Cindy Workout : உலகளவில், பெரிய சூப்பர் ஹீரோவாக இருப்பவர், டாம் ஹாலாண்ட். 16 வயது டீன் ஏஜ் பையனாக ஸ்பைடர்மேன் ஹோம் கம்மிங் படத்தில் நடித்ததை தொடர்ந்து, இவருக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகி விட்டது. சமீபத்தில் ஸ்பைடர்மேன் : பிராண்ட் நியூ டே திரைப்படம் வெளியானது. இந்த படத்தில், டாம் ஹாலாண்டின் உடற்கட்டு அதிகமாகவே காண்பிக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து இவருடைய வர்க்-அவுட் ரொட்டீன் என்ன என்பதை அனைவரும் தேடி வருகின்றனர்.
வழக்கமாக, சினிமாவில் இருக்கும் அனைவருமே தன்னுடைய உடலை பராமரித்துக்கொள்ள ஜிம் செல்வது, வீட்டில் உடற்பயிற்சி செய்வது மிகவும் சாதாரணமான விஷயம். அப்படி இருக்கும்போது, ஸ்பைடர் மேன் உடலை சரியாக மெயின்டெயின் செய்யவில்லை என்றால் எப்படி? தற்போது சமீப காலமாக அவருடைய உடற்பயிற்சி குறித்துதான் அனைவரும் பேசி வருகின்றனர்.
Cindy Workout என்பது, மூன்றே மூன்று உடற்பயிற்சிகளை வைத்து செய்யப்படும் வர்க்-அவுட் ஆகும். 5 புல்-அப்ஸ், 10 புஷ்-அப்ஸ், 15 ஸ்குவாட்ஸ் உள்ளிட்டவைதான் அந்த மூன்று உடற்பயிற்சிகள். இதை முடிக்க, ஒரு நேரத்தை செட் செய்து விட்டு, அதற்குள்ளாக மூன்றையும் முடிக்க வேண்டும். இது, இதய ஆரோக்கியத்திற்கு வலுவான உடற்பயிற்சி என்று கூறப்படுகிறது. இதனை Crossfit உடற்பயிற்சி என்றும் கூறுவர்.
புஷ் அப், புல் அப், ஸ்குவாட் ஆகிய மூன்று உடற்பயிற்சிகளும் வெவ்வேறு செட்களாக 20 நிமிடங்களுக்கு செய்யப்படும். 20 நிமிடங்களுக்கு எத்தனை செட் முடிக்க முடியுமோ, அத்தனையையும் முடிக்கலாம். இது, தசைப்பயிற்சியாக இருப்பதோடு மட்டுமன்றி, இதயத்திற்கும் நல்லதாம். இதனை, ஒருவரின் ஃபிட்னஸ் லெவலுக்கு ஏற்ப இந்த உடற்பயிற்சியின் முறைகளை மாற்றிக்கொள்ளலாம்.
Cindy வர்க்-அவுட்டில் மிகப்பெரிய விஷயமே, இதில் செய்யப்படும் மூன்று உடற்பயிற்சியும், வெவ்வேறு தசைகளுக்கான உடற்பயிற்சியாக இருக்கும்.
புல்-அப்ஸ்:
புல் அப்ஸ் உடற்பயிற்சி, முதுகு மற்றும் பின் தசைகளுக்கான உடற்பயிற்சியாக இருக்கிறது.
பைசப்ஸ்:
பைசப்ஸ் உடற்பயிற்சி, தோள்பட்டை மற்றும் க்ரிப்பிற்காக செய்யப்படும் உடற்பயிற்சியாகும்.
புஷ்-அப்ஸ்:
புஷ் அப்ஸ் உடற்பயிற்சிகள், மார்புக்காக முக்கியமாக செய்யப்படும் உடற்பயிற்சிகளாகும். இது, தோள்பட்டை, ட்ரைசெப் உள்ளிட்டவற்றிற்கான உடற்பயிற்சியாக இருக்கிறது.
இது குறித்து பேசும் மும்பை மருத்துவர் ஜினால் பட்டீல், இந்த வகையான Cindy வர்க்-அவுட், இது முழு உடலுக்கான வர்க்-அவுட்டாக செயல்படும் என குறிப்பிட்டிருக்கிறார். மேலும், இதில் ஒரு சில குறைகளும் இருப்பதாகவும், இதனால் சீக்கிரமாக உடல் சோர்வு ஏற்படும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இதயம் உள்ளிட்ட பிற உடல் பாகங்களுக்கு இது வேலை கொடுக்கும் என்று கூறியிருக்கிறார்.
Cindy உடற்பயிற்சி, முழுக்க முழுக்க வலிமையை அடிப்படையாகக் கொண்ட உடல் எடைப் பயிற்சிகளைக் கொண்டிருந்தாலும், அதன் அதிக உடல் அடர்த்தி கொண்ட வடிவம் இதய மற்றும் இரத்த நாள அமைப்பில் கணிசமான அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் என கூறப்படுகிறது.
இந்த உடற்பயிற்சிகளால், அதிகளவில் வியர்வை வரலாம். எனவே, வர்க்-அவுட்டின் போது இடையிடையே தண்ணீர் குடிக்க மறக்க கூடாது என மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், இந்த வர்க்-அவுட்டை செய்யும் முன்னர், உங்கள் மருத்துவரிடம் ஒரு முறை உங்களின் உடல் குறித்து சோதனை செய்த பின்னர் முடிவெடுக்கவும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. டாம் ஹாலாண்ட் இந்த வர்க-அவுட்டை செய்வதற்கு காரணம், அவர் பெரிய ஆக்ஷன் காட்சிகளில் நடிப்பதனால்தான். அப்படி எதுவும் இல்லாத பட்சத்தில், சாதாரண மக்கள் இவ்வளவு intenseஆன உடற்பயிற்சியை செய்ய, பெரிதாக அறிவுறுத்தப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.