ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!
பங்குச்சந்தை நிறுவனங்களின் நிதிநிலை, பங்கு மதிப்பீடு மற்றும் சந்தைத் தகவல்களை முதலீட்டாளர்கள் எளிதாக ஆராய உதவும் வகையில் AI தொழில்நுட்பத்துடன் கூடிய 'Kwala Intel' தளம் கட்டணச் சந்தா முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பங்குச்சந்தையில் முதலீடு செய்து நீண்ட காலத்திற்கு வருமானத்தை உருவாக்கவும், டிவிடெண்ட் மூலம் வருமானம் பெறவும் பலர் ஆர்வம் காட்டுகின்றனர். இருப்பினும், சமூக வலைதளங்களில் வெளியாகும் பங்குச்சந்தை பரிந்துரைகள் அல்லது கடந்தகால லாபத்தை மட்டும் அடிப்படையாக கொண்டு பங்குகளை வாங்குவது ஆபத்தை ஏற்படுத்தலாம். இந்த நிலையில், நிறுவனங்களின் நிதிநிலை மற்றும் சந்தை தகவல்களை விரைவாக ஆராய Kwala Intel அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Kwala Intel என்றால் என்ன?
Kwala Intel என்பது AI உதவியுடன் பங்குச்சந்தை தொடர்பான தகவகளை ஆராய உதவும் ஒரு தளமாகும். நிறுவனத்தின் வணிக மாதிரி, நிதிநிலை, பங்கின் விலை மதிப்பீடு, P/E விகிதம் புரோமோட்டர்களின் பங்குதாரர் விவரங்கள் உள்ளிட்டவற்றை தெரிந்துக்கொள்ள இந்த தளம் உதவியாக இருக்கும். பங்குகள் தொடர்பான கேள்விகளுக்கு சுமார் 15 விநாடிகளில் AI மூலம் ஆய்வு முடிவுகளை வழங்குகிறது.
நீண்டகால முதலீடு
நீண்டகால முதலீட்டாளர்கள் நிறுவனங்களின் நிதிநிலை, வளர்ச்சி வாய்ப்புகள் மற்றும் பங்கு மதிப்பீடுகளை புரிந்துகொள்ள இந்த தளத்தை பயன்படுத்தலாம். நிறுவனங்கள் அறிவிக்கும் டிவிடெண்ட் மூலம் வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால் டிவிடெண்ட் உறுதியானதல்ல; பங்குகளின் விலையும் குறையலாம்.
அதேபோல், குறுகியகால வர்த்தகம் மற்றும் ஸ்விங் டிரேடிங்கில் ஈடுபடுவோர் RSI, MACD போன்ற தொழில்நுட்பக் குறியீடுகள், ஆதரவு மற்றும் எதிர்ப்பு நிலைகள் குறித்த தகவல்களை ஆராயலாம்.
சந்தா கட்டணம் எவ்வளவு?
Kwala Intel AI தளத்தைப் பயன்படுத்த மாதச் சந்தாவாக ரூ. 199-ம், ஆண்டு சந்தாவாக ரூ. 1,999-ம் வசூலிக்கப்படுகிறது. இதில் AI மூலம் பங்குச்சந்தை ஆய்வு, சந்தைத் தகவல்கள், துறை சார்ந்த தரவுகள் மற்றும் தொழில்நுட்பக் குறியீடுகள் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
பங்குச்சந்தை மூலம் தொடர் வருமானம் பெற AI உதவுமா?
AI-ஐ பயன்படுத்துவதன் மூலம் நிறுவனங்களின் நிதிநிலை, பங்குகளின் மதிப்பீடு மற்றும் சந்தை நிலவரங்களை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.
நீண்டகால முதலீட்டாளர்கள், நிறுவனங்கள் அறிவிக்கும் டிவிடெண்ட் மூலம் வருமானம் பெறலாம். அதேபோல், பங்குகளின் விலை உயரும்போது முதலீட்டின் மதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆனால், டிவிடெண்ட் வழங்குவது நிறுவனத்தின் முடிவை பொறுத்தது. பங்குகளின் விலையும் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப குறையலாம்.
குறுகியகால வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் பங்குகளின் விலை மாற்றங்களைப் பயன்படுத்தி லாபம் ஈட்ட முயற்சிக்கின்றனர். இதற்கு சந்தையை தொடர்ந்து கண்காணிப்பது அவசியம். மேலும், இந்த முறையில் நஷ்டம் ஏற்படுவதற்கான அபாயமும் உள்ளது.
எனவே, முதலீடு செய்வதற்கு முன்பு தங்களின் நிதி இலக்குகள், முதலீட்டுக் காலம் ஆகியவற்றை கருத்தில் கொள்ள வேண்டும். கடந்தகால லாபம், சமூக வலைதளப் பரிந்துரைகள் அல்லது AI வழங்கும் தகவல்களை மட்டுமே நம்பி முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும்.