November Bank Holidays : நவம்பர் மாதம் வங்கிகள் எப்போதெல்லாம் லீவ் தெரியுமா? விவரம் இதோ
November Bank Holidays : இந்த ஆண்டின் நவம்பர் மாதத்தில், தீபாவளி, குருநானக் ஜெயந்தி என பல பண்டிகைகள் வருகின்றன. இதனால் வங்கிக்கு எப்போதெல்லாம் விடுமுறைகள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது நல்லது.
நவம்பர் மாதத்தில், தீபாவளி, குருநானக் ஜெயந்தி என அடுத்தடுத்து பண்டிகைகள் வந்த வண்ணம் இருக்கும். இதனால், அடிக்கடி அரசு விடுமுறைகளும் வரும். எந்த விடுமுறை குறித்து தெரிந்து கொள்கிறோமோ இல்லையோ, முதலில் வங்கிகளுக்கு எந்தெந்த நாளில் விடுமுறை என்பதை நாம் கண்டிப்பாக தெரிந்து கொள்வது அவசியம் ஆகும். காரணம், நாம் வங்கி பண பரிவர்த்தனையை மனதில் வைத்து பல திட்டங்களை தீட்டி வைத்திருப்போம். ஆனால், நாம் போகும் நேரம் சரியாக வங்கி விடுமுறையாக இருந்தால்..? அந்த வேலையே தடைப்பட்டு போய் விடும். எனவே, நவம்பரில் எந்தெந்த நாட்களில் விடுமுறை விடப்படுகிறது என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
நவம்பர் மாத விடுமுறைகள்..!
எப்போதும் மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை வங்கிகளுக்கு விடுமுறையாக இருக்கும். அந்த வகையில், இந்த மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமையான நவம்பர் 14ஆம் தேதியும், நான்காவது சனிக்கிழமையான நவம்பர் 28ஆம் தேதியும் விடுமுறையாகும். அதே போல, ஞாயிற்றுக்கிழமைகளன நவம்பர் 1, 8, 15, 22, 29 உள்ளிட்ட தேதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பண்டிகை நாட்களை தவிர்த்து, இந்த நாட்களிலும் கூட வங்கிகள் விடுமுறை காரணமாக மூடப்பட்டிருக்கும்.
இவற்றை தாண்டி, வேறு என்னென்ன பண்டிகை நாட்களில் விடுமுறை தெரியுமா?
- நவம்பர் 9ஆம் தேதி, திங்கட்கிழமை தீபாவளி, லட்சுமி பூஜை, கோவர்தன் பூஜை மற்றும் விஸ்வகர்மா தினம் ஆகியவை கொண்டாடப்படுகின்றன. தமிழ்நாட்டில் இந்த தினத்தில்தான் தீபாவளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மறுநாளும் தமிழ்நாட்டில் பொதுவிடுமுறை என்பதால், நவம்பர் 10ஆம் தேதியும் தமிழ்நாட்டில் வங்கிகளுக்கு விடுமுறைதான்.
- நவம்பர் 10ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை, தீபாவளி, கோவர்தன் பூஜை, லக்ஷ்மி பூஜை மற்றும் விக்ரம் சம்வத் புத்தாண்டு ஆகியவை நாட்டின் சில பகுதிகளில் கொண்டாடப்படுகிறது.
- நவம்பர் 11, புதன்கிழமையன்று லக்ஷ்மி பூஜை, நிங்கோல் சக்கௌபா, பாய் தூஜ் மற்றும் சித்ரகுப்த் ஜெயந்தி உள்ளிட்டவை நாட்டின் சில பகுதிகளில் கொண்டாடப்படுகிறது.
- நவம்பர் 13 அன்று, வெள்ளிக்கிழமை வங்கால திருவிழா கொண்டாடப்படுகிறது.
- நவம்பர் 16ஆம் தேதியன்று திங்கட்கிழமையன்று சத் பூஜை/ சூர்ய ஷஷ்ஷ தல சச்த் கொண்டாடப்படுகிறது.
- நவம்பர் 20ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று, இகாஸ் - பக்வால் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
- நவம்பர் 23ஆம் தேதியன்று, திங்கட்கிழமை செங் குட் ஸ்னெம் எனும் பண்டிகை நாட்டின் சில பகுதிகளில் கொண்டாடப்படுகிறது.
- நவம்பர் 24ஆம் தேதியான செவ்வாய்க்கிழமையன்ற்று, குருநானக் ஜெயந்தி, கார்த்திகை பூர்ணிமா மற்றும் ரஹஸ் பூர்ணிமா உள்ளிட்டவை நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படுகிறது.
- நவம்பர் 27ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று, கனகதாச ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
வங்கி சேவைகள் இல்லை..
மேற்கூறிய நாட்களில், நாட்டில் எந்தெந்த பண்டிகையை எந்தெந்த பகுதிகளில் கொண்டாடுகின்றனரோ, அதற்கு ஏற்ப அந்தந்த மாநிலங்களில் விடுமுறை விடப்படும். இதையடுத்து இந்த விடுமுறை நாட்களில் வாடிக்கையாளர்கள் நேரில் சென்று பணம் செலுத்தவோ, எடுக்கவோ, KYC புதுப்பிக்கவோ, லாக்கர் வசதியை பெறவோ, DD கட்டுவதோ முடியாது. காசோலை பரிமாற்றங்கள், நேரடி வங்கி சேவைகளை இந்த நாட்களில் பெற இயலாது. இதனால், அவசர வேலைகளை முன்கூட்டியே ஸ்மார்ட் ஆக திட்டமிட்டுக்கொள்ளுங்கள்.
டிஜிட்டல் சேவைகள் இயங்குமா?
நேரடி வங்கி சேவைகள்தான் மேற்குறிப்பிட்ட நாட்களில் இயங்காதே தவிர, ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் நடப்பதில் எந்த பிரச்சனையும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், மொபைல் பேங்கிங், இண்டர்நெட் பேங்கிங், ஏடிஎம்கள் மற்றும் யுபிஐ சேவைகள் வழக்கம் போல 24 மணி நேரமும் தடையின்றி செயல்படும்.