• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /வேலைவாய்ப்பு
  • /வங்கியில் வேலை! ரூ.5 லட்சம் வரை சம்பளம்! விண்ணப்பிப்பது எப்படி? இதோ விவரம்..

வங்கியில் வேலை! ரூ.5 லட்சம் வரை சம்பளம்! விண்ணப்பிப்பது எப்படி? இதோ விவரம்..

சவுத் இந்தியன் வங்கியில் வேலை. மாதம் ரூ.5 லட்சம் சம்பளம்..எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? இதோ முழு விவரம்!

Written ByYuvashree M
Published: Oct 19, 2026, 02:55 PM IST|Updated: Oct 19, 2026, 03:00 PM IST
joinshare
வங்கியில் வேலை! ரூ.5 லட்சம் வரை சம்பளம்! விண்ணப்பிப்பது எப்படி? இதோ விவரம்..
Image Credit: South Indian Bank Recruitment 2026 | X page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை.. அக். 25 வரை மழை வெளுக்கும்! சென்னைக்கும் அலர்ட்!

தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை.. அக். 25 வரை மழை வெளுக்கும்! சென்னைக்கும் அலர்ட்!

2

வங்கியில் வேலை! ரூ.5 லட்சம் வரை சம்பளம்! விண்ணப்பிப்பது எப்படி? இதோ விவரம்..

3

டிசம்பரில் சென்னைக்கு பெரிய ஆபத்து? இந்த பகுதிக்கு எச்சரிக்கை! நிபுணர்கள் வார்னிங்

4

தாராபுரம், மதுராந்தகம் மக்களுக்கு குட் நியூஸ்! CM விஜய் அறிவித்த புதிய திட்டங்கள்.. என்னென்ன?

5

"2 ஆண்டில் பணம் இரட்டிப்பு": தமிழ்நாட்டில் பரவும் கவர்ச்சி விளம்பரங்கள் – அரசு எச்சரிக்கை

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

தனியார் வங்கிகளில் ஒன்றாக இருக்கும் சவுத் இந்தியன் வங்கியில், இளநில அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி இருக்கிறது. இதற்கு தகுதியும் விருப்பமும் இருப்பவர்கள், வரும் 27ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதோ அது குறித்த முழு விவரம்!

Junior Officer (Operations)

இந்த பணியில் சேர்வதற்கு, ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும் என்றும், 2 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது தகுதி என்ன?

இந்த பணியில் சேர வயது தகுதியானது, 31.09.2026 அன்று, 28 வயது வரை இருக்க வெண்டும். இந்த வயதில் இருப்பவர்கள், வேலைக்கு தகுதி பெற்றவர்கள் ஆகின்றனர்.
வயது தளர்வு: எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளுக்கு வயது வரம்பில் தளர்வு உள்ளது.

சம்பளம் : வருடத்திற்கு ரூ.5.14 லட்சம்

மேலும் படிக்க | தீபாவளிக்கு ஸ்வீட் தயாரிக்க தமிழ்நாடு அரசே கொடுக்கும் பயிற்சி - முக்கிய அறிவிப்பு

தேர்வு செய்யப்படும் முறை எப்படி?

இந்த பணியிடங்களுக்கு கணினி வழித்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, https://recruit.southindianbank.com/RDC/ எனும் இணையதள பக்கத்தை பார்க்க வேண்டும். அந்த பக்கத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : இந்த பணியில் சேர, 27.10.2026 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம் :

இந்த பணியில் சேர, யாருக்கும் விண்ணப்பக்கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.

விண்ணப்பிப்பது எப்படி?

https://recruit.southindianbank.bank.in/RDC/ என்ற தளத்தில் நுழைந்தவுடன் உங்கள் விவரங்கள் கேட்கப்படும், அதில் உங்கள் விவரங்களை உள்ளிட்ட பின்பு நீங்கள் குறிப்பிட்டுள்ள மெயில் ஐடிக்கு ஒரு ஓடிபி வரும். அதை உள்ளிட்டு தொடர்ந்து கேட்கப்படும் விவரங்களை உள்ளிட வேண்டும்.

அடுத்த பக்கத்தில் உங்களுடைய வேலை விவரம், வேலை அனுபவம் உள்ளிட்ட விவரங்களை உள்ளிட வேண்டும்.

உங்களது புகைப்படம், கையொப்பம் உள்ளிட்டவை, உங்களுடைய படிப்பு விவரம், அனைத்தையும் உள்ளிட்டு கடைசியில் அனைத்தையும் சரிபார்த்து Submit கொடுக்கவும்.

மேலும் படிக்க | 8ம் படித்தவர்களுக்கு தமிழக அரசின் வேலை.. மாதம் ரூ.25,000 சம்பளம்.. மதுரை மக்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

Add Zee News as a Preferred Source
TAGS:
Velai Vaippu