Sivakasi Diwali Crackers: தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டது. தீபாவளி என்றாலே பட்டாசுதான். பட்டாசு என்றால் சிவகாசிதான். சிவகாசி பட்டாசுகள் பல ஆண்டுகளாக மக்களின் தீபாவளி கொண்டாட்டத்திற்கு மேலும் பெருகேற்றி வருகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் சிவகாசியின் பட்டாசு விற்பனையாளர்கள் பட்டாசு வகைகளில் பல புதுமைகளை செய்கிறார்கள். தண்ணீரில்லாமல் நீந்தும் மீன்கள், ஓட்டுநர்கள் இல்லாத பந்தயக் கார்கள், தீப்பொறிகளால் பொங்கி வழியும் ஷாம்பெயின் பாட்டில்கள் என சிவகாசியின் பட்டாசு தயாரிப்பாளர்கள், பல புதிய வகைகளில் பாரம்பரிய வாணவேடிக்கைகளை வண்ணம், இயக்கம் மற்றும் ஒலியின் சிறிய காட்சிகளாக மாற்றி, தீபாவளிக்கு ஒரு புதிய தோற்றத்தை அளிக்கின்றனர்.
இந்த ஆண்டுப் பட்டியல்களில் இடம்பெற்றுள்ள புதுமையான வகைகள் பின்வருமாறு:
ஒரே ஒரு முறை வெடிக்கும் வழக்கமான பட்டாசுகளைப் போலல்லாமல், இந்தப் புதுமையான வகைகள் அசையும் காட்சிகள், மாறும் வண்ணங்கள் மற்றும் பலவிதமான எஃபெக்டுகளை வழங்குகின்றன.
இந்த புதிய வகைகள், வழக்கமான வடிவங்களைத் தாண்டி, ஃபயர் எக், குல்ஃபி ட்ரீம்ஸ், மேஜிக் மணி, பட்டர்ஃபிளை ஃபவுண்டன் மற்றும் மயில் உருவம் கொண்ட பட்டாசுகளுடன் விரிவடைந்து வரும் வகைகளில் சேர்க்கப்பட்டுள்ளன. ஊதா நிறப் பூந்தொட்டிகள், வானவில் நீரூற்றுகள் மற்றும் பலமுறை வெடிக்கும் வானில் பறக்கும் பட்டாசுகளும் வழக்கமான தங்க நிற பட்டாசுகளுக்கு மாற்றாக அமைகின்றன.
வெளியிடப்பட்டுள்ள சிவகாசி பட்டாசு பட்டியலின் படி, ஃபங்கி ஃபிஷ் ஒரு பொட்டலத்திற்கு சுமார் ரூ.184 என்றும், ரேஸ் கார் இரண்டு துண்டுகளுக்கு ரூ.590 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. உற்பத்தியாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களைப் பொறுத்து விலைகள் மாறுபடுகின்றன. பெரிய அளவிலான வானில் பறக்கும் பட்டாசுகளுக்கு அதிக விலை நிர்ணயிக்கப்படுகிறது.
சமீபத்திய ஆண்டுகளில், ஆடம்பரமான ரகங்கள், முன்கூட்டிய முன்பதிவுகள் மற்றும் கலவையான குடும்பப் பொட்டலங்கள் ஆகியவற்றில் ஆர்வம் அதிகரித்து வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, ஊதா நிறப் பூந்தொட்டி பட்டாசுகளும், தங்க நிற வானில் பறக்கும் பட்டாசுகளும், 30 முதல் 50 அடி உயரம் வரை காற்றில் செல்லும் பிரம்மாண்டமான பட்டாசுகளும் அதிக டிமாண்டில் உள்ளதாக விற்பனையாளர்கள் கூறுகிறார்கள்.
பல வித புதிய ரக பட்டாசுகள் வந்தாலும், அன்று முதல் இன்று வரை மக்களின் 'ஆல் டைம் ஃபேவரட்' ஆக இருப்பவை இவைதான்:
இன்றளவிலும் மக்கள் இவற்றை அதிக அளவில் வாங்குவதாகவும், இவற்றுக்கான மவுசு என்றுமே குறையாது என்றும் சிவகாசி விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். இவற்றை தவிர பரிசுப் பெட்டிகள், காம்போ பெட்டிகள், ஆட்டம் பாம், பிற வெடிகளும் மக்களின் லிஸ்டில் டாப்பில் உள்ளதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள்.