• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /பயனுள்ள தகவல்கள்
  • /பிஎம் கிசான் திட்டம்: விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு! 'இதை' செய்யாவிட்டால் பணம் வராது

பிஎம் கிசான் திட்டம்: விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு! 'இதை' செய்யாவிட்டால் பணம் வராது

PM Kisan Scheme: பிஎம் கிசான் திட்டத்தில் பயனாளிகளாக இருக்கும் விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு புதிய அறிவுறுத்தலைக் கொடுத்துள்ளது. விவசாய நிலப்பதிவு தொடர்பான முக்கிய அப்டேட்

Written ByKarthikeyan Sekar
Published: Aug 07, 2026, 02:46 PM IST|Updated: Aug 07, 2026, 03:11 PM IST
joinshare
பிஎம் கிசான் திட்டம்: விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு! 'இதை' செய்யாவிட்டால் பணம் வராது
Image Credit: PM Kisan Latest News

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ: பயணிகளுக்கு குட் நியூஸ்... இணைப்பு பேருந்துகள் இயக்கம்

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ: பயணிகளுக்கு குட் நியூஸ்... இணைப்பு பேருந்துகள் இயக்கம்

2

வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ இன்று திறப்பு.. PM மோடியுடன் விஜய் பயணம்! புதிய திட்டங்கள் என்ன?

3

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ: 10 நிமிடத்திற்கு ஒருமுறை ரயில்கள் இயக்கம்.. நேர அட்டவணை, கட்டணம் இதோ

4

கடலில் ஒரு மிதக்கும் நகரம்! மும்பை வந்த ‘கார்டெலியா ஸ்கை’ சொகுசு கப்பல் – பிரமிக்க வைக்கும் அம்சங்கள்!

5

திருச்சி வேலைவாய்ப்பு: 8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு ஈப்பு ஓட்டுநர் பணி

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

PM Kisan Scheme: பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி (PM KISAN) திட்டத்தின் கீழ் ஆண்டிற்கு ரூ.6,000 உதவித்தொகை பெற்று வரும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு அரசு மற்றும் வேளாண்மைத் துறை சார்பில் மிக முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, பிஎம் கிசான் திட்டத்தில் தொடர்ந்து நிதியுதவி பெற விரும்புபவர்கள் மற்றும் அரசின் பிற வேளாண் சலுகைகளைப் பெற நினைக்கும் அனைத்து விவசாயிகளும் விவசாயிகள் அடையாள எண் (Farmer ID) பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அனைத்து நிலங்களையும் இணைப்பது கட்டாயம்

ஒருங்கிணைக்கப்பட்ட ஆதார் எண் போன்ற இந்தத் தனித்துவமான தேசிய அளவிலான அடையாள எண்ணைப் பெறும்போது, விவசாயிகள் தங்கள் பெயரில் உள்ள அனைத்து பட்டாக்கள் மற்றும் நில விவரங்களையும் முழுமையாக இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த சில விவசாயிகள், தங்களிடம் 3 அல்லது அதற்கு மேற்பட்ட பட்டாக்கள் இருந்தாலும், ஒரே ஒரு பட்டாவை மட்டும் பதிவு செய்து அடையாள எண் பெற்றுள்ளனர். அவ்வாறு ஒரு பகுதியை மட்டும் பதிவு செய்த விவசாயிகள், உடனடியாக தங்களின் எஞ்சிய நிலங்களின் விவரங்களையும் இணைக்க வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இனிமேல் நிலத்தின் அடிப்படையில் மட்டுமே சலுகைகள்

இனி வரும் காலங்களில் பயிர்க் கடன், மானிய விலையில் உரம் விநியோகம் உள்ளிட்ட அனைத்து வேளாண் நலத்திட்ட உதவிகளும், இந்த விவசாய அடையாள எண்ணில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலங்களின் பரப்பளவின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த அடையாள எண்ணில் முழு நில விவரங்களையும் இணைத்தால் மட்டுமே பிஎம் கிசான் திட்டத்தின் அடுத்தடுத்த தவணைத் தொகைகள் தடையின்றி விவசாயிகளின் வங்கித் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?

இத்திட்டத்தில் இணையாத மற்றும் நிலங்களை முழுமையாக இணைக்காத விவசாயிகள் உடனடியாகப் விவசாயியின் பெயரில் உள்ள அனைத்து பட்டாக்கள், ஆதார் கார்டு நகல், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண் ஆகிய ஆவணங்களுடன் தங்களின் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம் அல்லது தோட்டக்கலைத் துறை அலுவலகங்களை நேரடியாகத் தொடர்பு கொண்டு, தங்களது முழு நில விவரங்களையும் பதிவு செய்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

எனவே, பிஎம் கிசான் உதவித்தொகை தடையின்றி கிடைக்கத் தமிழ்நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் உடனடியாகத் தங்களது விவசாய அடையாள எண்ணை முழு நில விவரங்களுடன் புதுப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu