Weight Loss Tips: இன்றைய காலத்தில் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைக்க பலரும் பல்வேறு உடற்பயிற்சிகள், டயட்டுகளை பின்பற்றி வருகின்றனர். உடல் எடையை குறைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. உடல் எடையை குறைக்க தொடர்ந்து உடற்பயிற்சிகள், டயட்டில் இருப்பது மிகவும் முக்கியம். இதில், உடற்பயிற்சியை விட, டயட் பின்பற்றுவது என்பது மிகவும் முக்கியம். கலோரியை குறைப்பதற்கு தினமும் நாம் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பது முக்கியம்.
இந்த நிலையில், இனஸ்டாகிராம் பிரபலம் சாக்ஷி சிங் என்பவர் 10 மாதங்களில் பெரிய அளவில் உடல் எடையை குறைத்துள்ளார். கிட்டதட்ட 45 கிலோ எடையை அவர் குறைத்திருக்கிறார். 115 கிலோவில் இருந்த அவர், தற்போது 70 கிலோ உடல் எடையில் இருக்கிறார். இவர் தனது டயட்டில் என்னென்ன சாப்பிட்டார் என்பது குறித்த விவரங்களை வெளியிட்டு இருக்கிறார்.
இன்ஸ்டா பிரபலம் சாக்ஷி சிங் உடல் எடை குறைப்பின்போது ஆரம்பத்தில் 2800 கலோரிகளை சாப்பிட்டு வந்தார். இதில் புரதம், ப்ரோட்டீன் ஆகியவையும் அடங்கும். காலையில் எழுந்த உடனேயே ப்ளூ டீ, சீரக தண்ணீர், ஓமம் நீர், எலுமிச்சை, தேனி கலந்த நீரை என இதில் ஏதேனும் ஒன்றை தினற்தோறும் காலை 7.30 மணிக்குள் குடித்து வந்துள்ளார்.
காலை உணவை 8 மணிக்கு தினமும் சாப்பிட்டு இருக்கிறார். பருப்பு + குறைந்த கொழுப்புள்ள பன்னீர் + தயிர் கலந்து சாப்பிட்டுள்ர். மேலும், கடலை மாவுடன் பன்னீர், தயிர் கலந்த உணவு, பனீர், பருப்பு கலந்த உப்புமா, பருப்பு + இட்லி + தயிர், பனீர் ராகி தோசை, காய்கறிகள் கலந்த மசாலை ஓட்ஸ் + தயிர் போன்ற உணவுகளை எடுத்துக் கொண்டார். இதில் 300 முதல் 450 கிராம் கலோரி, 30 கிராம் ப்ரோட்டீனை கொண்டுள்ளது. காலை உணவை முடித்துவிட்டு, 8.15 மணிக்கு பிளாக் காபி குடித்ததாகவும், அதன் பிறகு 8.30 மணி முதல் 10 மணி வரை உடற்பயிற்சி செய்ததாகவும் குறிப்பிட்டார். உடற்பயிற்சிக்கு பிறகு, காலை 11.30 மணிக்கு ப்ரோட்டீன் ஷேக் குடித்துள்ளார்.
ஒவ்வொரு நாளும் மதிய உணவுடன் புரதத்தைப் போலவே நார்ச்சத்து உட்கொள்ளலும் முக்கியமானது. எனவே மதிய உணவோடு வெள்ளரிக்காய், கேரட் மற்றும் வெங்காயம் கலந்த சாலட் சாப்பிட்டு வந்துள்ளார். இந்த உணவுகளில் 400 முதல் 650 கலோரிகள் இருந்தன. மேலும் இதில் சுமார் 25 முதல் 50 கிராம் புரதம் இருக்கிறது.
மாலை நேரத்தில் ப்ளூ டீயுடன் ஒரு பழம், பழம், காக்கறா, வறுத்த கொண்டைக்கடலை, மக்கானா அல்லது சில வால்நட், பாதாம் ஆகியவற்றை சாப்பிட்டு வந்துள்ளார். இதன் மூலம் 100 முதல் 200 கலோரிகளும், 8 கிராம் ப்ரோட்டீன் இருக்கும்.
இவற்றை இரவு உணவாக அவர் சாப்பிட்டுள்ளார். இதில் 200 முதல் 400 கலோரிகளும், 30 கிராம் ப்ரோட்டீனும் இருக்கும் என்று கூறினார். இன்ஸ்டா பிரபலம் சாக்ஷி தினமும் 1400 முதல் 1700 கலோரிகள் மற்றும் 85 முதல் 120 கிராம் ப்ரோட்டீனை தினமும் உட்கொண்டு வந்துள்ளார். தினமும் 500க்கு மேல் கலோரிகளை குறைப்பதே அவரின் நோக்கமாக இருந்துள்ளது என அவர் குறிப்பிட்டார். இப்படியாக சாக்ஷி சிங் 45 கிலோ உடல் எடையை 10 மாதங்களில் குறிப்பிட்டுள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்தார்.