ஜனவரி மாத திருப்பதி தரிசன டிக்கெட்டுகள் வெளியீடு! ஸ்ரீவாரி தேவஸ்தானம் தகவல்..எப்படி புக் செய்வது?
திருப்பதி தேவஸ்தான டிக்கெட்டுகள் வெளியிடப்படுவது குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.
இந்தியாவின் பிரசித்தி பெற்ற கோவில்களுள் ஒன்றாக இருக்கிறது, திருப்பதி பெருமாள் கோவில். இந்த கோயிலுக்கு தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இந்த அதிலும் குறிப்பாக முன்கூட்டியே திருப்பதி தரிசன டிக்கெட்டுகளுக்கான ஆன்லைன் முன்பதிவும் தொடங்கி விடும். அது குறித்த தகவல்தான் தற்போது வெளியாகி இருக்கிறது.
விவரங்கள் ஆன்லைனில் வெளியீடு!
திருப்பதி தேவஸ்தானம் இது குறித்த செய்திக்குறிப்பை வெளியிட்டிருக்கிறது. அதில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில், அடுத்த ஆண்டு அதாவது 2027ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய, தரிசன டிக்கெட்டுகள் தங்குமிட ஒதுக்கீடு விவரங்களை தேவஸ்தானம் ஆன்லைனில் வெளியிடுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, அக்டோபர் 19-திங்கட்கிழமையான இன்று, காலை 10 மணி முதல் ஸ்ரீவாரி அர்ஜித சேவைகளான சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்டதள பாத பத்மராதனை சேவை டிக்கெட்டுகள் வெளியிடப்படுகின்றன.
இதற்கான இ.மெயில் குலுக்கல் பதிவு, வரும் 21ஆம் தேதி காலை 10 மணி வரை நடக்கிறது. இதற்ற்கான கட்டணத்தை, வரும் 21ஆம் தேதியில் இருந்து, 23ஆம் தேதி மதியம் 12 மணி வரை பக்தர்கள் செலுத்திக்கொள்ளலாம்.
22ஆம் தேதி காலை 10 மணிக்கு, கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, அர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீப அலங்கார சேவை டிக்கெட்டுகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.
மேலும் படிக்க | அஞ்சல் துறை ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு: எவ்வளவு கிடைக்கும்? கணக்கீடு இதோ
அறைகள் ஒதுக்கீடு:
22அம் தேதி, மாலை 3 மணிக்கு மெய்நிகர் சேவைக்கான ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 23ஆம் தேதி காலை 10 மணிக்கு அங்கப்பிரதட்சண தரிசனத்துக்கான டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. அன்று காலை 11 மணிக்கு ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட இருக்கின்றன. அன்று மாலையே 3 மணிக்கு, மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நாள்பட்ட நோயால் அவதிப்படும் பக்தர்களுக்கான தரிசன டிக்கெட்டுகளும் ஒதுக்கீடு செய்யப்பட இருக்கின்றன.
ரூ.300 கட்டண சிறப்பு தரிசன டிக்கெட்!
அவரும் 24ஆம் தேதி காலை 10 மணிக்கு, ரூ.300 கட்டண சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட இருக்கின்றன. அதே போல, 24ஆம் தேதி மாலை 3 மணிக்கு, திருமலை மற்றும் திருப்பதியில் தங்கும் வசதிக்காக தேவஸ்தான விடுதிகளில் அறைகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. எனவே, பக்தர்கள், தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான : https://ttdevasthanams.ap.gov.in மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்!
திருப்பதி மலையில் நடைபெறும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 8வது நாளான இன்று காலை, ஏழுமலையானின் தங்க தேரோட்டம் கோயிலின் மாட வீதிகளில் நடைப்பெற்றது. இந்த தங்க தேரோட்டத்தை கண்டு, பக்தர்கள் அருள் பலிப்பதற்காக உபய நாச்சியார்கள் சமோதராக கோவிலில் இருந்து புறப்பட்டு மலையப்பர் தங்கத்தேரில் எழுந்தருளினார். இதைத்தொடர்ந்து உற்சவர்களுக்கு தூபதீப நெய்வேத்திய சம்ர்ப்பணம் நடத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து, தங்க தேருக்கு பலி உள்ளிட்ட வைதீக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதன் பின் திருப்பதி மலையில் உள்ல கோவில் மாட வீதிகளில் ஏழுமலையானின் தங்க தேரோட்டம் நடைப்பெற்றது.
இதையடுத்து, தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழுவினர், உயர் அதிகாரிகள், பெண்கள் ஆகியோர் வடம் பிடிக்க கோயில் மாட வீதிகளில் நடைபெற்ற தங்க தேரோட்டத்தின் போது பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கற்பூர ஆரத்தி காண்பித்து வழிபாடு நடத்தினர்.
மேலும் படிக்க | POMIS: பாதுகாப்பான முதலீடு, அசத்தலான வருமானம் தரும் அரசாங்கத் திட்டம்