SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

NPCIL-ல் அரிய வாய்ப்பு: மாதம் ரூ.25,000 வரை உதவித்தொகை.. விண்ணப்பிப்பது எப்படி?

CA, CMA Intermediate தேர்ச்சி பெற்றவர்களுக்கு NPCIL-ல் Practical Training வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.20,000 உதவித்தொகையும், தங்குமிட வசதி இல்லையெனில் கூடுதலாக ரூ.5,000-மும் வழங்கப்பட உள்ளது.

Written By R Balaji
Published: Oct 08, 2026, 03:43 PM IST | Updated: Oct 08, 2026, 03:45 PM IST
Join

சார்ட்டர்டு அக்கவுண்டன்சி அல்லது காஸ்ட் அனட் மேனேஜ்மென்ட் அக்கவுண்டன்சி படிப்பில் Intermediate தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அணுசக்தி கழகமான Nuclear Power Corporation of India Limited புதிய வாய்ப்பை அறிவித்துள்ளது. Finance and Accounts பிரிவில் Practical Training பெறுவதற்கான விண்ணப்பங்களை NPCIL தற்போது வரவேற்று வருகிறது.

இந்த பயிற்சிக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் NPCIL-ன் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

CA Intermediate அல்லது CMA Intermediate தேர்வில் Finance and Accounts பிரிவில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த Practical Training திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். மேலும், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் நிர்ணயித்துள்ள தகுதி நிபந்தனைகளையும் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

விண்ணப்பதார்களின் வயது 18 முதல் 56 வயதுக்குள் இருக்க வேண்டும். அதன்படி, அக்டோபர் 17,. 2008 அல்லது அதற்கு பிறகு பிறந்தவர்கள், மேலும் அக்டோபர் 26, 1970க்கு முன்பு பிறந்தவர்கள் இந்த பயிற்சிக்கு தகுதியற்றவர்கள்.

மாதம் ரூ. 20,000 உதவித்தொகை

NPCIL-ன் Practical Training-க்கு தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு மாதம் ரூ. 20,000 உதவித்தொகை வழங்கப்படும்.

பயிற்சி நடைபெறும் NPCIL Unit அல்லது தலைமையகத்தில் தங்குமிட வசதி கிடைக்காத பட்சத்தில், அதற்காக கூடுதலாக ரூ. 5,000 வழங்கப்படும். இதன் மூலம் தங்குமிட வசதி இல்லாதவர்களுக்கு மாதம் மொத்தம் ரூ. 25,000 வரை கிடைக்கும்.

எப்படி தேர்வு செய்யப்படுவார்கள்?

இந்த பியிற்சிக்கான விண்ணப்பங்கள், CA Intermediate அல்லது CMA Intermediate தேர்வில் மாணவர்கள் பெற்ற மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் முதற்கட்டமாக பரிசீலிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் நேரத்தில் இறுதி மதிப்பெண்கள் கிடைக்காத விண்ணப்பதாரர்கள் இந்த தேர்வுமுறையில் பரிசீலிக்கப்பட மாட்டார்கள்.

மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் அடுத்தக்கட்ட தேர்வுக்கு Shortlist செய்யப்படுவார்கள். தேர்வானவர்களுக்கு அவர்களது பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரி மூலம் தகவல் அனுப்பப்படும்.

Personal Interview-க்கு மதிப்பெண்கள் அடிப்படையில் 1:5 என்ற விகிதத்தில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த நேர்காணல் ஆன்லைன் முறையில் நடைபெறும் என்பதால், Shortlist செய்யப்படும் மாணவர்கள் நேரடியாக அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை.

எப்படி விண்ணப்பிப்பது?

NPCIL Practical Training-க்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். முதலில் இணையதளத்தில் பதிவு செய்து கணக்கை Activate செய்ய வேண்டும்.

அதன்பிறகு தனிப்பட்ட மற்றும் கல்வித் தகுதி தொடர்பான விவரங்களைப் பூர்த்தி செய்து, தேவையான புகைப்படம் மற்றும் கையொப்பத்தை பதிவேற்ற வேண்டும்.

விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து Submit செய்த பிறகு, அதன் நகலை Download செய்து பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.

Online Interview-க்கு Shortlist செய்யப்படும் விண்ணப்பதாரர்கள், தங்களது ஆதார் அட்டை மற்றும் விண்ணப்பப் படிவத்தின் நகலை தயாராக வைத்திருக்க வேண்டும்.

இந்தப் பயிற்சிக்கான முழுமையான தகுதிகள், விதிமுறைகள் மற்றும் விண்ணப்ப நடைமுறைகள் குறித்து தெரிந்துகொள்ள, விண்ணப்பிப்பதற்கு முன்பு NPCIL வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை விண்ணப்பதாரர்கள் முழுமையாகப் படித்துப் பார்ப்பது அவசியம்.
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.

ZEENEWS TRENDING STORIES