PMSYM: அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம், எப்படி பெறுவது?
PM Shram Yogi Maandhan Yojana: பிரதம மந்திரி சிரம யோகி மான்தன் யோஜனா, அமைப்புசாரா துறையில் பணிபுரிபவர்களுக்காக உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தின் முதன்மை நோக்கம், இத்தகைய நபர்களுக்கு அவர்களின் முதுமைக்காலத்தில் ஓய்வூதியம் கிடைப்பதை உறுதி செய்வதாகும்.
PM Shram Yogi Maandhan Yojana: மத்திய அரசு, மூத்த குடிமக்கள், பெண்கள், குழந்தைகள், விவசாயிகள் என அனைவருக்கும் பிரத்யேக திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அமைப்புசாரா துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் பல திட்டங்கள் உள்ளன.
அமைப்புசாரா துறையில் பணிபுரிபவர்கள் பெரும்பாலும் தங்கள் முதுமைக்காலத்தைப் பற்றி கவலைப்படுகிறார்கள். அவர்களின் பிற்கால வாழ்க்கை சிரமமின்றி அமைவதை உறுதிசெய்ய, மத்திய அரசு ‘பிரதம மந்திரி சிரம யோகி மான்தன் யோஜனா’ என்ற திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், தகுதியுடைய நபர்களுக்கு அவர்கள் 60 வயதை எட்டும்போது மாதம் ₹3,000 ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது.
பிரதம மந்திரி சிரம யோகி மான்தன் யோஜனா
பிரதம மந்திரி சிரம யோகி மான்தன் யோஜனா (PM Shram Yogi Maandhan Yojana) திட்டத்தின் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால், தொழிலாளர் செலுத்தும் அதே தொகையை அரசாங்கமும் பங்களிப்பாக வழங்குகிறது. இது தொழிலாளர்களுக்குப் பெரும் நன்மையை அளிக்கிறது. இத்திட்டத்திற்கான பங்களிப்புத் தொகை, ஓய்வூதியத் தொகை மற்றும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களைப் பற்றி இந்த பதிவில் விரிவாகக் காணலாம்
பிரதம மந்திரி சிரம யோகி மந்தன் யோஜனா என்றால் என்ன?
பிரதம மந்திரி சிரம யோகி மான்தன் யோஜனா, அமைப்புசாரா துறையில் பணிபுரிபவர்களுக்காக உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தின் முதன்மை நோக்கம், இத்தகைய நபர்களுக்கு அவர்களின் முதுமைக்காலத்தில் ஓய்வூதியம் கிடைப்பதை உறுதி செய்வதாகும். இத்திட்டத்தின் கீழ், தகுதியுள்ள பயனாளிகள் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையைச் செலுத்த வேண்டும். அவர்கள் 60 வயதை அடையும்போது, மாதம் ₹3,000 ஓய்வூதியத்தைப் பெறத் தகுதியுடையவர்கள் ஆகிறார்கள்.
₹3,000 ஓய்வூதியம் பெற எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?
இது ஒரு ஓய்வூதியத் திட்டமாகும். இதில் பயனாளிகள் தங்கள் வயதிற்கு ஏற்ப, மாதம் ₹55 முதல் ₹200 வரை பங்களிப்பு செய்ய வேண்டும். பயனாளி செலுத்தும் அதே தொகையை அரசாங்கமும் பங்களிப்பாக வழங்குகிறது. அதாவது, பயனாளியும் அரசாங்கமும் சமமான பங்களிப்பைச் செலுத்துகின்றன.
PMSYM: இத்திட்டத்திற்கு யார் தகுதியானவர்கள்?
பிரதம மந்திரி சிரம் யோகி மான்தன் யோஜனாவின் பலன்களைப் பெற, விண்ணப்பதாரர்கள் சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்:
- அவர்கள் 18 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
- அமைப்புசாரா துறையில் பணிபுரிய வேண்டும் மற்றும்
- அவர்களின் மாத வருமானம் ₹15,000-க்கு குறைவாக இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர் EPFO, ESIC அல்லது NPS ஆகியவற்றில் உறுப்பினராக இருக்கக்கூடாது.
- வருமான வரி செலுத்துபவராகவும் இருக்கக்கூடாது.
பயனாளியின் வயதிற்கு ஏற்ப முதலீடு
மத்திய அரசு செயல்படுத்தி வரும் இந்தத் திட்டத்தில் மாதந்தோறும் பங்களிப்பு செலுத்த வேண்டும். இதில் செலுத்த வேண்டிய முதலீட்டுத் தொகை, பயனாளியின் வயதைப் பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது:
- 18 வயதுடையவர்கள் மாதம் ₹55 செலுத்த வேண்டும்.
- 40 வயதுடையவர்கள் மாதம் ₹200 பங்களிக்க வேண்டும்.
பயனாளிகளுக்கு 60 வயது பூர்த்தியடைந்ததும், அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட ஓய்வூதியம் வழங்கப்படத் தொடங்கும். இந்தத் திட்டத்தின் கீழ், பயனாளியும் அரசாங்கமும் சமமான பங்களிப்பை வழங்குகின்றன.
PMSYM: இந்தத் திட்டத்திற்கு எவ்வாறு பதிவு செய்வது?
இந்தத் திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான செயல்முறையை இங்கே காணலாம்:
- இந்த அரசுத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க, முதலில் பொது சேவை மையத்திற்கு (CSC) செல்ல வேண்டும்.
- அங்கு 'பிரதம மந்திரி மந்தன் யோஜனா' (PM Maandhan Yojana) திட்டத்திற்குப் பதிவு செய்ய வேண்டும்.
- பயனாளிகள் தங்கள் ஆதார் அட்டை மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களை வழங்க வேண்டும்.
- அதன் பிறகு தங்கள் அலைபேசி எண் மற்றும் பிற தேவையான தகவல்களை உள்ளிட வேண்டும்.
- வயதிற்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட்ட மாதாந்திரத் தொகையைச் செலுத்தவும்.
- பதிவு முடிந்ததும், திட்டம் குறித்த தகவல்கள் மற்றும் ஓய்வூதியக் கணக்கு விவரங்கள் பயனாளிகளுக்கு வழங்கப்படும்.
இந்த திட்டம் குறித்த கூடுதல் விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
PMSYM திட்டத்தில் சேர என்னென்ன ஆவணங்கள் தேவை?
PMSYM திட்டத்தில் பதிவு செய்வதற்கு பின்வரும் ஆவணங்கள் தேவைப்படும்:
- ஆதார் அட்டை,
- அலைபேசி எண்,
- வங்கிப் புத்தக விவரங்கள்,
- சேமிப்புக் கணக்குத் தகவல்கள் மற்றும்
- உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட அலைபேசி எண்
மேலும் படிக்க | 8வது ஊதியக் குழு: அகவிலைப்படி பூஜ்ஜியம் ஆகுமா? அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்