SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

செப்.26 முதல் 5 நாட்கள் வங்கிகள் இயங்காது.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி .. காரணம் என்ன?

Bank Strike: நாடு முழுவதும் செப்டம்பர் 28ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை வங்கிகள் மூடப்படுகிறது. வங்கி ஊழியர்கள் செப்டம்பர் 28ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இதனால், வங்கிப் பணி பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Written By Umabarkavi K
Published: Sep 23, 2026, 10:57 IST | Updated: Sep 23, 2026, 11:06 IST
Join

Bank Strike: நாடு முழுவதும் வங்கிகள் 5 நாட்கள் மூடப்பட உள்ளது. செப்டம்பர் 28ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை வங்கிகள் மூடப்படுகிறது. சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் 3 நாட்கள் வேலைவநிறுத்தத்தை சேர்த்து 5 நாட்கள் வங்கிகள் இயங்காது.

5 நாட்கள் வங்கிகள் மூடல்

இன்றைய நவீன காலத்தில் மொபைல் போன் மூலமே அனைத்து வங்கி சேவைகளையும் நாம் எளிதில் செய்ய முடியும.  ஏடிஎம், மொபைல் வங்கி, யுபிஐ சேவை போன்றவை மூலம் பணப் பரிவர்த்தனை செய்து கொள்ள முடியும். அந்த வகையில், வங்கிச் சேவைகள் மக்களின் அன்றாட தேவைகளின் ஒன்றாக இருக்கிறது.  சேமிப்பு கணக்கு, நடப்பு கணக்கு, நிரந்தர வைப்புத்தொகை, கடன் உள்ளிட்ட சேவைகளுக்கு வங்கிகளுக்கு வாடிக்கையாளர்கள் செல்ல வேண்டிய சூழல் இருக்கிறது.

இந்த நிலையில், வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியூட்டும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது,  5 நாட்கள் வங்கிகள் இயங்காது என அறிவிப்பு வெளியாகி உள்ளது. செப்டம்பர் 28ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதனால், சனி, ஞாயிறு விடுமுறையுடன் சேர்த்து, 5 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி ஊழியர்கள்  வேலைநிறுத்தம்

இந்தியா முழுவதிலும் உள்ள பொதுத்துறை வங்கி ஊழியர்கள், செப்டம்பர் 28 முதல் 30 வரை மூன்று நாள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். வங்கி தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து, மத்திய தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் நேற்று நடந்த சமரச பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததை அடுத்து, வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக மத்திய அரசு வேலைநிறுத்ததை கைவிடும்படி கோரிக்கை வைத்தனர். ஆனால், வங்கி ஊழியர்கள் போராட்டத்தை கைவிட மறுத்து, செப்டம்பர் 28 முதல் 30ஆம் தேதி வரை போராட்டம் நடைபெறும் என அறிவித்தன.  

வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே வங்கிப் பணி என்ற நீண்ட நாள் கோரிக்கையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் ஓய்வூதியம் புதுப்பித்தல் மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி போராட்டம் நடத்த உள்ளனர். இதனால், செப்டம்பர் 23ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வங்கிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

வங்கிகள் தொடர்பாக பணிகளை செப்டம்பர் 28ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.  பணம் தேவைப்பட்டால் வாடிக்கையாளர்கள்  ஏடிஎம் பயன்படுத்த வேண்டும் எஸ்பிஐ உள்ளிட்ட வங்கி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. வழக்கமான பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்கள் இணைய வங்கிச் சேவை, மொபைல் வங்கி  சேவை, யுபிஐ ஆகியவற்றை பயன்படுத்தலாம். வேலைநிறுத்தம் நடந்தாலும் டிஜிட்டல் பரிவர்த்தனை சேவைகள் தொடர்ந்து இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

ZEENEWS TRENDING STORIES