• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /பயனுள்ள தகவல்கள்
  • /AI-ஐ சார்ந்திருக்கும் மனிதர்கள்! இப்படியே போச்சுன்னா 2040ல் என்ன ஆகும்?

AI-ஐ சார்ந்திருக்கும் மனிதர்கள்! இப்படியே போச்சுன்னா 2040ல் என்ன ஆகும்?

செயற்கை நுண்ணறிவு எனப்படும் AIயிடம், மனிதர்கள் கடந்த சில நாட்களாகவே ரொம்ப சார்ந்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்படியே சென்றால் இன்னும் சில வருடங்களில் என்ன ஆகும் என்பது குறித்து சில ஆய்வுகள் வெளியாகின்றன.

Written ByYuvashree M
Published: Aug 19, 2026, 06:18 PM IST|Updated: Aug 19, 2026, 06:24 PM IST
joinshare
AI-ஐ சார்ந்திருக்கும் மனிதர்கள்! இப்படியே போச்சுன்னா 2040ல் என்ன ஆகும்?
Image Credit: AI Impact | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ இன்று திறப்பு.. PM மோடியுடன் விஜய் பயணம்! புதிய திட்டங்கள் என்ன?

வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ இன்று திறப்பு.. PM மோடியுடன் விஜய் பயணம்! புதிய திட்டங்கள் என்ன?

2

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ: 10 நிமிடத்திற்கு ஒருமுறை ரயில்கள் இயக்கம்.. நேர அட்டவணை, கட்டணம் இதோ

3

கடலில் ஒரு மிதக்கும் நகரம்! மும்பை வந்த ‘கார்டெலியா ஸ்கை’ சொகுசு கப்பல் – பிரமிக்க வைக்கும் அம்சங்கள்!

4

திருச்சி வேலைவாய்ப்பு: 8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு ஈப்பு ஓட்டுநர் பணி

5

மருத்துவச் செலவுகளுக்கும் கை கொடுக்கும் ஓய்வூதியத் திட்டம் – முழு விவரம் Explained

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

கடந்த சில வருடங்களாக, செயற்கை நுண்ணறிவு எனப்படும் Artificial Intelligence நவீன உலகில், தன்னுடைய ஆளுமையை பெரிதாக செலுத்தி வருகிறது. இந்த AI தொழில்நுட்பத்தால் பெரிய தரவுகளை சீக்கிரமாக, சுருக்கமாக விளக்குவது அல்லது புரிந்து கொள்வது, வேலைகள் இலகுவாவது போன்ற பல நல்ல விஷயங்கள் நடந்துள்ளன. ஆனால், நாணயத்திற்கு இரு பக்கங்கள் இருப்பது போல, பிரபஞ்சத்தின் எந்த படைப்பை எடுத்துக்கொண்டாலும் அதில் நன்மையும் தீமையும் இருக்கும். அப்படி செயற்கை நுண்ணறிவிலும் சில தீமைகள் உள்ளன. மனிதர்களான நாம், AI-ஐ அதிகமாக உபயோகிக்க ஆரம்பித்த பிறகு அது கொடுக்கும் பதிலுக்காக காத்திருப்பது, அவை என்ன செய்ய சொல்கிறதோ அதை செய்வது போன்ற விஷயங்கள் அதிகரித்திருக்கிறது.

AI-ஐ சார்ந்திருக்கும் மனிதர்கள்..!

முன்னர், நாம் ஒரு வேலைக்கு விண்ணப்பிக்கிறோம் என்றால், அதில் மெயில் எழுதுவது முதல், சுய விவரக்குறிப்பை தயார் செய்வது வரை அனைத்தையும் நாம்தான் கைப்பட எழுதுவோம். ஆனால், இப்போது பெரும்பாலானோர் இதற்கு AIதான் உபயோகிக்கின்றனர். அது மட்டும் கிடையாது, பல பேர் தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை AI-யிடம் பகிர்ந்து, அது ஆறுதலாக பேசுவதையும் அது கூறும் வார்த்தைகளையும் எடுத்துக்கொண்டு, உயிர், உடல் இல்லாத ஒன்றிடம் ஆறுதல் தேடி வருகின்றனர். இப்படி வேலைக்கு விண்ணப்பிப்பது முதல், ஆறுதல் படுத்துவது வரை கடந்த சில வருடங்களாக மனிதர்கள் அதனிடம் ரொம்பவே சார்ந்து இருக்கின்றனர்.

2040ல் உலகம் எப்படி இருக்கும்?

எப்போதாவது உங்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று நினைத்ததுண்டா? 2040ஆம் ஆண்டு, நீங்கள் காலையில் கண் விழித்ததுமே, உங்களுடைய AI உதவியாளர், உங்களின் தினசரி அட்டவணையை தீர்மானிக்கும். உங்கள் உடல், ஆரோக்கியம் அனைத்தையும் பயோமெட்ரிக் மூலம் ஆராய்ந்து, எதை நீங்கள் சாப்பிட வேண்டும், எதை சாப்பிட கூடாது, எதை நினைக்க வேண்டும், ஏன், எதற்கு, யாரிடம் பேச வேண்டும் என்பதை கூட AI தீர்மானிக்கும் காலம் வரலாம். இது இப்போது கற்பனை செய்து பார்க்கக்கூடிய ஒரு விஷயமாக இருக்கலாம். ஆனால், அதுவே உண்மையாக மாறவும் வாய்ப்புள்ளது என்பது நம் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். நாம் தொழில்நுட்பத்திற்கு அடிமையாகி வருவதன் அடுத்தக்கட்டமாகவும் இது இருக்கலாம்.

2040ல் உலகம் எப்படி இருக்கும் என்பதற்கு பல நிபுணர்கள், பல்வேரு பார்வைகளை முன் வைக்கின்றனர்.

ஒரு சில பேர், AIஆல் மனித குலத்திற்கு ஆபத்து வரும் என கூற, இன்னும் சிலர்,  வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறலாம் என தெரிவிக்கின்றனர். ஒரு சிலர், இது புதிய ஏணிப்பாதை மற்றும் வளர்ச்சிக்கான அடித்தளம் எனக்கூற, இன்னும் சிலர் இதனால் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும் என தெரிவிக்கின்றனர்.

சிந்தனை திறனை இழக்கும் மனிதர்கள்?

விஞ்ஞான ஆய்வாளரான நட்டாலியா கோஸ்மியா, தனது நிறுவனத்தில் பணிபுரிய இண்டர்ன்ஸ் தேவை என்று கூறியிருக்கிறார். அவருக்கு பல மின்னஞ்சல்கள் வந்துள்ளன. ஆனால் அதை பார்த்தவருக்கு மேலும் அதிர்ச்சிதான் காத்திருந்தது. அவருக்கு வந்த மின்னஞ்சல்களில், பல AIஆல் உருவாக்கப்பட்டவையாக இருக்கின்றன. அவர், தனக்கு மின்னஞ்சல் அனுப்பியவர்கள் google gemini, claude, chatgpt உள்ளிட்டவற்றை பயன்படுத்தி இதை எழுத்தி இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடித்தார்.

கோஸ்மினா மாசாச்சூட்ஸ் பல்கலைக்கழகத்தில் மனிதர்களுக்கும் கம்ப்யூட்டர்களுக்கும் இடையேயான உரையாடல் எந்த மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை ஆராயும் ஆராய்ச்சியாளராகவும் இருக்கிறார். ஒரு நாள், தன்னிடம் படிக்கும் மாணவர்கள், பாடங்களை எளிதில் மறப்பதை கவனித்திருக்கிறார். இதற்கு காரணம், தன் மாணவர்கள் AI chatbot-களை உபயோகிப்பதால்தான் என சந்தேகிக்கிறார்.

இது குறித்து வருத்தம் தெரிவிக்கும் அவர், நாம் இப்படியே AI-ஐ சார்ந்திருந்தால், நாம் பயன்படுத்தும் மொழியில் இருந்து, மூளையை பயன்படுத்தி நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு வேலையையும் இந்த AI பாதிக்கும் என தன்னுடைய ஆய்வில் அவர் குறிப்பிட்டுள்ளார். இப்படியே சென்றால், அறிவாற்றல் வீழ்ச்சி ஏற்படவும் வாய்ப்புள்ளது என்று அவர் கூறியிருக்கிறார்.

தினசரி அத்தியாவசியமாக மாறி விடுமா?

OpenAI நிறுவனத்தின் தலைமை செயலாளர் சாம் ஆல்ட்மேன், ஒரு முறை தன்னுடைய நேர்காணலில் எதிர்காலத்தில் AI ஒரு தினசரி பயன்பாடாக மாறலாம் என்று கூறியிருக்கிறார். இதனால், தண்ணீர், மின்சாரம் போன்றவை அத்தியாவசியமாக மாற்றப்பட்டது போல ஏஐ-யும் மாற்றப்படலாம் என கூறப்படுகிறது.

சுதந்திரம் பறிபோகுமா?

எதிர்காலத்தில், நம்முடைய விருப்பங்களும் கூட, AI அல்காரிதமாக வடிவமைக்கப்பட வாய்ப்பிருக்கிறது. நீங்கள் எதை பார்க்க வேண்டும், எதை வாங்க வேண்டும், எதை பேச வேண்டும், எதை ஆதரிக்க வேண்டும் என்பதை அந்த அல்காரிதமே தீர்மானிக்கலாம். இதனால், 2040ல் விலையுயர்ந்த ஒரு பெரும் பொருளாக இருக்கப்போவது உங்களின் Privacyஆக இருக்கலாம்.

கடைசியாக..

தொழில்நுட்பம் என்பது, மனித வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட ஒரு கருவி மட்டுமே. ஆனால், அதை நாம் நம்மை ஆளும் எஜமானராக மாற்றி விடக்கூடாது என்பது பலரது கருத்தாக இருக்கிறது. நாம் நம்மை சரிசெய்ய தவறிவிட்டால், 2040ல் மனிதகுலம் தன்னுடைய தனித்துவத்தை இழக்க வாய்ப்பிருக்கிறது. எனவே, இதிலிருந்து நீங்கள் விடுபட, அதற்கு அடிமையாகாமல் இருக்க வேண்டும். தொழில்நுட்பத்திற்கும், மனிதரான உங்களுக்கும் இடையேயான ஆரோக்கியமான சமநிலையை உருவாக்குவதுதான் ஒரு ஆரோக்கியமான நடைமுறையாக இருக்கும் என்பது ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.

Add Zee News as a Preferred Source
TAGS:
Asia