SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

97 வயதில் வான் சாகசம் செய்யும் சூப்பர் பாட்டி! இவங்கதான் ஒரிஜினல் ராணுவப்பட..

பிரிட்டனை சேர்ந்த ஒரு மூதாட்டி, விமான இறக்கையின் மீது நின்றபடி வான் சாகசம் புரிந்து சாதனை செய்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது குறித்த முழு தகவல் என்ன என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

Reported By Yuvashree M Written By Yuvashree M
Published: Aug 09, 2026, 10:33 AM IST | Updated: Aug 09, 2026, 10:47 AM IST
Join

“லேடீஸே ராணுவப்பட..” என்று சமீப காலமாக ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு மூதாட்டி பேசி வரும் வீடியோவை நாம் அனைவரும் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற ஏதேனும் ஒரு தளத்தில் ஷேர் செய்து வருகிறோம். அந்த மூதாட்டியின் வார்த்தையை பலிக்க வைக்கும் நோக்கில், இங்கும் ஒரு 97 வயது மூதாட்டி செய்திருக்கும் ஒரு சாகசம் குறித்துதான் ஊரே பேசி வருகிறது. இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

97 வயது மூதாட்டி சாதனை..

பிரிட்டனின், செல்டன்ஹாம் எனும் பகுதியில் வசித்து வருகிறார், பெட்டி ப்ரோமேஜ் எனும் மூதாட்டி. இவருக்கு 97 வயது ஆகிறது. ஆனால், இவர் செய்யும் சேட்டைகளை பார்த்தால் நீங்களே அத்தனை வயது என்று சொல்ல மாட்டீர்கள். இவர், நடுவானில் பறக்கும் விமானத்தின் மேல் இறக்கையில் பொருத்தப்பட்டிருக்கும் ஸ்பெஷலான ஆசனத்தில், தன்னை இணைத்துக்கொண்டு சாகச பயணங்களை மேற்கொள்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

சில தினங்களுக்கு முன், சினாரெஸ்டர் எனும் பகுதியில் இருக்கும் விமாஅ ஓடுதளத்தில் இருந்து புறப்பட்ட, ஏரோ-சூப்பர்பேடிக்ஸ் இருதள விமானத்தின் மீது நின்றபடி வான் சாகசத்தில் இந்த மூதாட்டி ஈடுபட்டார்.

வானில், மணிக்கு 150 மைல் வேகத்தில் வளைந்து நெளிந்து பறந்த அந்த விமானத்திலேயே, அவர் ஐந்து நிமிடங்களுக்கும் மேலாக ஆபத்தான முறையில் பயணித்திருக்கிறார். “இவ்ளோ ரிஸ்க் தேவையா பாட்டி?” என நமக்கு கேட்க தோன்றினாலும், இவருடைய இந்த துணிச்சலையும், தைரியத்தையும் பாராட்டத்தான் தோன்றுகிறது.

இது புதுசு கிடையாது!

மேலே படித்த விஷயத்தை பார்த்து ஆச்சரியப்பட்டு விடாதீர்கள். இந்த பாட்டியை பற்றிய இன்னும் நிறைய தகவல்கள் உங்களை ஆச்சரியப்படுத்த காத்துக்கொண்டிருக்கிறது. இதே மூதாட்டிதான், 4 ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய 93 வயதில் இதே போன்ற ஒரு சாதனையை படைத்திருக்கிறார். அது மட்டும் அல்லாது கின்னச் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்திருக்கிறார். தற்போது 97 வயதில், தான் முன்னதாக செய்த சாதனையை தானே இந்த சாதனை மூலம் முறியடித்திருக்கிறார்.

நோய் பாதிப்பு..!

இந்த சாதனையை செய்திருக்கும் மூதாட்டிக்கு, 2025ல், திடீரென பக்கவாத நோய் பாதிப்பு வந்திருக்கிரது. இதனால் இவருக்கு பேச்சுத்திறனு, உடல் இயக்கமும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், தீவிர சிகிச்சைக்கு பிறகு குணமடைந்த இவர், தன்னுடைய உடல்நல பாதிப்பை பொருட்படுத்தாமல், இந்த சாகச முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்.

நிதி திரட்ட..

தன்னுடைய சாதனை குறித்து, மூதாட்டி பெட்டி ப்ரோமேஜ் பேசியிருந்தார். அப்போது, வயதாகிவிட்டால் தனக்கு சும்மா இருக்க பிடிக்காது என்று கூறிய அவர், இதனால் வாழ்க்கையே சலித்து விடும் என்றும், தனக்கு கண் மங்கலாகி விட்டதால் கார் ஓட்ட முடியாது என்றும், தன்னால் என்ன செய்ய முடியுமோ அதை செய்ய விரும்புகிறேன் என்றும் கூறியிருக்கிறார். இன்னும் 2 ஆண்டுகள் உயிருடன் இருந்தால், மீண்டும் ஒருமுறை வானில் பறப்பேன் என்று அந்த மூதாட்டி தெரிவித்துள்ளார்.

இந்த மூதாட்டி, முதன்முறையாக வான் சாகசத்தை தொடங்கியது எப்போது தெரியுமா? தன்னுடைய 87வது வயதில். அவர் இப்போது வரை 6 முறை விமான இறக்கையில் பயணித்திருக்கிறார். இவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனையான செல்டன்ஹாம் பொது மருத்துவமனையின் பக்கவாத பிரிவுக்கு நிதியுதவி திரட்டும் நோக்கில் இந்த சாகச பயணத்தை மேற்கொண்டிருப்பதாக அவர் தெரிவித்து இருக்கிறார். 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.

ZEENEWS TRENDING STORIES