Post Office RD: பாதுகாப்பான வழியில் நல்ல வருமான ஈட்ட விரும்பும் நபரா நீங்கள்? தொடர்ந்து சேமித்து ஒரு பெரிய தொகையை ஈட்ட விரும்புகிறீர்களா? அப்படியென்றால் தபால் அலுவலக சேமிப்பு கணக்குகள் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.
தபால் நிலை சேமிப்பு திட்டங்கள் பாதுகாப்பான முதலீட்டு திட்டங்களாக கருதப்படுகின்றன. அஞ்சலக தொடர் வைப்பு நிதி (RD), நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான முதலீட்டாளர்களிடையே பிரபலமான ஒரு சேமிப்புத் திட்டமாக உள்ளது.
இத்திட்டத்தில் குறைந்தபட்சம் ₹100 முதலீடு செய்யத் தொடங்கலாம் என்பதால், அரசு உத்தரவாதம் கொண்ட முதலீட்டில் தங்கள் சேமிப்பை வைக்க விரும்பும் சிறு முதலீட்டாளர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது.
ஒரு முதலீட்டாளர் அஞ்சலக RD-யில் மாதம் ₹2,000, ₹3,000 அல்லது ₹5,000 செலுத்தினால், ஐந்து வருட முதிர்வு காலத்திற்குப் பிறகு அவருக்கு எவ்வளவு தொகை கிடைக்கும் என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். தற்போது, அஞ்சலக RD திட்டத்துக்கு ஆண்டுக்கு 6.7% வட்டி விகிதம் கிடைக்கிறது.
| மாதத் தவணை (RD) | மொத்த வைப்புத் தொகை (5 ஆண்டுகள்) | மொத்த வட்டி | முதிர்வுத் தொகை |
| மாதம் ₹2,000 | ₹1,20,000 | ₹22,732 | ₹1,42,732 |
| மாதம் ₹3,000 | ₹1,80,000 | ₹34,098 | ₹2,14,098 |
| மாதம் ₹5,000 | ₹3,00,000 | ₹56,830 | ₹3,56,830 |
இந்த திட்டத்தில் ஐந்து வருட கால அளவு முடிந்த பிறகு, கணக்கு வைத்திருப்பவர் தனது கணக்கை மேலும் ஐந்து ஆண்டுகள் வரை நீட்டிக்கவும், முன்பைப் போலவே மாதந்தோறும் வைப்புத் தொகையைச் செலுத்தவும் வாய்ப்பு உள்ளது.
மாதந்தோறும் தனித்தனியாகத் தவணைகளைச் செலுத்துவதற்குப் பதிலாக, ஆறு மாதங்கள் அல்லது அதற்கும் மேலான காலத்திற்கான தவணைகளை ஒரே நேரத்தில் மொத்தமாகச் செலுத்தினால், அரசு அதற்கான சலுகையை (தள்ளுபடியை) வழங்குகிறது.
6 முதல் 11 தவணைகளை முன்கூட்டியே செலுத்துவதற்கும், 12 அல்லது அதற்கு மேற்பட்ட தவணைகளை ஒரே நேரத்தில் செலுத்துவதற்கும் வெவ்வேறு விகிதங்களில் இச்சலுகைகள் கிடைக்கின்றன.