SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

Explained: இந்தியன் ரயில்வே முக்கிய அப்டேட்... அக்டோபர் 27 முதல் இந்த பயணிகளுக்கும் காப்பீடு கிடைக்கும்!!

Indian Railways: அக்டோபர் 27, 2026 முதல், ரயில் நிலைய கவுண்டர்களில் (நேரடியாகச் சென்று) ரயில் டிக்கெட்டுகளை வாங்கும் பயணிகள் அனைவருக்கும் காப்பீட்டு வசதியை வழங்க வேண்டும் என்று இந்திய இரயில்வேக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Written By Sripriya Sambathkumar
Published: Oct 21, 2026, 02:59 PM IST | Updated: Oct 21, 2026, 03:07 PM IST
Join

Indian Railways: ரயில் பயணிகளுக்கு முக்கிய செய்தி உள்ளது. இன்னும் 6 நாட்களில் பயணிகளுக்கு ஒரு முக்கிய வசதி விரிவுபடுத்தப்படவுள்ளது. அக்டோபர் 27, 2026 முதல், ரயில் நிலைய கவுண்டர்களில் (நேரடியாகச் சென்று) ரயில் டிக்கெட்டுகளை வாங்கும் பயணிகள் அனைவருக்கும் காப்பீட்டு வசதியை வழங்க வேண்டும் என்று இந்திய இரயில்வேக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பயணக் காப்பீட்டுத் திட்டம்

தற்போது, ​​இந்திய இரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தின் (IRCTC) இணையதளம் வழியாக ஆன்லைனில் டிக்கெட் வாங்கும் இந்தியக் குடிமக்கள் மட்டுமே இந்த பயணக் காப்பீட்டுத் திட்டத்திற்குத் தகுதியுடையவர்களாக உள்ளனர். எனினும், அக்டோபர் 27, 2026 முதல், ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் (நேரடியாக) என எந்த முறையில் டிக்கெட் முன்பதிவு செய்தாலும், அனைத்துப் பயணிகளுக்கும் பயணக் காப்பீட்டை வழங்குவது இந்திய இரயில்வேக்குக் கட்டாயமாக்கப்படுகிறது.

ரயில் டிக்கெட் காப்பீட்டுத் திட்டம்

ரயில் டிக்கெட் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அனைத்து வகுப்புகளில் பயணிக்கும் பயணிகளுக்கும் ஒரே மாதிரியான காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். காப்பீட்டுத் தொகையின் விவரங்களை இங்கே காணலாம்:

மறைவு, நிரந்தர முழு ஊனம் மற்றும் பகுதி ஊனங்கள் தவிர, காயங்களுக்கான மருத்துவமனைச் செலவுகளுக்கும் காப்பீடு பொருந்தும். இந்தக் காப்பீடு இந்தியக் குடிமக்களுக்கு மட்டுமே பொருந்தும். வெளிநாட்டினர் இந்தத் திட்டத்திற்குத் தகுதியற்றவர்கள்.

இது குறித்து IRCTC தெரிவித்துள்ளதாவது:

"ரயில் விபத்து அல்லது எதிர்பாராத அசம்பாவிதச் சம்பவங்களின் போது, ​​PNR எண்ணின் கீழ் உள்ள ஒவ்வொரு பயணிக்கும்; மறைவு, நிரந்தர முழு ஊனம், நிரந்தர பகுதி ஊனம், காயங்களுக்கான மருத்துவமனைச் செலவுகள் மற்றும் மறைந்தவரின் உடலைக் கொண்டு செல்வதற்கான செலவுகள் ஆகியவற்றிற்கு இந்தக் காப்பீடு பொருந்தும்."

மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு விரைவில் குட் நியூஸ்? தீபாவளிக்கு முன் டிஏ உயர்வு குறித்து முக்கிய அப்டேட்!

குழந்தைகளுக்கும் காப்பீடு கிடைக்குமா?

இந்தக் காப்பீட்டு வசதியை வழங்குவதற்காக, இந்திய இரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) மூன்று பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது. அவை:

மாற்றுப் பாதைகள் பற்றி IRCTC கூறியதாவது:

“ஏதேனும் காரணத்தினால் ரயில் தனது பயணத்தை முழுமையாக முடிப்பதற்கு முன்பே நிறுத்தப்பட்டால், ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்த மாற்றுப் போக்குவரத்து வசதியைப் பயணி பயன்படுத்திக்கொண்டால், அந்தப் பயணப் பகுதியும் அவர் எடுத்துள்ள காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வரும். அதேபோல், ஏதேனும் காரணத்தினால் ரயிலின் பாதை மாற்றப்பட்டால், அந்த மாற்றப்பட்ட பாதையிலும் காப்பீடு பொருந்தும்.”

ஒரு பயணி வேறொரு ரயிலுக்கு மாற்றப்பட்டால், அவர் அசல் ரயில் பயணத்திற்காக வாங்கிய காப்பீட்டுத் திட்டம், அந்த புதிய ரயிலுக்கும் பொருந்தும்.

“காப்பீட்டுக் காலத்தின் போது, ​​ஒரு பயணிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட காப்பீட்டு கோரிக்கைகள் (claims) எழுப்பப்பட்டால், அவருக்கு வழங்கப்படும் மொத்தத் தொகை, அந்தப் பயணியின் காப்பீட்டுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச காப்பீட்டுத் தொகையை (Sum Insured) விட அதிகமாக இருக்கக்கூடாது. இருப்பினும், காப்பீடு செய்யப்பட்ட நபர் உயிரிழக்கும் பட்சத்தில், அவரது உடலைக் கொண்டு செல்வதற்கான செலவுகள் மற்றும் மருத்துவச் செலவுகள் ஆகியவை கூடுதல் தொகையாக வழங்கப்படலாம்” என்று ஐஆர்சிடிசி குறிப்பிட்டுள்ளது.

மேலும் படிக்க | அகவிலைப்படி 3% அதிகரித்தால் அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்? அரியர் எவ்வளவு கிடைக்கும்?

ரயில் பயணக் காப்பீட்டு பிரீமியம் எவ்வளவு?

ஐஆர்சிடிசி-யின் தகவல்படி, பிப்ரவரி 17, 2024 முதல் அமலுக்கு வரும் ரயில் பயணக் காப்பீட்டிற்கான பிரீமியம், அனைத்து வரிகளும் சேர்த்து ஒரு பயணிக்கு 45 பைசா ஆகும்.

இந்தக் காப்பீட்டுத் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது விருப்பத்திற்கு உட்பட்டது. பயணிகள் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது காப்பீட்டைத் தேர்ந்தெடுத்தால், காப்பீட்டு நிறுவனங்கள் அவர்களுக்கு எஸ்எம்எஸ் (SMS) மற்றும் மின்னஞ்சல் (பதிவுசெய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு) மூலம் காப்பீட்டு விவரங்களை அனுப்பும். அதனுடன், வாரிசுதாரர் (nominee) விவரங்களைப் பூர்த்தி செய்வதற்கான இணைப்பும் (link) வழங்கப்படும்.

பயணிகள் தங்கள் ஐஆர்சிடிசி கணக்கில் உள்ள ‘டிக்கெட் முன்பதிவு வரலாறு’ (ticket booking history) பகுதியில் காப்பீட்டு எண்ணைச் சரிபார்த்துக்கொள்ளலாம்.

இந்திய ரயில்களில் உறுதிசெய்யப்பட்ட (confirmed), ஆர்ஏசி (RAC) அல்லது ஓரளவு உறுதிசெய்யப்பட்ட (partially confirmed) இருக்கை/படுக்கை வசதியுடன் டிக்கெட் பெற்று, பயணக் காப்பீட்டைத் தேர்ந்தெடுத்து அதற்கான பிரீமியத்தைச் செலுத்திய அனைத்து வகுப்புப் பயணிகளும் இந்தக் காப்பீட்டைக் கோரத் தகுதியுடையவர்கள்.

ரயில் காப்பீட்டு கோரிக்கை நடைமுறை

காப்பீடு செய்த நபரால் தீர்வுத் தொகை (settlement offer) அங்கீகரிக்கப்பட்டும், அவர் அதை ஏற்றுக்கொண்ட தேதியிலிருந்து ஏழு நாட்களுக்கு மேல் பணம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால், காப்பீட்டு நிறுவனம் அத்தொகைக்கு வட்டி வழங்க வேண்டும். இந்த வட்டியானது, கோரிக்கை விடுக்கப்பட்ட/தாக்கல் செய்யப்பட்டு பரிசீலிக்கப்பட்ட நிதியாண்டின் தொடக்கத்தில் நடைமுறையில் இருந்த வங்கி விகிதத்தை விட 2% கூடுதலாக இருக்கும்.

மேலும் படிக்க | 8வது ஊதியக் குழு: பணிக்கொடை வரம்பில் ஏற்றம்? அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அப்டேட்

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

ஸ்ரீப்ரியா சம்பத், 6 ஆண்டுகளுக்கும் மேல் மீடியாவில் பணியாற்றி வருகிறார். இவர், வணிகம் மற்றும் தனிநபர் நிதி (Personal Finance) சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். மத்திய பட்ஜெட்டுகள், வங்கித் துறை, வருமான வரி, பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மத்திய அரசு ஊழியர்கள், ஊதியக் குழுக்கள் (Pay Commissions), ஓய்வூதியத் திட்டங்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் முக்கியக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.எழுத்தை வாசகர்களோடு இணைவதற்கான ஒரு சிறந்த பாலமாகக் கருதும் இவர், அவர்களின் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார். வாசகர்களுடன் இயல்பான, உண்மையான மற்றும் நேர்மையான தொடர்பைக் கொண்டிருப்பதே இவரின் முதன்மை இலக்காகும். பணி நேரத்தைத் தாண்டி, புத்தகங்கள் வாசிப்பது, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது மற்றும் அறிவுசார் விவாதங்களில் பங்கேற்பது இவருக்கு மிகவும் பிடித்தமானவை.

ZEENEWS TRENDING STORIES