NTK Seeman Fitness Secret: இன்றயை காலத்தில் சிறார்கள் முதல் இளைஞர்கள், பெரியவர்கள் என பலரும் உடலை கட்டுக்கோப்பாக வைக்க விரும்புகின்றனர். உடலை கட்டுக்கோப்பாக வைக்க டயட், உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை செய்து வருகின்றனர். இருந்தாலும், உடலை ஃபிட்டாக வைத்திருப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.
இதற்கு தொடர் உடற்பயிற்சி, டயட்டை அவசியம் கடைபிடிக்க வேண்டும். அந்த வகையில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 59 வயதிலும் உடலை ஃபிட்டாக வைத்திருக்கிறார். அவரின் பிட்னஸ் டயட் குறித்து அறிந்து கொள்ளுங்கள்.
நடிகர், இயக்குநர் என பல அடையாளங்களை கொண்டவர்கள் சீமான். சினிமா துறையில் இருந்த சீமான், தற்போது அரசியலில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளராக சீமானன் உள்ளார். அரசியலில் அனைத்து விஷயங்களுக்கு குரல் கொடுத்து, என தொடர்ந்து ஆக்டிவாக இருப்பார்.
தேர்தல் பரப்புரை காலத்தில் தீவிரமாக அதற்கான பணிகளை செய்து வந்தார். அரசியலில் ஆக்டிவாக இருக்கும் சீமான், தனது உடல்நலனிலும் மிக மிக அக்கறையாக இருப்பார்.
தற்போது அவருக்கு 59 வயதாகிறது. என்ன தான் அரசியல் பணிகள் இருந்தாலும், உடற்பயிற்சி, டயட் விஷயத்தில் அவர் கவனமாக இருப்பாராம். குறிப்பாக, அவரின் டயர் சீக்ரெட் வெளியாகி உள்ளது. எனவே, அவர் மூன்று வேளை உணவாக என்ன சாப்பிடுகிறார் என்று பார்ப்போம்.
நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், காலை உணவாக குதிரைவாலி கஞ்சி, சாமை அடை, தினை கஞ்சி, பிரண்டை துவையல், கடலைத் துவையல், அடை, தினை உப்புமா என சிறுதானியங்களாக சேர்த்துக் கொள்கிறார். இந்த உணவுகளில் நார்ச்சத்து, புரதம், இரும்புச்சத்து போன்றவை இருக்கிறது.
மேலும், இவை அனைத்தும் செரிமானத்தை சீராக்கும். சில நாட்களில் சீமான் இட்டி, இடியாப்பம் போன்றவற்றையும் சாப்பிடுகிறாராம். முடிந்தவரை அவர் காலை உணவில் லேசான உணவுகளையே சாப்பிடுகிறார்.
மதிய உணவாக, புரதச்சத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சீமான், ஒரு கைப்பிடிட என்ற அளவில் அரிசி உட்கொண்டு, அதிகளவில் காய்கறிகளை சாப்பிடுகிறாராம். குறிப்பாக, வாரம் இருமுறை முட்டை, சிக்கன், மீன் போன்றவற்றை சாப்பிடுவதாக கூறப்படுகிறது.
இரவு உணவை எடுக்கமாட்டாராம். அதற்கு பதிலாக வெள்ளரி விதை, பேரிச்சை பழம், வால்நட்ஸ், முந்திரி பருபு, பப்பாளிச் சாறு, அத்திப்பழம் என குறைவான அளவில் இதை மட்டுமே சாப்பிடுகிறாராம்.
இது தான் சீமானின் முழு டயட்டாக உள்ளது. இந்த டயட் என்பது அவரின் வீட்டில் இருக்கும் போது தான். அவர் கட்சி பணிகளுக்காக வேலை சென்றுவிட்டால், கிடைக்கும் உணவுகளை மட்டுமே அவர் சாப்பிடுவாராம். இந்த நேரத்தில் தான், அவர் உடற்பயிற்சியில் கவனம் கொடுக்கிறார்.
பெரும்பாலும் சீமான், டம்பல்ஸ், புல் டவுன், கோர் என வலிமைக்கான பயிற்சிகளை செய்து வருகிறார். நீண்ட தூரம் நடக்கும் பழக்கமும் அவருக்கு இருக்கிறதாம். உடற்பயிற்சி, உணவு மட்டுமின்றி தண்ணீரும் சீமானின் ஃபிட்னஸாக பார்க்கப்படுகிறது.
தினமும் அதிகமான தண்ணீர் சீமான் குடித்துக் கொண்டே இருப்பதால், நீரிழப்பு பிரச்னைகள் அதிகம் ஏற்படுவதில்லையாம்.இப்படியாக தனது உடலை சீமான் கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.