SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ஜியோ ப்ரைம் சூப்பர் திட்டம்! ஒரு வருடத்திற்கு நோ ப்ராப்ளம்..விவரம் என்ன?

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், புதிதாக கொண்டு வந்திருக்கும் திட்டம் குறித்த புதுத்தகவல்களை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written By Yuvashree M
Published: Aug 19, 2026, 03:53 PM IST | Updated: Aug 19, 2026, 04:16 PM IST
Join

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், அவ்வப்போது புதிய முயற்சிகளையும் திட்டங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக, இந்த நிறுவனம் கொண்டு வரும் அனைத்து திட்டங்களும் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் உருவாகி இருக்கும் இந்த திட்டம் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

10ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஜியோ:

ஜியோ நிறுவனம், தங்களின் 10ஆம் ஆண்டு நிறைவு பெற்றதை கொண்டாடுகிறது. இதைத்தொடர்ந்து, தங்களின் வாடிக்கையாளர்களுக்கு விலையேற்றத்தில் இருந்து ஓராண்டுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் ஜியோ ப்ரைம் மெம்பர்ஷிப் ப்ளான் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

பயன்கள் என்ன?

நாள்தோறும், 1.5 ஜிபி டேட்டா உள்பட, அனைத்து சலுகைகளும் ரூ.299 திட்டத்தின் கீழ் நாள்தோறும் எந்த மாற்றமும் இன்றி தொடரும் என ஜியோ நிறுவனம் உறுதி செய்திருக்கிறது. அடுத்த ஓராண்டிற்கு, அதாவது வரும் 2027ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி வரை ஜியோ ரீசார்ஜ் கட்டணங்கள் உயர்ந்தாலும், பிரைம் வாடிக்கையாளர்கள் தற்போதைய ரூ.299 கட்டணத்தை தொடர்ந்து ரீசார்ஜ் செய்து பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில், அனைத்து விதமான சலுகைகளும் எந்த மாற்றமும் இல்லாமல் தொடரும் என தங்களின் வாடிக்கையாளர்களுக்கு ஜியோ உறுதி செய்திருக்கிறது.

 

இதில் இணைவது எப்படி?

My Jio செயலி மூலமாகவோ, Jio.com இணையதளம் அல்லது ஜியோ ஸ்டோர்ட்கள் மற்றும் அதன் தொடர்புடைய கடைகள் மூலமாக இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்.

ஜியோ ப்ரைம் திட்டம்..!

இந்த ஜியோ ப்ரைம் திட்டம், தங்களின் ஜியோ சந்தாதாரர்களுக்கு விலை உறுதித்தன்மையை வழங்குகிறது. அதிலும், இதன் மூலம் பயனர்கள் தங்களின் தொலைத்தொடர்பு திட்டங்களின் விலையை, ஓராண்டுக்கு நிர்ணயித்துக்கொள்ள இயலும். இதன் மூலம், ஜியோ தனது போஸ்ட்பெயிட் மற்றும் ப்ரீபெயிட் திட்டங்களின் விலை உயர்த்தினாலும் கூட பயனர்கள் தங்களுடைய தற்போதைய திட்டத்தை, பழைய விலையிலேயே வாங்க இயலும். இதைத்தவிர, ஜியோ பலவித சந்தா நன்மைகளையும் வழங்குகிறது. இந்த திட்டம், கண்டிப்பாக மக்களுக்கு நல்லதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.

ZEENEWS TRENDING STORIES