• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /பயனுள்ள தகவல்கள்
  • /முட்டை மஞ்சள் கருவை..யாரெல்லாம் சாப்பிடக்கூடாது? இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..

முட்டை மஞ்சள் கருவை..யாரெல்லாம் சாப்பிடக்கூடாது? இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..

நம்மில் பலருக்கு, முட்டை சாப்பிடும் போது அதனுடன் இருக்கும் மஞ்சள் கருவை சாப்பிடவே பிடிக்காது. ஒரு சிலர், அதை சாப்பிட்டால் தனக்கு ஆகாது என்று தவிர்த்து விடுவர். அப்படி, முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிடக்கூடாத நபர்கள் யாரென்று உங்களுக்கு தெரியுமா?

Written ByYuvashree M
Published: Aug 13, 2026, 04:06 PM IST|Updated: Aug 13, 2026, 04:11 PM IST
joinshare
முட்டை மஞ்சள் கருவை..யாரெல்லாம் சாப்பிடக்கூடாது? இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..
Image Credit: X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Madurantakam By-Election: மரகதம் குமரவேல் முன்னிலை.. தவெக எழுச்சிக்கு பாமக, விசிக வாக்குகள் காரணமா?

Madurantakam By-Election: மரகதம் குமரவேல் முன்னிலை.. தவெக எழுச்சிக்கு பாமக, விசிக வாக்குகள் காரணமா?

2

ISRO வேலைவாய்ப்பு: மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

3

ரேஷன் கார்டு இருக்கா? இந்த வசதி இருப்பதை மறக்காதீங்க.. ONORC மூலம் கிடைக்கும் முக்கிய நன்மை

4

அமெரிக்காவின் திடீர் தடை... இந்திய ஊழியர்களுக்கு இனி கிரீன் கார்டு கிடைக்காதா? Explained

5

NZ ஒருநாள் தொடர்: 2 இந்திய அணிகள்.. புவி, ஷமிக்கு வாய்ப்பு? முழு விவரம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

நம்மில் பலருக்கு, எப்போது அவிச்ச முட்டையை சாப்பிட்டாலும், அதில் இருக்கும் மஞ்சள் கருவை சாப்பிடலாமா? வேண்டாமா? என்கிற டவுட் இருக்கும். அது குறித்த முழு விவரத்தையும், யாரெல்லாம் முட்டையை சாப்பிடக்கூடாது என்பது குறித்தும், இது குறித்து மருத்துவர்கள் சொல்வது என்ன என்பது குறித்தும் இங்கு தெரிந்து கொள்வோம்.

முட்டையின் மஞ்சள்கரு:

உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துகள், அவித்த முட்டையில் அடங்கி இருப்பதாக நம்பப்படுகிறது. நாம் எந்த உணவு சாப்பிட்டாலும், அதில் பல உணவுகளில் நிறைவுற்ற கொழுப்பு மற்றும் நிறைவுறா கொழுப்பு என இரண்டுமே இருக்கிறது.

நிறைவுற்ற கொழுப்புகள் எதில் உள்ளது:

  • கொழுப்பு நீக்கப்படாத பால்
  • வெண்ணெய்
  • பாலாடைக்கட்டி
  • தேங்காய் எண்ணெய்
  • தாவர எண்ணெய்கள்
  • சிவப்பு இறைச்சி
  • வறுத்த வேர்க்கடலை
  • சாக்லேட்
  • எண்ணெயில் முக்கி வறுத்து எடுக்கப்பட்ட உணவுகள்

நிறைவுறா கொழுப்புகள்:

  • அக்ரூட் பருப்பு
  • கடலை எண்ணெய்
  • ஆலிவ் எண்ணெய்
  • அவகேடோ பழம்
  • பாதாம் பருப்பு
  • பூசணி விதை
  • எள்
  • முட்டை
  • வால்நட்
  • சால்மன் மீன்
  • சூர்யகாந்தி எண்ணெய்

முட்டையில் என்ன இருக்கிறது?

நாம் தினந்தோறும் சாபிடும் வழக்கமான உணவுகளில், என்னென்ன கொழுப்பு சத்துகள் இருக்கிறதோ, அதே அளவிற்கான கொழுப்புதான் முட்டையின் மஞ்சள் கருவிலும் இருப்பதாக சில மருத்துவ ஆய்வுகள் விளக்குகின்றன.

மருத்துவர் சொல்வது என்ன?

முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிடலாமா வேண்டாமா என மருத்துவர் பரூக் அப்துல்லா என்பவர் ஒரு தனியார் ஊடகத்திற்கு சமீபத்தில் விளக்கியிருந்தார். அதன்படி, முட்டையை சாப்பிட சொன்னால் பல பேருக்கு சந்தேகம் வருகிறது என கூறிய அவர், அந்த முட்டையில் இருக்கும் மஞ்சள் கருவை தூக்கி போட்டு விடலாமா என தன்னிடம் கேட்பதாகவும், வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிடலாமா என தன்னிடம் கேட்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

உலகில், முட்டைப்பற்றி ஆராய்ச்சி செய்பவர்கள், முட்டை என்றால் முழு முட்டையத்தான் சொல்வதாக கூறுயிருக்கிறார். மேலும், முட்டையின் வெள்ளைக்கருவில் புரதசத்து இருப்பதாக கூறிய அவர், மஞ்சள் கருவை ஏன் சாப்பிட யோசிக்கிறீர்கள் என்று கேட்டால், அதில் அதிக கொலஸ்ட்ரால் இருப்பதாக அவர்கள் சொல்வதாக கூறியிருக்கிறார். கொழுப்பு, மனிதர்களுக்கு தேவையான விஷயம் என கூறும் அவர், அது விலங்குகள் மூலமாகத்தான் கிடைக்கிறது என தெரிவித்துள்ளார். உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு இதில் இருப்பதாக கூறிய அவர், அதில் விட்டமின் டி மற்றும் இ இருப்பதாக கூறியிருக்கிறார். முட்டையை முழுமையாக சாப்பிட்டு பழக வேண்டும் என்று கூறும் அவர், அதை தூக்கி எறிய வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.

யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?

ஒரு சில பேருக்கு, முட்டை சாப்பிட்டால் ஒவ்வாமை ஏற்படும். அவர்களுக்கு முட்டை சாப்பிட்டவுடன் உடலில் ரேஷஸ் வரும், வயிறு வலி வரும். அவர்கள் முட்டை சாப்பிட வேண்டாம்.

இதய நோய் இருப்பவர்கள், LDL கொழுப்பு இருப்பவர்கள், அவர்களின் டயட்டில் முட்டையை சேர்த்துகொள்ளாமல் இருப்பது நல்லது.

டைப் 2 டயாபட்டீஸ் இருப்பவர்கள், முட்டை கருவை சாப்பிடக்கூடாதாம். அவர்கள் அதனை எடுத்துக்கொண்டால், இன்சுலின் அளவை எதிர்த்து போராடும் திறனை அது மட்டப்படுத்தலாம்.

எத்தனை முட்டை சாப்பிடலாம்?

ஒரு வாரத்திற்கு, 7 முட்டைகளை சாப்பிடுவது ஹெல்தியான வயதானவர்களுக்கு நல்லது என்று கூறுகின்றனர். அதுவே அதிக கொலஸ்ரால் இருப்பவர்கள் 3-4 முட்டைகளை சாப்பிடலாம் என கூறுகின்றனர். 

Add Zee News as a Preferred Source
TAGS:
Health Tips