இன்றைய காலத்தைல் பள்ளி, கல்லூரி படிக்கும் மாணவர்களுக்கே முடி நரைக்க தொடங்குகிறது. இதனை இளநரை என்பார்கள். இந்த முடி நரை பிரச்சனையால் அவர்கள் மண உளைச்சலுக்கு ஆளாகின்றனர். வயதாகும்போது முடி நரைப்பதையே பலரால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அப்படி இருக்கையில், இளம் வயதில் முடி நரைப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.
எனினும் முறையான உணவுமுறை, சரியான தூக்கம், புகைப்பிடித்தல் போன்ற பழக்கத்தை கட்டுக்குள் கொண்டு வருவதன் மூலம் இந்த முடி நரைப்பதை மேலும் பரவாமல் பார்த்துக்கொள்ள முடியும்.
சரியான தூக்கம் இல்லாததும் இது போன்ற இள நரை பிரச்சனையை கொண்டு வரும்.
தூக்கமின்மை உடலில் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை அதிகரித்து, மெலனின் நிறமி உற்பத்தியை பாதிக்கிறது. தினமும் 7 முதல் 9 மணிநேரம் ஆழ்ந்து தூங்குவது ஹார்மோன்களை சீராக்கி, மயிர்க்கால்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் சரியாக சென்று சேர உதவுகிறது.
புகைப்பிடித்தல் இளநரைக்கு மிக முக்கியமான காரணியாக அமைகிறது. சிகரெட் புகையில் உள்ள நச்சுக்கள் உடலில் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை அதிகரித்து, மயிர்க்கால்களை நேரடியாக பாதிக்கின்றன. புகைப்பிடிப்பதை தவிர்ப்பது தலைமுடிக்கு மட்டுமல்லாமல், இதயம் மற்றும் நுரையீரல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.
அடிக்கடி கெமிக்கல் ஹேர் டை பயன்படுத்துவது, அதிக வெப்பத்தில் ஹேர் ஸ்டைலிங் செய்வது மற்றும் சூரிய வெளிச்சத்தில் நீண்ட நேரம் இருப்பது ஆகியவை மயிர்க்கால்களைப் பாதிக்கும்.
நெல்லிக்காய் மற்றும் கறிவேப்பிலை: நெல்லிக்காய் மற்றும் கறிவேப்பிலையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. கறிவேப்பிலை போட்டு காய்ச்சிய தேங்காய் எண்ணெயை தலைக்கு தேய்ப்பதும், நெல்லிக்காயை உணவில் சேர்த்துக்கொள்வதும் மெலனின் நிறமியை பாதுகாக்க உதவும்.
அதிக தண்ணீர் குடிப்பது: உடலை எப்போதும் நீரேற்றத்துடன் வைத்திருப்பது மயிர்க்கால்களின் ஆரோக்கியத்திற்கு அவசியம். அதனால் அதிக தண்ணீர் குடிப்பது நல்லது.
ஆய்வுகள் கூறுவது என்ன?: 'International Journal of Trichology' ஆய்வின்படி, உடலில் ஏற்படும் ஆக்சிஜனேற்ற அழுத்தமானது மெலனோசைட் செல்களை பாதித்து மெலனின் உற்பத்தியை குறைப்பதே நரைமுடிக்கு முதன்மை காரணம் ஆகும்.
சில மாதங்களிலேயே நரைமுடி வேகமாக அதிகரித்தல், 20 வயதிற்கு முன்பே நரைத்தல், கடுமையான முடி உதிர்தல், அதிகப்படியான சோர்வு மற்றும் இரத்த சோகை போன்ற அறிகுறிகள் இருந்தால், தாமதிக்காமல் மருத்துவரை (Dermatologist/Trichologist) அணுகுவது நல்லது.
மேலும். முடி நரைப்பதற்கு மரபணு முக்கிய காரணமாக இருந்தாலும், ஆரோக்கியமான உணவுகள், போதிய தூக்கம் மற்றும் சீரான வாழ்க்கை முறை மூலம் இளநரையை நிச்சயம் பரவாமல் தடுக்க முடியும்.