நம் தொழில் வாழ்க்கையை எப்போதும் ஒன்றை வைத்து மட்டும்தான் நம்மால் நிர்ணயிக்க முடியும். அது நம்முடைய மாத சம்பளம் மட்டும்தான். ஆனால், இங்கு ஒரு எக்ஸ் வலைதளப்பதிவு, நமக்கு வேறு ஒரு விஷயத்தைதான் நினைவுகூறுகிறது. அதாவது, ஒருவர் தன்னுடைய சொந்த தொழில் வாழ்க்கையை எப்படி வேண்டுமானாலும் தொடங்கலாம் என்பதுதான். இது குறித்து, ஆன்லைனில் பல பேர் விவாதித்து வருகின்றனர்.
அங்கித் பாண்டே எனும் நபர்தான் இந்த வகையிலான எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், தன்னுடைய நண்பர் ஒருவர், வருடம் ரூ.11 லட்சம் சம்பளம் கொடுக்கும் கார்ப்ரேட் 9-5 வேலையை விட்டுவிட்டு, சொந்தமாக தொழில் தொடங்கி அதில் பல லட்சம் லாபத்தை ஈட்டி வருவதாக கூறியிருக்கிறார்.
அந்த போஸ்டில், அந்த நபர் வேலையை விட்டுவிட்டு வீட்டிற்கு திரும்ப வந்ததாகவும், அவர் பெங்களூரூவில் வேலை பார்த்துகொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இப்போது தன் வீட்டில் இருந்தபடியே, ஒரு முதலாளியாக அவர் வருடத்திற்கு ரூ.28 லட்சம் வரை சம்பளமாக பெற்று வருவதாக கூறியிருக்கிறார்.
My friend quit his ₹11 LPA 9-to-5 job in Bengaluru.
Now he earns nearly ₹28 lakh a year from his home.
Instead of chasing promotions, he went back home and started a simple water purification business.
He installed a water purification plant on his own property and connected… pic.twitter.com/uY3mfTd0d3— Ankit Pandey (@iamankitpande) August 3, 2026
இந்த தொழிலை பொறுத்தவரை அவர் தினசரி 300 வாட்டர் கேன் சப்ளை செய்து வருவதாகவும், கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு இவருடைய கேன்கள் போடப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஒரு வாட்டர் கேனின் விலை ரூ.30 என பாண்டே தன்னுடைய பதிவில் தெரிவித்துள்ளார். இதனால் அவருக்கு ஒரு நாளைக்கு சுமார் ரூ.9,000 வரை வருமானம் வருகிறது. மாத வருமானம் ரூ.2.7 லட்சமாக இருக்கிறது.
மாதத்திற்கு, ரூ.15,000 வரை தண்ணீரை சுத்தப்படுத்துவதற்கும் மின்சாரத்திற்கும் செலவாகிறதாம். அதே போல, போக்குவரத்து செலவும் சுமார் ரூ.20,000 என கூறப்படுகிறது. அந்த வாட்டர் ப்ளாண்ட் அவருடைய சொந்த இடத்தில் இருப்பதால், அதற்கான வாடகை எதுவும் செலவாவதில்லை.
இதை வைத்து பார்க்கும் போது, இந்த நபர் மாதத்திற்கு ரூ.2.35 லட்சம் வருமானமாகவும், வருடத்திற்கு ரூ.28.5 லட்சமாகவும் இருக்கிறது.
“ஒரு சில சமயங்களில், நல்ல தொழில் என்பது கவர்ச்சியாக இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை, அது தினசரி பிரச்சனைகளை தீர்ப்பதாக இருந்தாலே போதும்” என்று அங்கித் பாண்டே கூறியிருக்கிறார். அந்த பதிவில் அவர், “நீங்கள் உங்களுக்கு பிடித்த தொழிலுக்காக, ரூ.11 லட்சம் சம்பளம் தரும் வேலையை விடுவீர்களா?” என்று கேட்டிருக்கிறார்.
இந்த பதிவை பார்த்த இணையவாசிகள் தங்களுடைய கருத்தை கூறி வருகின்றனர். அதில் பல பேர், அவருடைய ஐடியாவை புகழ்ந்துள்ளனர். இன்னும் சிலர், கம்ஃபர்ட் ஜோனை விட்டுவிட்டு, நமக்கு பிடித்த விஷயத்தில் பெரும் உழைப்பை போட்டால் கண்டிப்பாக பலன் கிடைக்கும் என்று கூறிவருகின்றனர். அனைவருடைய கருத்தும், சேர்ந்தவாறு, தொழில் தொடங்கியவருக்கு ஆதரவாகவே இருக்கிறது.