+2 படித்தவரா? ஆதார் மையத்தில் வேலை.. விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!
Aadhaar Jobs: நாடு முழுவதும் ஆதார் மையத்தில் காலியாக உள்ள 432 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். இன்று இரவு 12 மணிக்குள் உடனே ஆதார் மைய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Aadhaar Jobs: நாடு முழுவதும் ஆதார் சேவை மையங்கள் செயல்பட்டு வருகிறது. ஆதார் சேவை மையத்தில் பல லட்சம் பேர் வேலை செய்து வருகின்றனர். மத்திய அரசின் மின்னணு மற்ணுறும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு வேலை, கைநிறைய சம்பளவம் என்பதால் ஆதாரில் வேலை பார்க்க பலரும் காத்திருக்கின்றனர். இந்த நிலையில், ஆதார் சேவை மைய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஆதார் சேவை மையத்தில் வேலை
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஆதார் சேவை மையத்தில் ஆப்ரேட்டர் பணிக்கு காலிப் பணியிடங்கள் இருக்கிறது. நாடு முழுவதும் மொத்தம் 432 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. நாடு முழுவதும் ஆதார் மேற்பார்வையாளர்/ஆபரேட்டர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். இன்று இரவு 12 மணிக்குள் விண்ணப்பிக்கும் அவகாசம் நிறைவடைகிறது.
பணியிடங்கள் விவரம்
தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் மேற்பார்வையாளர்/ஆபரேட்டர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அதன்படி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒரு ஆபரேட்டர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மேலும், டெல்லி, மத்திய பிரதேசம், உத்தரகாண்ட், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், பீகார், புதுச்சேரி, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
| மாநிலம் | காலிப் பணியடங்கள் விவரம்
|
| ஜார்க்கண்ட் | 3 பணியிடங்கள் |
| ஜம்மு காஷ்மீர் | 7 பணியிடங்கள் |
| தமிழ்நாடு | 1 பணியிடங்கள் |
| டெல்லி | 2 பணியிடங்கள் |
| தெலங்கானா | 5 பணியிடங்கள் |
| மத்திய பிரதேசம் | 4 பணியிடங்கள் |
| உத்தரகாண்ட் | 1 பணியிடங்கள் |
| புதுச்சேரி | 1 பணியிடங்கள் |
| ராஜஸ்தான் | 1 பணியிடங்கள் |
| பீகார் | 9 பணியிடங்கள் |
கல்வித்தகுதி, சம்பளம் விவரம்
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பப்படுபவர்கள் 12ஆம் வகுப்பு தேர்ச்சி, ITI அல்லது பாலிடெக்னிக் டிப்ளமோ முடித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், UIDAI அங்கீகரித்த Aadhaar Operator / Supervisor Certificate பெற்றிருப்பது கட்டாய தகுதியாகும்.
இந்த பணிக்கு 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.25,000/- வரை சம்பளம் வழங்கப்படும். தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.