SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

உலகின் டாப் 10 பணக்காரர்கள்! நம்பர் 1 யார்? லிஸ்டில் இந்தியர்கள் எங்கே?

உலகின் டாப் 10 பணக்காரர்களின் பட்டியலை, Forbes வெளியிட்டுள்ளது. இதில் நம்பர் 1 இடத்தில் இருப்பது யார் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

Written By Yuvashree M Edited By Yuvashree M
Published: Aug 08, 2026, 12:10 PM IST | Updated: Aug 08, 2026, 12:53 PM IST
Join

உலகில், பல மில்லியன் மக்கள் தொகை இருந்தாலும், கோடீஸ்வரர்களின் லிஸ்டை எடுத்து பார்க்கும் போது அவர்கள் சொற்பமாக மட்டுமே இருக்கின்றனர். தொழில்நுட்பம், வர்த்தகம் என பல துறைகளில் இவர்கள் சாதித்து கோடிக்கணக்கில் சொத்துகளை குவித்து வைத்திருக்கின்றனர். அப்படி சொத்து சேர்த்த தொழிலதிபர்களில், ஆகஸ்ட் 1ஆம் தேதி நிலவரப்படி டாப் 10 பணக்காரர்கள் யார் என்பது குறித்து Forbes இதழ் ஒரு பட்டியலை வெளியிட்டிருக்கிறது.

நம்பர் 1 இடத்தில் யார்?

வேறு யாரு? எலான் மஸ்க்தான் என்று இதற்கான பதில் மட்டும் ஈசியாக வந்து விடும். இவர்தான் தொடர்ந்து பணக்காரர்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். அமெரிக்காவை சேர்ந்த இவர், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்கள் மூலமாக உலகின் நம்பர் 1 பணக்காரர் எனும் இடத்தில் இருக்கிறர். இவருடைய சொத்து மதிப்பானது, சுமார் ரூ.65.65 லட்சம் கோடியாக இருக்கிறது.

நம்பர் 2 யார்?

கூகுள் நிறுவனத்தின் இணை நிறுவனரான லாரி பேஜ், உலக பணக்காரர்களின் பட்டியலில், 2ஆம் இடத்தில் இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு சுமார் ரூ.27.78 லட்சம் கோடியாக இருக்கிறது.

3வது இடத்தில் இருப்பது யார்?

3வது இடத்தில், அமேசான் நிறுவனர் ஜெஃப் பேசோஸ் இருக்கிறார். இவருடைய மொத்த சொத்து மதிப்பு அமெரிக்க டாலர்களின் மதிப்பில் சுமார் 278 பில்லியன் டாலர்கள் வரை சொத்துகளை வைத்திருக்கிறார்.

4வது இடத்தில் இருப்பது யார்?

நான்காவது இடத்தில், கூகுள் இணை நிறுவனரான, செர்ஜி பிரின் 4வது இடத்தில் இருக்கிறார். இவர், 255.6 பில்லியன் டாலர் சொத்துகளை வைத்திருக்கிறார்.

5வது இடம் யாருக்கு?

5வது இடத்தில், மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரியும், பேஸ்புக்கின் இணை நிறுவனருமான மார்க் சுக்கர்பெர்க், 5வது இடத்தில் இருக்கிறார். இவருக்கு மொத்தம் 203 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்பாக இருப்பதாக கூறப்படுகிறது.

கடைசி 5 இடத்தில் இருப்பது யார்?

உலகின் அதிக பணக்காரர்களின் லிஸ்டில் 6வது இடத்தில், ஆராக்கிள் இணை நிறுவனரான லாரி எலிசன் இருக்கிறார். இவருடைய முழு சொத்து மதிப்பு, மொத்தம் சுமார் 201 பில்லியன் டாலர்கள் வரை இருக்கும் என கூறப்படுகிறது.

ஆடம்பர பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான, எல்விஎம்ஹெச் எனும் நிறுவனத்தின் தலைவர் பெர்னார்ட் அர்னால்டும் அவருடைய குடும்பத்தினரும் 7வது இடத்தில் இருக்கின்றனர்.

8வது இடத்தில், என்விடியா தலைமை செயல் அதிகரி ஜென்சன் ஹுவாங் இருக்கிறார். இவருடைய மொத்த சொத்து மதிப்பு, சுமார் 160 பில்லியன் டாலர்களில் இருந்து, 200 பில்லியன் டாலர் வரை இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

9வது இடத்தில், பெர்க்‌ஷயர் ஹாத்வே தலைவர் வாரன் பஃபெட் இருக்கிறார். இவர் மொத்தமாக 147 பில்லியன் டாலர்களை சொத்து மதிப்பாக வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

10வது இடத்தில், ஜாரா எனும் நிறுவனத்தின் உரிமையாளர், அமான்சியோ ஒர்டேகா இருக்கிறார். இவர்தான் இந்த லிஸ்டில் கடைசி. ஸ்பெயின் நாட்டை சேர்ந்த இவருக்கு மொத்தம் 147 முதல் 130 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை சொத்து மதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

இந்த லிஸ்டில் இந்தியர்கள் இல்லை என்பது, இந்தியாவை சேர்ந்தவர்களுக்கு வருத்தத்தை தந்துள்ளது. 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.

ZEENEWS TRENDING STORIES