SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

சிம் கார்ட் வாங்குறது இனி கஷ்டம்! புது ரூல்ஸ் போட்ட மத்திய அரசு..அவசியம் தெரிஞ்சிக்கோங்க

மத்திய அரசு, டிஜிட்டல் மோசடிகளை கட்டுப்படுத்தும் விதமாக, புதிய சிம் கார்டுகளை வாங்குவது குறித்த கட்டுப்பாடுகளை அதிகரித்திருக்கிறது. இதோ முழு விவரம்!

Written By Yuvashree M
Published: Aug 19, 2026, 04:53 PM IST | Updated: Aug 19, 2026, 05:06 PM IST
Join

நாளாக நாளாக, ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் மோசடிகள் அதிகரித்து வருவது குறித்த செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கிறது. இதை கட்டுப்படுத்தும் நோக்கில், புதிய சிம் கார்ட் வாங்குவதற்கு ஏராளமான கெடுபிடிகளை மத்திய அரசு விதிக்க இருக்கிறது.

புதிய கட்டுப்பாடுகள்:

பொதுவாக நாம் ஒரு சிம் கார்ட்டை வாங்குகிறோம் என்றால், அதற்கான சான்றுகள் மற்றும் சரிபார்ப்பு முறை என்பது ஆதார் அட்டை, கை ரேகை, பெயர் உள்ளிட்டவைகளை உள்ளடக்கியதாக இருக்கும். ஆனால், மத்திய அரசின் சமீபத்திய அறிவிப்பின் படி, இந்த கட்டுப்பாடுகள் இன்னும் அதிகரிக்க இருப்பதாக கூறபட்டிருக்கிறது. இதன்படி, புதிதாக யார் சிம் கார்ட் வாங்கினாலும் அந்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அந்த புதிய சிம்மை செயல்படுத்தும் முன்பு நிகழ்நேர டிஜிட்டல் புலனாய்வு இணையதளம் மூலமாக வாடிக்கையாளரின் விவரங்களை சரிபார்க்க வேண்டும். சந்தேகத்திற்கு இடமாக குறிக்கப்படும் எந்தவொரு அடையாளமும், சிம் வழங்குவதற்கு தானாகவே தடையை ஏற்படுத்தக்கூடும் என கூறப்படுகிறது.

ஒரு சிம், தவறாக பயன்படுத்தப்பட்ட பிறகு, நடவடிக்கை எடுப்பதை விடுத்து, அந்த மோசடியை ஏற்படுத்தும் மொபைல் இணைப்புகள் புழக்கத்தில் எடுத்துக்கொண்டு வரும் முன்பே, அவற்றை தடுக்கும் விதமாக ஒரு பெரும் மாற்றத்தை இந்த நடவடிக்கை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.

ஒவ்வொரு சிம் கார்டும் வழங்கப்படும் முன்பு, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் தகவல்களை புலனாய்வு அடிப்படையிலி சரிபார்க்க வேண்டுமென தகவல் வெளியாகி இருக்கிறது. ஒரு சிம் கார்ட் வழங்கப்படும் முன்பாகவே, மோசடியை தடுப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாக இருக்கிறது.

9 சிம் கார்டுக்கு மட்டுமே அனுமதி!

அரசு, ஒரு தனிநபரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கும் சிம் கார்ட்களின் எண்ணிக்கையை கண்காணிப்பதை வலுப்படுத்தும் நோக்கில் இந்த முயற்சியை மேற்கொண்டு வருகிறது. தற்போது வரை ஒரு தனி நபர், அதிகபட்சமாக 9 சிம் கார்ட்கள் வரை வைத்திருக்கலாம். அதே சமயத்தில் அந்த நபர் ஜம்மு காஷ்மீர், அசாம் அல்லது வடகிழக்கு மாநிலங்களில் இருப்பவர் என்றால் இந்த சிம் கார்ட் வரம்பு 6 ஆக இருக்கிறது.

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடிகள்!

சமீப காலமாக, டிஜிட்டல் கைது மோசடி அதிகரித்து வருகிறது. இதில் ஈடுபடும் குற்றவாளிகள், காவல்துற்றை, சுஞ்கத்துரை, சிபிஐ போல நடித்து, வீடியோ கால் மூலமாக மக்களை பயமுறுத்தி, அவர்களை வீட்டிலேயே முடங்கி இருக்கச்செய்து பணம் பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். பொது மக்களை தொடர்பு கொண்டு, “உங்கள் பெயரில் போதைப்பொருள் வழக்கு இருக்கிறது, சட்டவிரோத பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது” என்று கூறி, வீடியோ காலில் இருக்கச்சொல்லி மன உளைச்சலை தருவார்கள். பின்னர் வழக்கிலிருந்து விடுவிக்க, பணம் கேட்டு மிரட்டுவார்கள். இந்த நடவடிக்கைகள் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இது போன்ற நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் இந்த கெடுபிடிகளை அரசு அறிவித்திருக்கிறது.

செயலிகள் முடக்கம்:

சமீபத்தில், மத்திய அரசு சுமார் 3,718க்கும் மேற்பட்ட செயலிகளை சைபர் குற்றத்தை தடுக்கும் வகையில் முடக்கியது. 15.75 லட்சத்திற்கும் அதிகமான சிம் கார்டுகள், 5.77 IMEIக்கள் உள்ளிட்டவை ப்ளாக் செய்யப்பட்டன. முடக்கப்பட்ட செயலிகள், சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு, கடன்களை வழங்கிய செயலிகள் என கூறப்படுகிறது. இதிலிருந்து மக்களை விடுபட வைக்க, விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக SMS மற்றும் காலர்டியூன்கள் மூலமாக அரசு விழிப்புணர்வை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.

ZEENEWS TRENDING STORIES