• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /பயனுள்ள தகவல்கள்
  • /10 ஆண்டுகளாக முடி வெட்டாததால்..கின்னஸ் சாதனையில் இடம் பிடித்த பெண்!

10 ஆண்டுகளாக முடி வெட்டாததால்..கின்னஸ் சாதனையில் இடம் பிடித்த பெண்!

Uttarakhand Woman Long Hair : உத்தரகாண்டை சேர்ந்த ஒரு பெண், 10 ஆண்டுகளாக முடியே வெட்டாததால் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறார். இது குறித்த முழு தகவலை, இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree MEdited ByYuvashree M
Published: Aug 08, 2026, 01:35 PM IST|Updated: Aug 11, 2026, 10:26 AM IST
joinshare
10 ஆண்டுகளாக முடி வெட்டாததால்..கின்னஸ் சாதனையில் இடம் பிடித்த பெண்!
Image Credit: X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Madurantakam By-Election: மரகதம் குமரவேல் முன்னிலை.. தவெக எழுச்சிக்கு பாமக, விசிக வாக்குகள் காரணமா?

Madurantakam By-Election: மரகதம் குமரவேல் முன்னிலை.. தவெக எழுச்சிக்கு பாமக, விசிக வாக்குகள் காரணமா?

2

ISRO வேலைவாய்ப்பு: மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

3

ரேஷன் கார்டு இருக்கா? இந்த வசதி இருப்பதை மறக்காதீங்க.. ONORC மூலம் கிடைக்கும் முக்கிய நன்மை

4

அமெரிக்காவின் திடீர் தடை... இந்திய ஊழியர்களுக்கு இனி கிரீன் கார்டு கிடைக்காதா? Explained

5

NZ ஒருநாள் தொடர்: 2 இந்திய அணிகள்.. புவி, ஷமிக்கு வாய்ப்பு? முழு விவரம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Uttarakhand Woman Long Hair : பெண்களுக்கு தங்கள் உடலில் பிடித்த பாகங்களுள் ஒன்று, தலைமுடி. முகத்திற்கு என்னதான் நாம் அலங்காரம் செய்து  கொண்டாலும், சிகை அலங்காரம் சரியாக இல்லை என்றால், அனைத்தும் வீணாகி விட்டது போல உணர்வார்கள். பெண்கள் பலருக்கு, முடி நீளமாக இருந்தால், அதை பாதியாக வெட்டிக்கொள்ள வேண்டுமென தோன்றும், அதையே வெட்டிக்கொண்டால், “ஏன்தான் வெட்டினேனோ” என்று தோன்றும். இதில் முடி எப்போதும் நீளமாக வைத்துக்கொண்டிருக்கும் பெண்கள், அதை அழகாக பாராட்டி, சீராட்டி, சீகக்காய் போட்டி, சாம்பிரானி புகைப்போட்டு அழகாக தங்களை பராமரித்துக்கொள்வதுண்டு. அப்படிப்பட்ட ஒரு பெண் குறித்துதான் இந்த பதிவில் நாம் பார்க்கப்போகிறோம்.

9 அடி நீளம்..

9 அடி நீளம் என்றவுடன், இங்கே பாம்பை பற்றி படிக்கப்போகிறோம் என நினைத்துக்கொள்ள வேண்டாம். 9 அடி நீளம் என குறிப்பிட்டுள்ளது, உத்தரகாண்டை சேர்ந்த அந்த பெண்ணின் முடியை பற்றிதான். இந்த பெண்ணின் பெயர், ரேனு தாரியல். உத்தரகாண்டில் உள்ள ஹல்டிவானி எனும் இடத்தை சேர்ந்த அவர், தன்னுடைய தலைமுடியை பராமரிக்க மட்டும் பிரத்யேக கவனத்தை செலுத்தி வருகிறார். இவருடைய தலைமுடியின் நீளம்தான், சுமார் 9 அடி ஆகும்.

இப்பெண், இவ்வளவு நீளமாக முடி வளர்த்திருப்பதுதான் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறது. இந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் இதற்குறிய அதிகாரிகள் இங்கு வந்ததோடு, ரேனுவின் முடி நீளத்தை அளந்து சென்றிருக்கின்றனர்.

ரேனுவின் முடி நீளம், சுமார் 271.50 செ.மீ வரை இருக்கிறதாம். இதற்கு முன்னர் சாதனை செய்தவருடைய முடியின் நீளம், 257 ஆக இருந்துள்ளது. தன் முடியை அதைவிட நீளமாக வளர்த்திருப்பதால் அவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார்.

ரேனு சொல்வது என்ன?

தன்னுடைய முடியின் நீளத்தை பற்றி பேசியிருக்கிறார். அப்போது தான் 2015ஆம் ஆண்டில் இருந்து தலைமுடியை வளர்க்க தொடங்கியதாகவும், அதன் பிறகு தான் முடியை வெட்டவே இல்லை என்றும் தெரிவித்திருக்கிறார். நீண்ட முடி, அழகு மற்றும் பாரம்பரியத்துடன் தொடர்புடையதாக கருதப்படுவதால், தான் முடியை வளர்க்க முடிவு செய்ததாகவும், 9 அடி நீளமுள்ள கூந்தலை பராமரிக்க அதிக கவனம் தேவைப்படுகிறது என்றும் தெரிவித்தார். தொடர்ந்து, முடியை ஆரோக்கியமான முறையிலும், சேதமின்றியும் வைத்திருக்க, அதை அலச, உலர்த்த, முடிச்சிக்கலை நீக்க பல மணி நேரங்களை செலவிடுவதாகவும் தெரிவித்திருந்தார்.

என்ன தேய்க்கிறார்?

தன் முடியை பராமரிக்க, கடைகளில் விற்கப்படும் பொருட்களுக்கு மதில் இயற்கையான கூந்த பராமரிப்பு முறையை பின்பற்றி, வீட்டிலேயே கூந்தல் எண்ணெய்களையும், ஷாம்புக்களையும் தயாரிப்பதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், இந்த பாரம்பரிய அழகு குறிப்புகளை தனுடைய ஆன்லைன் தளத்தில் தன்னை பின் தொடர்பவர்களுடன் பகிர்ந்து கொள்வதாகவும், பிறரையும் ரசாயனமற்ற கூந்த பராமரிப்பை ஏற்றுக்கொள்ள ஊக்குவிப்பதாகவும் தெரிவித்தார்.

Add Zee News as a Preferred Source
TAGS:
Health Tips