• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /பயனுள்ள தகவல்கள்
  • /அதிக காரம் சாப்பிடுறீங்களா? அசிடிட்டி முதல் செரிமான பிரச்சனை வரை.. இந்த பாதிப்புகள் வரலாம்!

அதிக காரம் சாப்பிடுறீங்களா? அசிடிட்டி முதல் செரிமான பிரச்சனை வரை.. இந்த பாதிப்புகள் வரலாம்!

அதிக காரமான உணவுகளைத் தொடர்ந்து உட்கொள்வது அசிடிட்டி, நெஞ்செரிச்சல் மற்றும் குடல் கோளாறுகளை ஏற்படுத்தும் என்பதால், காரத்தின் அளவைக் குறைத்து சரியான உணவு முறையைப் பின்பற்றுவது செரிமான ஆரோக்கியத்திற்கு அவசியம்.

Reported ByR BalajiEdited ByR Balaji
Published: Aug 20, 2026, 04:49 PM IST|Updated: Aug 20, 2026, 04:59 PM IST
joinshare
அதிக காரம் சாப்பிடுறீங்களா? அசிடிட்டி முதல் செரிமான பிரச்சனை வரை.. இந்த பாதிப்புகள் வரலாம்!
Image Credit: Image Source: X

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Madurantakam By-Election: மரகதம் குமரவேல் முன்னிலை.. தவெக எழுச்சிக்கு பாமக, விசிக வாக்குகள் காரணமா?

Madurantakam By-Election: மரகதம் குமரவேல் முன்னிலை.. தவெக எழுச்சிக்கு பாமக, விசிக வாக்குகள் காரணமா?

2

ISRO வேலைவாய்ப்பு: மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

3

ரேஷன் கார்டு இருக்கா? இந்த வசதி இருப்பதை மறக்காதீங்க.. ONORC மூலம் கிடைக்கும் முக்கிய நன்மை

4

அமெரிக்காவின் திடீர் தடை... இந்திய ஊழியர்களுக்கு இனி கிரீன் கார்டு கிடைக்காதா? Explained

5

NZ ஒருநாள் தொடர்: 2 இந்திய அணிகள்.. புவி, ஷமிக்கு வாய்ப்பு? முழு விவரம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

நம்மில் பலருக்கு காரமாக சாப்பிடுவது மிகவும் பிடித்தமான ஒன்றாக இருக்கும். மசாலாப் பொருட்கள் நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பது சிலருக்கு மிகவும் கடினம். அதேபோல் இந்திய உணவு வகைகளிலும் மிளகாய், மிளகாய்த்தூள் மற்றும் பிற காரமான மசாலாப் பொருட்களுக்குத் தனி இடம் உண்டு. மிளகாயில் உள்ள சத்துக்கள் சில நன்மைகளை அளித்தாலும், தினமும் அதிக அளவில் காரம் உட்கொள்வது செரிமானப் பாதையில் அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். கார உணவுகளின் தாக்கம் ஒவ்வொருவருக்கும் மாறுபடும் என்பதால், அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து இங்கு விரிவாகப் பார்க்கலாம்.

நெஞ்செரிச்சல் மற்றும் அமிலத்தன்மை

மிளகாயில் உள்ள காரத்தன்மை உணவுக்குழாய் மற்றும் வயிற்றுப் பகுதியில் உள்ள வெப்ப உணர்வு நரம்புகளைத் தூண்டுகிறது. இதனால் இரைப்பையில் உள்ள அமிலம் மேல்நோக்கி வந்து நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம் மற்றும் தீவிர வயிற்று வலியை உண்டாக்குகிறது. ஏற்கனவே ஜி.இ.ஆர்.டி (GERD) அல்லது அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள் அதிக காரம் சாப்பிடும்போது இதன் தீவிரம் பன்மடங்கு அதிகரிக்கிறது.

செரிமானக் கோளாறுகள்

கார உணவுகள் செரிமானப் பாதையை தீவிரமாக தூண்டி வயிற்றுப்போக்கு, வயிற்று உப்புசம் மற்றும் தசைப்பிடிப்பை உண்டாக்கும். குறிப்பாக ஐ.பி.எஸ்  எனப்படும் எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி உள்ளவர்களுக்கு காரம் செரிமான இயக்கத்தை சீர்குலைத்து கடுமையான வயிற்று வலியை ஏற்படுத்தும். மேலும், மூலம் மற்றும் ஆசனவாய் வெடிப்பு பிரச்சனை உள்ளவர்கள் காரம் எடுக்கும்போது கழிவறையில் தாங்க முடியாத எரிச்சலை அனுபவிக்க நேரிடும்.

வாய் புண் மற்றும் உணவுக்குழாய் புண்கள்

அதிகப்படியான காரம் நாக்கு, வாய் உட்பகுதி மற்றும் தொண்டையில் தற்காலிக வீக்கத்தையும் கடுமையான எரிச்சலையும் ஏற்படுத்துகிறது. காரம் நேரடியாக வயிற்றுப்புண்ணை உருவாக்குவதில்லை என்றாலும், உடலில் ஏற்கனவே 'ஹெலிகோபாக்டர் பைலோரி' (H. pylori) பாக்டீரியாவால் உருவாகும் அல்சர் புண்களை கார உணவு மேலும் அரித்து ரணமாக்கும்.

தோல் அலர்ஜி மற்றும் தூக்கமின்மை

கார உணவுகள் உடலின் வெப்பநிலையை உயர்த்தி அதிக வியர்வையை தூண்டும். இரவில் தாமதமாக அதிக காரமான உணவுகளை உட்கொள்வது அமில சுரப்பை அதிகரித்து, தூக்கமின்மை மற்றும் தூக்கத்தில் மூச்சுத்திணறல் போன்ற அசௌகரியங்களை ஏற்படுத்தும்.

எவ்வளவு காரம் சாப்பிடலாம்?

காரத்தை தாங்கும் திறன் ஒவ்வொருவரின் உடல்வாகைப் பொறுத்து மாறுபடும். உணவு உண்ட பிறகு வழக்கத்திற்கு மாறான நெஞ்செரிச்சல், மலம் கழிக்கும் போது எரிச்சல் அல்லது வயிற்று உப்புசம் ஏற்பட்டால், உங்கள் உடல் காரத்தை ஏற்கவில்லை என்பதை புரிந்துகொண்டு உடனடியாக அதன் அளவை குறைக்க வேண்டும்.

காரம் பிடிக்குமா? அப்போ இதை ஃபாலோ பன்னுங்க!

  • சமையலில் மிளகாய்த்தூளின் அளவை பாதியாக குறைத்து, சுவைக்காக சீரகம், சோம்பு, மல்லித்தூள் (தனியா), கருப்பு மிளகு மற்றும் மஞ்சள் போன்ற குடலுக்கு இதமளிக்கும் மசாலாக்களை பயன்படுத்தலாம்.
  • காரமான உணவை சாப்பிடும் போது அல்லது சாப்பிட்ட பிறகு தயிர், மோர், நெய் அல்லது ஒரு டம்ளர் பால் எடுத்துக்கொள்வது எரிச்சலைக் குறைக்கும்.
  • செரிமானம் சீராக நடைபெற உணவில் அதிகளவில் காய்கறிகள், கீரைகள், முழு தானியங்கள் மற்றும் பழங்களை சேர்க்க வேண்டும்.
  • காரத்தின் தீவிரத்தைத் தணிக்க நாள் முழுவதும் குறைந்தபட்சம் 2.5 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

மருத்துவ ஆலோசனை: காரத்தை குறைத்த பிறகும் தொடர் நெஞ்செரிச்சல், மலத்தில் ரத்தம் வெளியேறுதல், தொடர் விக்கல், கடுமையான வயிற்று வலி அல்லது திடீர் உடல் எடை இழப்பு இருந்தால் உடனடியாக இரைப்பை குடல் மருத்துவரை அணுகுவது அவசியமாகும்.
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Health Tips