Post Office RD: ரூ.2,000, ரூ.3,000, ரூ.5,000 முதலீட்டில், 5 ஆண்டுகளுக்கு பிறகு எவ்வளவு வருமானம் கிடைக்கும்?
Post Office RD: தபால் நிலை சேமிப்பு திட்டங்கள் பாதுகாப்பான முதலீட்டு திட்டங்களாக கருதப்படுகின்றன. அஞ்சலக தொடர் வைப்பு நிதி (RD), நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான முதலீட்டாளர்களிடையே பிரபலமான ஒரு சேமிப்புத் திட்டமாக உள்ளது.
Post Office RD: பாதுகாப்பான வழியில் நல்ல வருமான ஈட்ட விரும்பும் நபரா நீங்கள்? தொடர்ந்து சேமித்து ஒரு பெரிய தொகையை ஈட்ட விரும்புகிறீர்களா? அப்படியென்றால் தபால் அலுவலக சேமிப்பு கணக்குகள் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.
தபால் நிலை சேமிப்பு திட்டங்கள் பாதுகாப்பான முதலீட்டு திட்டங்களாக கருதப்படுகின்றன. அஞ்சலக தொடர் வைப்பு நிதி (RD), நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான முதலீட்டாளர்களிடையே பிரபலமான ஒரு சேமிப்புத் திட்டமாக உள்ளது.
தபால் நிலைய தொடர் வைப்புத் திட்டம்
இத்திட்டத்தில் குறைந்தபட்சம் ₹100 முதலீடு செய்யத் தொடங்கலாம் என்பதால், அரசு உத்தரவாதம் கொண்ட முதலீட்டில் தங்கள் சேமிப்பை வைக்க விரும்பும் சிறு முதலீட்டாளர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது.
ஒரு முதலீட்டாளர் அஞ்சலக RD-யில் மாதம் ₹2,000, ₹3,000 அல்லது ₹5,000 செலுத்தினால், ஐந்து வருட முதிர்வு காலத்திற்குப் பிறகு அவருக்கு எவ்வளவு தொகை கிடைக்கும் என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். தற்போது, அஞ்சலக RD திட்டத்துக்கு ஆண்டுக்கு 6.7% வட்டி விகிதம் கிடைக்கிறது.
முதலீட்டுத் தொகையின் அடிப்படையில் முழுமையான கணக்கீடு
| மாதத் தவணை (RD) | மொத்த வைப்புத் தொகை (5 ஆண்டுகள்) | மொத்த வட்டி | முதிர்வுத் தொகை |
| மாதம் ₹2,000 | ₹1,20,000 | ₹22,732 | ₹1,42,732 |
| மாதம் ₹3,000 | ₹1,80,000 | ₹34,098 | ₹2,14,098 |
| மாதம் ₹5,000 | ₹3,00,000 | ₹56,830 | ₹3,56,830 |
Post Office RD: முதிர்வு காலத்திற்குப் பிறகும் கணக்கை தொடரலாம்
இந்த திட்டத்தில் ஐந்து வருட கால அளவு முடிந்த பிறகு, கணக்கு வைத்திருப்பவர் தனது கணக்கை மேலும் ஐந்து ஆண்டுகள் வரை நீட்டிக்கவும், முன்பைப் போலவே மாதந்தோறும் வைப்புத் தொகையைச் செலுத்தவும் வாய்ப்பு உள்ளது.
Post Office RD: கணக்கு வைத்திருப்பவர் இறந்தால் என்ன நடக்கும்?
- கணக்கு வைத்திருக்கும் நபர் துரதிஷ்டவசமாக இறந்துவிட்டால், மேற்கொண்டு வைப்புத் தொகையைச் செலுத்த வேண்டியதில்லை.
- மேலும், அதுவரை சேர்ந்த தொகை வாரிசுதாரர் அல்லது சட்டப்பூர்வ வாரிசுக்கு வழங்கப்படும்.
- சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, 60 தவணைகளும் முழுமையாகச் செலுத்தப்படாத நிலையிலும் கூட, 'பாதுகாக்கப்பட்ட சேமிப்புத் திட்டத்தின்' (PSS) கீழ் வாரிசுதாரர் முழு முதிர்வுத் தொகையையும் பெற முடியும்.
Post Office RD: கணக்கை முன்கூட்டியே முடித்துக்கொள்ளவும் முடியும்
- ஏதேனும் காரணத்திற்காக முதலீட்டாளருக்குப் பணம் தேவைப்பட்டால், கணக்கு தொடங்கிய தேதியிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு RD கணக்கை முன்கூட்டியே முடித்துக்கொள்ளலாம்.
- இருப்பினும், அத்தகைய சூழலில், அஞ்சலக சேமிப்புக் கணக்குகளுக்குப் பொருந்தக்கூடிய வட்டி விகிதத்தின் அடிப்படையிலேயே பணம் வழங்கப்படும்.
- முன்கூட்டியே வைப்புத்தொகை செலுத்தப்பட்டிருந்தால், அத்திட்டக் காலம் முடிவதற்கு முன்னதாகவே கணக்கை மூட முடியாது.
Post Office RD: ஒரே தவணையில் மொத்தமாகச் செலுத்துவதன் நன்மைகள்
மாதந்தோறும் தனித்தனியாகத் தவணைகளைச் செலுத்துவதற்குப் பதிலாக, ஆறு மாதங்கள் அல்லது அதற்கும் மேலான காலத்திற்கான தவணைகளை ஒரே நேரத்தில் மொத்தமாகச் செலுத்தினால், அரசு அதற்கான சலுகையை (தள்ளுபடியை) வழங்குகிறது.
6 முதல் 11 தவணைகளை முன்கூட்டியே செலுத்துவதற்கும், 12 அல்லது அதற்கு மேற்பட்ட தவணைகளை ஒரே நேரத்தில் செலுத்துவதற்கும் வெவ்வேறு விகிதங்களில் இச்சலுகைகள் கிடைக்கின்றன.