டுபிடிக்க ஆந்திர பிரதேச காவல்துறை தலைமை இயக்குநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அக்டோபர் 20 வெளியான செய்தியின்படி, 4 மாதங்களைக் கடந்தும் சிறுமியின் நிலை குறித்த விடை கிடைக்கவில்லை.

நவம்பர் 1ஆம் தேதி நிலவரப்படி, செஞ்சி சிறுமி காணாமல் போய் 20 நாட்களைக் கடந்துள்ளது. ஆலம்பூண்டி மற்றும் சுற்றுவட்டார வனப்பகுதிகளில் தேடுதலை விரிவுபடுத்த சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற நேரத்தில் அந்த பகுதியில் செயல்பட்ட மூன்று செல்போன் கோபுரங்களில் இருந்து கிடைத்த தரவுகளின் அடிப்படையில் 600-க்கும் மேற்பட்ட எண்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

மர்மம் எப்போது முடிவுக்கு வரும்?

இரண்டு வழக்குகளும் குழந்தைகள் காணாமல் போன சம்பவங்கள் என்ற பொதுவான அம்சத்தைக் கொண்டிருந்தாலும் அவற்றின் பின்னணியும் சூழலும் வேறுபட்டவை. ஆதாரங்கள் உறுதிப்படுத்தாத நிலையில் கடத்தல், குடும்பத்தினர் மீதான சந்தேகம் அல்லது வேறு எந்தக் காரணத்தையும் உண்மையாகக் கருத முடியாது.

குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்படுவதுடன், அவர்கள் காணாமல் போனதற்கான காரணமும் ஆதாரங்களின் அடிப்படையில் கண்டறியப்பட வேண்டியது அவசியம். இந்த இரு வழக்குகளிலும் அடுத்தகட்ட விசாரணை முடிவுகளே பல கேள்விகளுக்கு விடையளிக்கக்கூடும்.

மேலும் படிக்க | சிறுமியை தேடும் போலீஸ்..! ஆய்வு செய்யப்பட்ட 600 போன்கால்கள்! விழுப்புரம் வழக்கின் அப்டேட் என்ன?

Add Zee News as a Preferred Source
TAGS:
Explainer