• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /பயனுள்ள தகவல்கள்
  • /Explained: ஏஐ ட்ரெண்ட்.. ஒரு AI போட்டோவுக்கு எவ்வளவு செலவு தெரியுமா? ஷாக் ரிப்போர்ட்

Explained: ஏஐ ட்ரெண்ட்.. ஒரு AI போட்டோவுக்கு எவ்வளவு செலவு தெரியுமா? ஷாக் ரிப்போர்ட்

80S AI Trend Explained: சமூக வலைதளங்களில் 80s ட்ரெண்ட் வைரலாகி வரும் நிலையில், ஒரு போட்டோவை ஏஐ தயாரித்து கொடுப்பதற்கு எவ்வளவு செலவு ஆகிறது, எவ்வளவு மின்சாரம் தேவைப்படும் என்பது குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து விரிவாக இந்த தொகுப்பில் பார்ப்போம்.

Written ByUmabarkavi K
Published: Sep 15, 2026, 01:03 PM IST|Updated: Sep 15, 2026, 01:22 PM IST
joinshare
Explained: ஏஐ ட்ரெண்ட்.. ஒரு AI போட்டோவுக்கு எவ்வளவு செலவு தெரியுமா? ஷாக் ரிப்போர்ட்

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ரூஃப்-டாப் சோலார் டபுள் மானியம்: 3 ஆண்டுகளில் போட்ட பணம் ரிட்டர்ன் - தமிழக அரசின் சூப்பர் திட்டம்

ரூஃப்-டாப் சோலார் டபுள் மானியம்: 3 ஆண்டுகளில் போட்ட பணம் ரிட்டர்ன் - தமிழக அரசின் சூப்பர் திட்டம்

2

பிரதமர் மோடி சென்னை விசிட்... CM விஜய் வைத்த கோரிக்கைகள் என்னென்ன?

3

பட்டா மாற்றம் முதல் சான்றிதழ்கள் வரை: விஏஓ அலுவலகத்திலேயே கிடைக்கும் வசதிகள் முழு விவரம்!

4

கோவை டூ நெல்லை.. பிச்சு உதறப்போகும் கனமழை! வானிலை மையம் எச்சரிக்கை

5

RR அணியில் இருந்து வெளியேறும் ஜெய்ஸ்வால்? இந்த அணிக்குதான் செல்கிறாராம்.. முழு விவரம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

80S AI Trend Explained: இந்த காலத்தில் மிக வேகமாக வளர்ச்சியடையும் துறை என்றால் ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு தான்.  நாம் கண்ணிமைக்கும் நேரத்தில் ஏஐ துறையில் ஏகப்பட்ட வளர்ச்சிகள் குவிந்து வருகிறது. இவ்வளவு வேகமான வளர்ச்சி இருக்கும் அதே நேரத்தில், அதில் ஆபத்தும் இருக்கிறது என பலரும் கூறி வருகின்றனர்.  ஏஐ தகவல் தொழில்நுட்பத் துறையை புரட்டு போட்டுவிட்டது. நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு ஏஐ தற்போது  அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது.

ஏஐ போட்டோ

ஏஐ தொழில்நுட்பம் தொடர்ந்து வளர்ந்து வரும் நிலையில், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் மனித குலத்தை அழித்துவிடும என தொழில்நுட்ப வள்ளுநர்கள் கூறி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, அவ்வப்போது சமூக வலைளதங்களில் ஏஐ ட்ரெண்ட் வலம் வருகிறது. சிறு வயது போட்டோ முதல் வயதானவர் போன்று காட்டும் வகையில், ஏஐ போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அப்படி அண்மையில் ட்ரெண்டாகி இருப்பது தான், 80s ரெட்ரோ போட்டோ.

நெட்டிசன்கள் பலரும் ஏஐயிடம் தங்களது போட்டோவை கொடுத்து, நான் 80s எப்படி இருப்பேன் என prompt கொடுத்து கேட்க, ஏஐ அதற்கு ஏற்ப போட்டோ கிரியேட் செய்து வருகிறது. இந்த புகைப்படங்கள் பார்க்க நன்றாக வசீகரமாக இருந்தாலும், இதற்கு பின்னால் பெரிய இயற்பியல் உள்கட்டமைப்பு இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த ஏஐ புகைப்படங்கள் கோடிக்கணக்கில் செலவு, மின்சாரம், பல லட்சம் லிட்டர் கணக்கில் தண்ணீரும் தேவைப்படுகிறது என்பதே உண்மை.

ஒரு ஏஐ போட்டோ உருவாக்க எவ்வளவு மின்சாரம் தேவைப்படும்?

ஒவ்வொரு ஏஐ போட்டோ உருவாக்குவதற்கு கணினியின் ஆற்றல் தேவைப்படுகிறது. அதாவது, மின்சாரம், தண்ணீர் தேவைப்படுகிறது. ஒரு படம் மட்டும் என்று பார்க்கும்போது, சுற்றுச்சூழல் பாதிப்பு சிறிய அளவில் தான் இருக்கும். ஆனால், கோடிக்கணக்கான மக்கள் படங்களை உருவாக்கி அவற்றி பல  வடிவங்களை முயற்சி செய்து, வைரல் போக்கை பின்பற்றும்போது  என்ன நடக்கும் என்பது மிகப்பெரிய கவலையாக இருக்கிறது.

இது தொடர்பாக கார்னகி மெலன் பல்கலைக்கழகம் மற்றும் ஹக்கிங் ஃபேஸ் ஆகியவை ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்படி, ஒரு ஏஐ படத்தை உருவாக்குவதற்கு 0.01 முதல் 0.29 கிலோவாட் மணி (Kwh) மின்சாரம் வரை பயன்படுத்தப்படலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது பயன்படுத்தப்படும் ஏஐ அமைப்பு (Chatgpt, Gemini) மற்றம் படம் உருவாக்கப்படும் முறையை பொறுத்து மாறுபடும் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது. பொதுவாக தரவு மையங்களில் வைக்கப்பட்டுள்ள பிரதயே சிப் மூலம் ஏஐ வழங்குகிறது.

அந்த இயந்திரங்கள் 24 மணி நேரம் செயல்படும்போது, மிக அதிக அளவிலான மின்சாரம் நுகர்கின்றன. அதோடு இல்லாமல், தீவிரமான வெப்பத்தையும் ஏற்படுத்துகிறது. எனவே, தரவு மையம் எங்கு உள்ளது, அது எந்த வகையான மின்சாரத்தை பயன்படுத்துகிறது என்பது பொறுத்து மின்சாரம், நீர் பயன்பாடு இருக்கும். ஏஐ அமைப்புகளிடம் டைப் செய்து விளக்கம் பெறும் பணியை விட ஒரே ஒரு புகைப்படத்தை உருவாக்குவதற்கு 1,450 மடங்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படுவதகா தரவுகளில் சொல்லப்பட்டுள்ளது.

ஒரு ஏஐ போட்டோ உருவாக்க தேவைப்படும் மின்சாரத்தை கொண்டு, 10 வாட் எல்ஈடி பல்வை சுமார் 17 நிமிடங்கள் ஏரிய வைக்க முடியும் என்றும் ஏஐ வீடியோ என்றால், 42 மணி நேரம் வரை பல்பை ஏரிய வைக்கலாம் என தரவுகளில் சொல்லப்பட்டுள்ளது.  ஒரு குறுகிய AI வீடியோவை உருவாக்குவதற்கு பயன்படுத்தப்படும் மின்சாரம், சுமார் 2 லட்சம் மின்னஞ்சல்கள்/செய்திகள் spam-ஆ அல்லது இல்லையா என்று AI மூலம் சரிபார்க்க பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு சமமாக இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

ஏஐ போட்டோவிற்கு தேவைப்படும் தண்ணீர்

ஏஐ போட்டோ உருவாக்க லிட்டர் கணக்கில் தண்ணீரும் தேவைப்படுகிறது. அதாவது, வாட்டர் ரிசர்ச் என்ற வழக்கில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, ஒரு ஏஐ இமேஜை உருவாக்க 0.04 லிட்டர் முதல் 2 லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படுகிறது. 1 மில்லியன் போட்டோகளை இது போல உருவாக்க  40,000 லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படுகிறது. இது, கிட்டத்தட்ட 20,000 பேருக்கு ஒரு நாளைக்கு தேவைப்படும் தண்ணீராக இருப்பதாக கூறப்படுகிறது.

அதிர்ச்சி ரிப்போர்ட்

கடந்த ஆண்மு உலகளவில் தரவு மையங்கள்  சுமுர் 448 டெராவாட் மணி மின்சாரத்தை பயன்படுத்தியுள்ளன. இதில் செயற்கை நுண்ணறிவு ஏறக்குறைய ஐந்தில் ஒரு பங்கை கொண்டுள்ளது.  அந்த தரவு மையங்கள் சுமார் 4.5 டிரில்லியன் லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்தியதுடன்,  சுமார் 189 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தையும் உருவாக்கின.  

2030-ஆம் ஆண்டளவில், தரவு மையங்களின் ஆண்டு மின்சார நுகர்வு சுமார் 945 டெராவாட்-மணி (TWh) ஆக, கிட்டத்தட்ட இருமடங்காகலாம். இதில், செயற்கை நுண்ணறிவு (AI) மொத்தத்தில் சுமார் 40% பங்களிக்கும். நீர் நுகர்வு 9.3 டிரில்லியன் லிட்டராக உயரக்கூடும். அதே நேரத்தில் அதனுடன் தொடர்புடைய கார்பன் டை ஆக்சைடு (CO2) வெளியேற்றம் சுமார் 399 மில்லியன் டன்களை எட்டக்கூடும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2030ஆம் ஆண்டுக்குள் செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பால் ஆண்டுதோறும் சுமார் 2.5 மில்லியன் டன் மின்னணுக் கழிவுகள் உருவாகக் கூடும் என ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகம் மதிப்பிடப்பட்டுள்ளது. அதிகமான கணினி உபகரணங்கள் நிறுவப்படுவதால்  மின்னணுக் கழிவுகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆய்வின்படி, தரவு மையங்கள பயன்படுத்தும் நிலப்பரப்பு 2030ஆம் ஆண்டுக்குள் சுமார் 6,900 சதுர கிலோ மீட்டரில் இருந்து 14,500 சதுர கிலோ மீட்டருக்கும் அதிகமாக அதிகரிக்கக் கூடும் என கூறப்படடுள்ளது. மேலும், ஏஐ ஐந்து முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களின் மூலதனச் செலவினம் 2025-ஆம் ஆண்டில் 400 பில்லியன் டாலர்களைத் தாண்டியது என்றும், 2026-ஆம் ஆண்டில் இது மேலும் 75 சதவீதம் அதிகரிக்கும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏஐ புகைப்படத்தை உருவாக்கக் கூடாதா?

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி ஒரு புகைப்படத்தை உருவாக்குவதால் மட்டும் பெரிய அளவிலான சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்று சொல்ல முடியாது. உதாரணமாக, 80களின் தோற்றத்தில் ஒரு புகைப்படத்தை உருவாக்குவது போன்ற தனிப்பட்ட பயன்பாடுகள் குறைந்த அளவிலான மின்சாரத்தையே பயன்படுத்தும்.

ஆனால், ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான பயனர்கள் ஏஐ மூலம் புகைப்படங்களை உருவாக்குவதும், ஒரே படத்திற்காக பல முறை முயற்சி செய்வதும் ஒட்டுமொத்த மின்சார பயன்பாட்டை அதிகரிக்கிறது. ஏஐ சேவைகளை இயக்கும் தரவு மையங்களில் மின்சாரத்துடன் தண்ணீரும் பயன்படுத்தப்படுகிறது. 

எனவே, தேவையில்லாமல் தொடர்ந்து பல படங்களை உருவாக்குவதைத் தவிர்ப்பது சுற்றுச்சூழலுக்கு நல்லது. அதேநேரத்தில், ஒரு சில ஏஐ புகைப்படங்களை உருவாக்கியதற்காக பயனர்கள் குற்ற உணர்வு கொள்ள வேண்டிய அவசியமில்லை. அளவோடு, தேவைக்கேற்ப பயன்படுத்துவது போதுமானது.

Add Zee News as a Preferred Source
TAGS:
Technology