• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /பயனுள்ள தகவல்கள்
  • /எல்பிஜி வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்! ekyc அப்டேட் காலக்கெடு நீட்டிப்பு.. கடைசி நாள் எப்போது?

எல்பிஜி வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்! ekyc அப்டேட் காலக்கெடு நீட்டிப்பு.. கடைசி நாள் எப்போது?

LPG Cylinder Ekyc Update: சமையல் எரிவாயு சிலிண்டர் e-KYC சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. நேற்றுடன் ekyc செய்ய அவகாசம் நிறைவடைந்த நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் மேலும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

Written ByUmabarkavi K
Published: Aug 24, 2026, 08:36 AM IST|Updated: Aug 24, 2026, 09:02 AM IST
joinshare
எல்பிஜி வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்! ekyc அப்டேட் காலக்கெடு நீட்டிப்பு.. கடைசி நாள் எப்போது?

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
உலக கெட்டில்பெல் சாம்பியன்ஷிப்: தங்கம், வெள்ளி வென்று கோவையைச் சேர்ந்த அமுதினி வசந்தி சாதனை!

உலக கெட்டில்பெல் சாம்பியன்ஷிப்: தங்கம், வெள்ளி வென்று கோவையைச் சேர்ந்த அமுதினி வசந்தி சாதனை!

2

பம்புசெட் வாங்க ரூ.21,000 வரை மானியம்: விவசாயிகளுக்கு அரசின் பம்பர் அறிவிப்பு

3

மதுராந்தகம் இடைத்தேர்தல்: அதிமுக 3வது இடத்திற்கு போனது எப்படி? பாமக ஒரு காரணமா?

4

Madurantakam By-Election: மரகதம் குமரவேல் முன்னிலை.. தவெக எழுச்சிக்கு பாமக, விசிக வாக்குகள் காரணமா?

5

ISRO வேலைவாய்ப்பு: மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

LPG Cylinder Ekyc Update: எல்பிஜி கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கு முக்கியமான அறிவிப்பை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அதாவது, சமையல் எரிவாயு சிலிண்டர் ekyc செய்ய அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. உஜ்வாலா திட்டத்தில் மானியம் பெறவும், கேஸ் சிலிண்டரை முன்பதிவு செய்யவும் ekyc செய்ய கட்டாயமாக இருந்தது. 

எல்பிஜி வாடிக்கையாளர்கள் ஆதார் அடிப்படையிலான ekyc செய்ய ஆகஸ்ட் 23ஆம் தேதி வரை காலக்கெடு கொடுக்கப்பட்டு இருந்தது. நேற்றுடன் இந்த அவகாசம் முடிவடைந்தது. இந்த நிலையில்,   சமையல் எரிவாயு சிலிண்டர் e-KYC சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுவரை ஆவணங்களை சமர்ப்பிக்காதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ekyc செய்ய ஆகஸ்ட் 31 கடைசி நாள்

எண்ணெய் நிறுவனங்கள் (IOCL, BPCL, HPCL) தங்கள் எல்பிஜி  வாடிக்கையாளர்களக்கு ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் ekyc-ஐ நிறைவு செய்ய வேண்டும்.

  • ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் ekyc-ஐ நிறைவு செய்யாவிட்டால் மானிய விலையில் சிலிண்டரைப் பெற முடியாது.
  • உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்டும் ரூ.300 மானியம் நிறுத்தப்படும். இதனால், சந்தை விலையிலேயே நீங்கள சிலிண்டர் வாங்க முடியும்.
  • எனவே, ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள்  ekyc-ஐ நிறைவு செய்ய வேண்டும்.

வீட்டில்  இருந்தே ekyc செய்து முடிப்பது எப்படி?

HP Gas: ekyc செய்யும்முறை

  • HP Gas நுகர்வோர் HP Pay செயலி அல்லது Aadhaar FaceRd செயலி மூலம் ekyc-ஐ நிறைவு செய்ய வேண்டும்.
  • ekyc செய்ய முதலில் HP Pay செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இதன்பிறகு, உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட்டு லாகின் செய்ய வேண்டும்.
  • My HP என்பதை க்ளிக் செய்து, எல்பிஜி சேவைகைளை தேர்ந்தெடுத்து ekyc விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.
  • பிறகு, வாடிக்கையாளர்கள் capture face என்ற அம்சத்தை பயன்படுத்தி, இது பயோமெட்ரிக் சரிபார்ப்பிற்காக Aadhaar Facetrd செயலிக்கு அழைத்து செல்லும்.
  • முக சரிபார்ப்பு முடிந்துவிட்டால், சமையல் எரிவாயு சிலிண்டருக்கான ekyc முடிந்துவிடும்.

Indian Oil: ekyc செயல்முறை

  • முதலில் Indian Oil ONE மற்றும் Aadhaar Face Rd ஆகிய செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  • உங்கள் எல்பிஜி எண்ணை உள்ளிட்ட வேண்டும். பிறகு, உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட்டு ஒடிபி-ஐ பதிவு செய்ய  வேண்டும்.
  • முகப்பு பக்கத்தில் ekyc என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் முகத்தை ஸ்கேன் செய்ய வேண்டும்.
  • முக ஸ்டேன் மூலம் பயோமெட்ரிக் சரிபார்ப்பை முடிக்க வேண்டும்.

Bharat Gas: ekyc செயல்முறை

  • பாரத் கேஸ் வாடிக்கையாளர்கள் hello bpcl என்ற செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  • முகப்பு பக்கத்தில் ekyc என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பிறகு, மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும்
  • பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒடிபபி மூலம் தங்கள் அடையாளத்தை உறுதி செய்ய வேண்டும்.
  • பிறகு, பிளே ஸ்டோரில் இருந்து AadhaarFaceRD செயலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  • உங்கள் ஆதார் விவரங்களை உள்ளிட்டு, நிபந்தனைகளுக்கு ஒப்புதல் அளித்து முக ஸ்கேன் (Face Scan) சரிபார்ப்பை முடிக்க வேண்டும்.

ஆன்லைனில் ekyc செய்ய முடியாதவர்கள் உங்கள் கேஸ் சிலிண்டர் நிறுவனத்தில் அருகில் உள்ள அலுவலகத்திற்கு சென்று ekyc சரிபார்ப்பை முடித்துக் கொள்ளலாம். அல்லது வீட்டிற்கு சிலிண்டர் போட வரும் ஊழியர்களிடம் கூறி, ekyc சரிபார்ப்பை முடிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Add Zee News as a Preferred Source
TAGS:
LPG